மக்களே, கந்தர் அலங்காரப் பதிவுகள், கொஞ்ச நாள் பணி மிகுதியால் இல்லாமல் இருந்தது! மன்னிக்கவும்! அலங்காரம் பதிவில் தான் இல்லையே தவிர, முருகனிடம் இருந்ததே!
அலங்காரத்துக்கே அலங்காரம் சேர்ப்பவன் அல்லவா அழகன் முருகப் பெருமான்! அதான் இன்று அலங்காரம் செய்ய வந்து விட்டான்!
அம்மாவின் வேண்டுகோளின் படி எழுதத் துவங்கிய வலைப்பூ அல்லவா?
"என்னடா கொஞ்ச நாளா ஆளைக் காணோம்"-ன்னு ஒரு சின்ன அதட்டல் அலங்காரம் நடந்துச்சி! அடியேன் அலங்காரம் துவங்கி விட்டேன் :))
காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே-ன்னு சொன்னது யாரு? = பட்டினத்தாரா? அருணகிரியா??
பட்டினத்தார்-ன்னு நிறையப் பேரு சொல்வீங்க! இல்லை அருணகிரியார்-ன்னு நான் சொல்லறேன்! ஹிஹி! மேற்கொண்டு படிங்க!
* அருணகிரியார் பற்றி அப்பப்போ முந்தைய பதிவுகளில் சொல்லி இருக்கேன்!
* பட்டினத்தார் பற்றி உங்களுக்கு ஏற்கனவே கொஞ்சம் தெரியும்-ன்னு நினைக்கிறேன்!
அது என்ன - "அருணகிரிக்கு இல்லை! பட்டினத்தாருக்கு உண்டு!"?இருவருமே சித்தர்கள் தான்! இருவருக்குமே அருள் உண்டு தான்! அப்புறம் என்ன இவருக்கு இல்லாதது, அவருக்கு உண்டு? கண்டு பிடிங்க பார்ப்போம்! :)
அருணகிரி காலத்தால் முந்தியவரா? இல்லை பட்டினத்தார் முந்தியவரா? இல்லை இருவரும் ஒரே காலமா?
ஏன் கேட்கிறேன் என்றால்,
அருணகிரிநாதர், பட்டினத்தார் பாடிய "அதே வரிகளைத்" தன் பாடலில் வைக்கப் போகிறார்! = காதற்ற ஊசியும் வாராது காண், கடைவழிக்கே!
ஆச்சரியமா இல்லை?
சென்ற பதிவில் பெரியாழ்வாரின் "மூவடி-தாவடி" வரிகளை அப்படியே எடுத்து வைச்சாரு அருணகிரி!
இந்தப் பதிவில் பட்டினத்துப் பிள்ளையின் "காதற்ற ஊசி" வரிகளை அப்படியே எடுத்து வைக்கறாரு!
நிறைய புலவர்கள் இப்படிச் செய்ய மாட்டார்கள்!* சில பேரு தன்மானம், சுய கெளரவம் எல்லாம் பார்ப்பாங்க!
* சில பேரு "காப்பி அடிச்சிட்டாருப்பா"-ன்னு தங்களைப் பேசிடப் போறாங்களோ-ன்னு பயப்படுவாங்க!
* சில பேரு "இறை விஷயமே ஆனாலும், அவன் சொன்னதை நாம எதுக்குச் சொல்லணும்? நாம தனியா சொல்லுவோம்"-ன்னு கொஞ்சம் கெத்து காட்டுவாங்க!
ஆனால் அருணகிரி அப்படி அல்ல!
"இறைவனா? ஈகோவா?" என்றால்...அருணகிரிக்கு "இ" தான்! "ஈ" அல்ல!ஆண்டாள்-பெரியாழ்வார் கூட அருணகிரி போலவே தான்!
திருக்குறள், சிலப்பதிகாரத்தில் இருந்தெல்லாம் எடுத்து, அப்படி அப்படியே போட்டுருவாங்க!
இறைவனை நினைந்து "உண்மையாலுமே" ஆழ்பவர்கள் அனைவரும், சக அடியார்களின் நூல்களையும், வாக்கையும், கருத்தையும் மிகவும் மதிப்பார்கள்! தங்கள் நூலை மட்டுமே பிடிச்சித் தொங்கிக் கொண்டு இருக்க மாட்டார்கள்!
எது கேட்டாலும், "நான் அந்த நூலில் அப்பவே சொல்லி இருக்கேனே, இந்த நூலில் இப்பவே சொல்லி இருக்கேனே" என்பது போன்ற வாசகங்கள் எழாது! மாறாக சக அடியவர்களை வெளிப்படையாகவே தம் நூலிலும் குறிப்பிடுவார்கள்! இது தான்
அடியார் லட்சணம்!
"இறைவனா? ஈகோவா?" என்றால்...அவர்களுக்கு "இ" தான்! "ஈ" அல்ல!இதை இங்கு சொல்லக் காரணம் உண்டு! அருணகிரிநாதர் பல திருப்புகழ்களில் "பெருமாளே" என்று தான் முடிப்பார்! முருகப் பெருமானை அவர் ஏன் பெருமாளே என்று குறிப்பிட வேண்டும்?-ன்னு சில பேரு முன்பே கேட்டிருந்தாங்க!
அதற்கு விடை அறிந்து கொள்ள, அருணகிரியின் இந்த "
அப்படியே எடுத்தாளும் அடியார் சுபாவம்" மிக உதவியாய் இருக்கும்! இப்போ ஞாபகம் மட்டும் வச்சிக்குங்க! இன்னொரு நாள் பார்ப்போம்!