கந்தரலங்காரம், ஒரு மாத சூறாவளி(அ)இடைவெளிக்குக்குப் பின் மீண்டும் தொடர்கிறது!:) "சும்மா" இருப்பது எப்படி? என்பது தான் அடுத்த பதிவு-ன்னு முருகனுக்குத் தெரியும் போல! அதனால் தான் என்னைய ஒரு மாசம் பூரா "சும்மா" இருக்க வச்சிட்டான்! வாங்க பார்க்கலாம்!:)
"சும்மா" இருக்கறது-ன்னா என்ன? பதிவு போடாம, பின்னூட்டம் இடாம, பதிவு படிக்காம, தமிழ்மணம் பக்கமே வராம, இப்படிப் பல வித "சும்மா" இருத்தல்களா? ஹிஹி!
* "சும்மா" இருக்கும் திறம் அரிதே! - என்று தாயுமானவர் பாடுகிறார்!
* "சும்மா" இரு, சொல்லற என்றலுமே! அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! - என்று இதே அருணகிரி அநுபூதியில் சொல்றாரு!
"சும்மா" இரு-ன்னு சொன்ன ஆன்மீகவாதிகளும் சும்மா இருக்க வேணாமா? அதை விட்டுட்டு எப்படி அநுபூதி பாடலாம்? அப்படின்னா அவிங்களும் "சும்மா" இல்லை! ஏதோ "சும்மா"-வைப் பற்றிச் சும்மாச் சொல்லிட்டுப் போயிட்டாங்க! அப்படியா என்ன? :)
ஹா ஹா ஹா! இன்னிக்கி அலங்காரத்தைச் "சும்மா" பாக்கலாம் வாங்க! :)

43 comments:
வழக்கம் போலவே கலக்கலான விளக்கவுரை, அவரவர் அறிந்த அறியும் முறையில்!
முருகனருள் முன்னிற்கும்!
"சும்மா இரு " - "அற்று / எதுவும் அற்று இரு" என்ற பொருளில் வராதா ?
நல்லா வந்திருக்கு கே.ஆர்.எஸ்!
போன பகுதியில் என்ன உபதேசம் என்ற கேள்விக்கு, இப்போ விடை சொல்லியாச்சு போல இருக்கு!
அட,
நண்பர்கள் இருவரும் சேர்ந்து வந்திருக்காங்க!
SK, சிங்கைக்குப் போயிருக்கீங்களா என்ன? :)
//VSK said...
வழக்கம் போலவே கலக்கலான விளக்கவுரை, அவரவர் அறிந்த அறியும் முறையில்!//
நன்றி SK ஐயா!
அவரவர் தமதம அறிவறி வகைவகை அல்லவா? :)
//முருகனருள் முன்னிற்கும்!//
உங்கள் அருளும் முன் நிற்கும்!
உங்க பின்னூட்டம் தான் முன் நின்றதே! :)
//கோவி.கண்ணன் said...
"சும்மா இரு " - "அற்று / எதுவும் அற்று இரு" என்ற பொருளில் வராதா ?//
வாங்க-ண்ணா!
1. எதுவும் அற்று இரு என்றால் என்ன?
2. அப்படி இருக்க இயற்கையாக இயலுமா?
3. அப்படியே இருந்தாலும், தொடர்ந்து அப்படி இருக்க முடியுமா?
4. எது வரை அப்படி "அற்று" இருக்க வேண்டும்?
//வாங்க-ண்ணா!
1. எதுவும் அற்று இரு என்றால் என்ன?
2. அப்படி இருக்க இயற்கையாக இயலுமா?
3. அப்படியே இருந்தாலும், தொடர்ந்து அப்படி இருக்க முடியுமா?
4. எது வரை அப்படி "அற்று" இருக்க வேண்டும்?//
பற்றெதுவும் அற்று இருந்தாலே மற்றெது(வு)ம் அற்றுவிடும் !
சரியா ?
//எதுவும் அற்று இரு//
அறிவியல் வழியில் பாருங்க!
எதுவும் அற்று ஒரு பொருள் இருக்க முடியுமா?
Every object has its own state! - அப்படின்னு இருக்கே!
பற்று அற்று இரு ஓக்கே! எதுவும் அற்று என்னும் போது பக்தியும் அற்று இருக்க வேண்டுமா?
SK, ஜீவா
கொஞ்சம் விளக்குங்களேன்!
திருமூலரின் திருமந்திரம் அல்லது நம்மாழ்வாரின் திருவாய்மொழி தெரிஞ்சவங்க கோவியின் கேள்விக்கு விளக்கம் சொல்லி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்!
எதுவும் இல்லாத நிலை தான் சும்மா இருத்தலா?
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்துள் மறைந்தது மாமத யானை
இதை வச்சி விளக்கலாமா?
//ஜீவா (Jeeva Venkataraman) said...
நல்லா வந்திருக்கு கே.ஆர்.எஸ்!//
நன்றி ஜீவா!
மேலே நீங்க வந்து, "சும்மா-வை", சும்மா பிரிச்சி மேயுங்களேன்!
//போன பகுதியில் என்ன உபதேசம் என்ற கேள்விக்கு, இப்போ விடை சொல்லியாச்சு போல இருக்கு!//
:)
ஆமாம்!
இந்த அலங்காரச் செய்யுள் இரண்டும் ஜோடிச் செய்யுள்! கேள்வி ஒன்றில், பதில் ஒன்றில்!
அதான் சென்ற பதிவில், அருணகிரியாருக்கு என்ன உபதேசம் ஆனது-ன்னு அதைக் கேள்வியா வச்சேன்!
பதில் பின்னால தொக்கி நிற்குது-ன்னும் சொன்னேன்!
அந்தப் பதிவில் அதைப் புரிந்து கொண்டு கொஞ்சம் "சும்மா" இருந்திருந்தால்? :))))
//எதுவும் இல்லாத நிலை தான் சும்மா இருத்தலா?//
இதெல்லாம் சந்யாசிகள் சொல்வது, விகர்மம் அதாவது கர்ம மற்ற நிலை என்றெல்லாம் சொல்லுவார்கள். அப்படிச் சொல்லும் சந்யாசிகள் கூட தங்கள் உழைப்பில் கிடைக்கும் உணவை உண்ணுவதில்லை. பிறருடைய உழைப்புதான் அவர்களுக்கு உணவாகும், பிறகு எப்படி தன்னை கர்மா அற்றவர் என்று சொல்ல முடியும்.
பற்றற்று இருத்தல் - அனைவர் மீதும் ஒன்று போலவே அன்பு செலுத்துவது ஆகும். இவர்கள் நெருக்கமானவர்கள் கூடுதல் அன்பு, நெருக்கம் குறைந்தவர்க்கள் குறைவான அன்பு என்று இருந்தால் அங்கு பற்று இருக்கும். அனைவரின் பால் ஒரே மாதிரியான அன்பு பற்றற்ற நிலை என்பதாக புரிகிறது. இறைவன் பற்றறவன் என்று சொல்கிறோம். அப்படி என்றால் இறைவன் அன்பில்லாதவன் என்று பொருளா ?
பற்றற்ற நிலை என்றால் எதுவும் அற்ற நிலை என்று நான் சொல்ல மாட்டேன். செய்யும் செயல்களில் ஆதாயம் தேடாமல் இருப்பதே 'பற்றற்ற' என்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.
@கோவி அண்ணா
இப்ப நீங்க அடி வாங்கப் போறீங்க! :)
முருகனருள் சஷ்டிப் பதிவில் பண்ணா மாதிரியே தாவினா எப்படி?
ஒங்களால "சும்மாவே" இருக்க முடியாதா? :)
//பற்றற்ற நிலை என்றால் எதுவும் அற்ற நிலை என்று நான் சொல்ல மாட்டேன்//
சும்மா இருக்கும் நிலை பற்றித் தானே பேச்சு?
சும்மா இருத்தல்=எதுவும் அற்று இருத்தல்-ன்னு நீங்க தானே சொன்னீங்க?
இப்போ திடீர்-ன்னு பற்று அற்று இருத்தல்-ன்னா எப்படி?
பற்று அற்று-ன்னா பற்று மட்டுமே அற்று! அன்பு இருக்கும்! பற்றற்றான் பற்றினை! நீங்களே சொல்லிட்டீங்க!
பற்று அற்று இருத்தல் ஒரு பரிமாணம்!
"எதுவும்" அற்று இருத்தல் இன்னொரு பரிமாணம்!
நாம இங்கே பேசுவது சும்மா இருத்தல்! "எதுவும்" அற்று இருத்தல்!
//ஒங்களால "சும்மாவே" இருக்க முடியாதா? :)//
சத்தியமாக இனி அப்படி இருக்கிறேன். யாருக்கும் பிடிக்க வில்லை என்பது கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்தது. பெர்முடா முக்கோணம் என்று இன்னொரு கதை எழுதும் சிரமத்தை யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை.
மாதவிப் பந்தலுக்கு வருவேன் !
அருமையான விளக்கம் / உதாரணம் கண்ணா. இந்தப் பதிவைப் படிக்கும்போது கபீரன்பன் அவர்கள் எழுதிய பழையதைத் தின்று சும்மா கிட என்ற பதிவு நினைவு வந்தது. ஒருவனுடைய ஆன்மீக நிலை உயர உயர, அவன் செய்ய வேண்டிய செயல்கள் குறைந்து கொண்டே வரும் என்பார், ஸ்ரீ ராமகிருஷ்ணர். அதைத்தான் அருணகிரியாரும் சொல்கிறார் போலும்.
வர்ணனையும் (இந்தளப் பெண், மால்வரை தோள் அண்ணல்) ரொம்பவே நல்லாருந்துச்சு :)
//எல்லாம் அற, என்னை இழந்த நலம்
= இதுவே பரிபூர்ண சரணாகதி!//
அருமை, அருமை.
இன்று அன்னாபிஷேக தரிசனம் பெறுங்கள் http://natarajar.blogspot.com/2008/11/blog-post.html
சும்மா இரு பதிவைப்படித்துவிட்டு சும்மா இருக்கமுடியவில்லை!
அக்குவேறு ஆணிவேறா பிரமாதமா எழுதினத எல்லாம் படிச்சேன்...அலங்காரத்துக்கு இங்கெ நான் அடிக்கடிவரலேன்னாலும் அதுபிடிச்சவிஷயம் தான், அலங்கரிப்பது அழகுபடுத்துவதுதானே?!
//
"சும்மா இரு" என்பதற்கான பொருளை "நிர்விகல்ப சமாதி" என்றே பெரியோர்களும், ஆன்றோர்களும் இந்தப் பாடலுக்கு விளக்கமாகத் தருகின்றனர்!
விருப்பு-வெறுப்பு, இருள்-ஒளி, இன்பம்-துன்பம் என்ற இரட்டைகளில் சிக்கிக் கொள்ளாத நடுநிலை! இது மிகவும் சரியான விளக்கம் தான்! தத்துவ-ஞான ரகசியம்!
//
சும்மா இருக்கமுடியாமல் தெய்வத்தின் துணையை நாடிய தாயுமானவர் பாட்டு இது........
"சொல்லால் மூழ்கிலோ சுகம் இல்லை
மௌனியாய்ச்சும்மா இருக்க அருளாய்
சுத்த நிர்க்குணமான பரதெய்வமே பரம் ஜோதியே சுகவாரியே!"
சிந்தையை அடக்கிச் சும்மா இருப்பது நம்மால் ஆகிறகாரியமா என்ன?
சும்மா என்ற சொல்லில் அப்படி என்ன விசேஷம்?
அஹம்காரம்
இதை வேறுபொருளில்கொள்ளக்கூடாது அவ்வாறல்ல...'நான் 'எனும் தனமைதான் அஹங்காரம்.
இந்த அஹம்காரமே ஒட்டுமொத்தத்தில்
பிறவியெடுத்துள்ள ஆன்மாவை இறைவனிடத்திலிருந்து தனிமைப்படுத்திவிடும்.
'புத்தி'என்பது பகுத்து அறிவது, உணர்வுகளை அலசுவது, நல்லது கெட்டது நியாய அநியாயங்கள் போன்றவை, மனசாட்சி, சித்தாந்தங்கள் தீர்மானங்கள் தர்க்கங்கள் நிச்சயங்கள் போன்றவற்றை நடத்தும்.
நாம் அறிவு பூர்வமாகச்செய்யவேண்டிய நடவடிக்கைகளை ஆணைகளாக்கி மனசுக்கு அனுப்பும். சில சமயம் உணர்ச்சி பூர்வமான தாக்கங்களுக்கு புத்தி அடங்கிவிடும்.
ஆனால் புத்திக்கு கட்டுப்படுத்திக்கொள்ளும் திறனும் உண்டு.
உள்ளத்தில் எப்போதும் இரண்டு செயல்கள் நடந்தவண்ணமே உள்ளன.
ஒன்று நினைப்பு மற்றது மறப்பு
மறப்பு என்பது இறைவன் நமக்குக்கொடுத்தவரப்ரசாதம்தான்.
'சொல் அற சும்மா இரு' எனும் முருகனின் உபதேசம் அந்த மாபெரும் பொருளை அறியமுடியவில்லை என்று அருணகிரி கூறுகிறார். எண்ணங்களை அற்றுப்போகச்செய்ய வேண்டுமானால் முதலில் கைவரியை அடக்கி மத்யமாவை அடக்கி பஸ்யந்தியையும் அடக்கி முடிவில் பரா நிலையில் ஒன்றுமே எழும்பாமல் நிறுத்தவேண்டும்.
அதே நேரத்தில் மனஸ் எனப்படும் உள்ளப்பகுதி ஒடுங்கிவிடும். ஏனெனில் எண்ணங்கள் எதுவும் அங்கு நிலவாது. புத்தி சித்தம் அஹம்காரம் ஆகிய மற்றவையும் இல்லாமல் போய்விடும் மனசு அழிந்த நிலை இதுதான். இந்த நிலையில் உணர்வுகள் இருக்கமாட்டா. பதிப்பிக்கப்படவும் மாட்டாது.
இதுதான் நினைவும் மறப்பும் அற்ற நிலை.
நினைப்பு இருந்தால்தானே மறதி ஏற்படுவதற்கு?
இதைத்தான் சும்மா இருத்தல் என்பார்கள்.
சும்மா இருக்கும்தன்மைஎப்படீஇருக்கும் என்பதைச்சொல்லமுடியாது.
கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லை
நினைப்பும் இல்லை
இரவும் இல்லை பகலும் இல்லை
அது ஒரு TWILIGHT ZONE!
*******************************************
அடேயப்பா சும்மா பற்றி சும்மா ஒருநாள் ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் பேசும்பொது கேட்டு எடுத்துக்கொண்ட குறிப்புகளை சும்மா அப்படியே டைரில எழுதிவச்சதை சும்மா இப்போ நேரம்கிடைச்சிதேன்னு இங்க ஆன்மீகசூப்பர்ஸ்டார் பதிவில் பின்ன்னூட்டமென இட்டுவிட்டேன்!
//கோவி.கண்ணன் said...
//ஒங்களால "சும்மாவே" இருக்க முடியாதா? :)//
சத்தியமாக இனி அப்படி இருக்கிறேன்!
யாருக்கும் பிடிக்க வில்லை என்பது கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்தது//
ஹா ஹா ஹா!
அய்யோ, அய்யோ!
யாரு சொன்னா அப்பிடி? தாவாதீங்க-ன்னு தான் சொன்னேன்!
சரி இப்போ, நீங்களே பதில் சொல்லுங்க!
* பற்று அற்று இருத்தல்-ன்னா என்ன?
* "எதுவும்" அற்று இருத்தல்-ன்னா என்ன?
//மாதவிப் பந்தலுக்கு வருவேன் !//
வரலீன்னா வந்து அடிப்பேன், மாயனின் புல்லாங்குழலாலே! :)
அண்ணே.. ஒரு தடவை படிச்சேன்.. ஆனாலும் என் மரமண்டைல ஏற மாட்டேங்குது.. நல்லா படிச்சுட்டு, புரிஞ்சிட்டு வந்து பின்னூட்டம் போடுறேன்.. இது வருகைப் பதிவு மட்டுமே. :)
//இகல்-ன்னு வரும் குறள் என்ன?//
எனக்கு ஞாபகம் உள்ள குறல் இதுதான்.. முதல்வன் படத்துல ரகுவரன் சொல்வாரே.. :)
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல் வேந்தர் சேர்ந்தொழுகு வார்
//தோள் இரண்டும் மலை போல் குவிந்து இருக்கு! தினமும் ஜிம்-முக்குப் போய் Arm Stretches பண்ணுவான் போல முருகன்! :) //
அதே அதே.. நான் நிறைய தடவை இப்புடி யோசிச்சு பாத்துருக்கேன்.. அத விட பெரிய காமெடி, சின்னக் பையனா இருக்கும் போது.. மத்த பையங்ககிட்ட.. தேவர்கள் எல்லாம் பாற்கடல்ல இருந்து வெள்ளி டம்ளர்ல பால் எடுத்து குடிப்பாங்கன்னு சொல்வேன்..
//ஏதாச்சும் புரிஞ்சிச்சா?
ஹா ஹா ஹா! ஏதோ நாதநாமக்கிரியை புரிஞ்சுது, கொவ்வைச் செவ்வாய் புரிஞ்சுது, மால் வரை தோள் புரிஞ்சுது! நல்லா இருந்திச்சி வர்ணனை! :) //
இதுவரை எந்த குழப்பமும் இல்லை..
//நடக்க வேண்டியதை முன்னுக்குத் தள்ளி,
"நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால்.....
குதர்க்கம் குறையும்! "சும்மா" இருப்போம்! //
ரவி அண்ணா விளக்கங்கள் அருமை.. முதலில் நான் தான் குழப்பிக் கொண்டேன்.. சும்மா இருப்பது மட்டும் கஷ்டமன்று.. சும்மா இர்த்தல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதும் கஷ்டம் தான்னு நினைச்சுட்டேன்..
சரணம் சரணம் சண்முகா சரணம்! ஹரி ஓம்!
//கவிநயா said...
அருமையான விளக்கம் / உதாரணம் கண்ணா//
நன்றி-க்கா
//இந்தப் பதிவைப் படிக்கும்போது கபீரன்பன் அவர்கள் எழுதிய பழையதைத் தின்று சும்மா கிட என்ற பதிவு நினைவு வந்தது//
கபீரன்பன் தத்துவ மார்க்கத்தை நுட்பமா எடுத்துக் காட்டியிருந்தாரு-க்கா!
//ஒருவனுடைய ஆன்மீக நிலை உயர உயர, அவன் செய்ய வேண்டிய செயல்கள் குறைந்து கொண்டே வரும் என்பார், ஸ்ரீ ராமகிருஷ்ணர். அதைத்தான் அருணகிரியாரும் சொல்கிறார் போலும்//
கர்மானுஷ்டானங்கள் குறையும்-ன்னு தப்பா பொருள் எடுத்துக்கிட்டு கோபிச்சிக்கப் போறாங்க! :)
உயர உயர, மலையின் கீழ் பொருட்கள் எல்லாம் சிறுசா தெரிவது இயற்கை தானேக்கா?
//வர்ணனையும் (இந்தளப் பெண், மால்வரை தோள் அண்ணல்) ரொம்பவே நல்லாருந்துச்சு :)//
இந்தளப் பெண் பற்றி இன்னும் நிறைய எழுதணும்-னு நினைச்சேன்! அப்பறம் "சும்மா" இருந்துட்டேன்! :)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//
இந்தளப் பெண் பற்றி இன்னும் நிறைய எழுதணும்-னு நினைச்சேன்! அப்பறம் "சும்மா" இருந்துட்டேன்! :)
///
ராகவ்!!! கவனிச்சியா உங்க அண்ணாத்த என்ன சொல்லறார்னு?:):)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//
இந்தளப் பெண் பற்றி இன்னும் நிறைய எழுதணும்-னு நினைச்சேன்! அப்பறம் "சும்மா" இருந்துட்டேன்! :)
///
ராகவ்!!! கவனிச்சியா உங்க அண்ணாத்த என்ன சொல்லறார்னு?:):)
//Kailashi said...
//எல்லாம் அற, என்னை இழந்த நலம்
= இதுவே பரிபூர்ண சரணாகதி!//
அருமை, அருமை//
யாராச்சும் சரணாகதி="சும்மா" இருத்தல் பற்றிப் பேசுவார்கள்-ன்னு நினைச்சேன்! நீங்க லைட்டா ஆரம்பிச்சி இருக்கீங்க! பார்ப்போம், வேற யாராச்சும் வராங்களா-ன்னு! :)
//இன்று அன்னாபிஷேக தரிசனம் பெறுங்கள்//
கண்டேன் அவர் திரு அன்னம்! :)
//ஷைலஜா said...
சும்மா இரு பதிவைப்படித்துவிட்டு சும்மா இருக்கமுடியவில்லை!//
:)
யக்கா! நீங்க இட்டதும் சூப்பர் பதிவு-க்கா! நன்றி! :)
//அலங்காரத்துக்கு இங்கெ நான் அடிக்கடிவரலேன்னாலும் அதுபிடிச்சவிஷயம் தான்//
பெண்கள் அலங்காரம் பிடிக்கலை-ன்னும் சொல்வாங்களோ?
என்ன கொஞ்சம் சீக்கிரம் பண்ணிக்கிட்டு கிளம்பணும்! :)
//மௌனியாய்ச் சும்மா இருக்க அருளாய்
சுத்த நிர்க்குணமான பரதெய்வமே//
மெள(னி) ?
ஸ்பெல்லிங் மிஷ்டேக் எல்லாம் ஒன்னும் இல்லியே? :)))
//இந்த அஹம்காரமே ஒட்டுமொத்தத்தில்
பிறவியெடுத்துள்ள ஆன்மாவை இறைவனிடத்திலிருந்து தனிமைப்படுத்திவிடும்//
எனக்கு ஒன்னு புரியலை-க்கா! கேள்வியாக் கேக்குறேன்! அன்பர்கள் யாராச்சும் பதில் சொல்லுங்க!
1. அஹம் பிரம்மாஸ்மி-ன்னு அகத்தைத் தான் பார்க்கச் சொல்கிறோம்! அப்புறம் ஏன் அஹங்காரம் ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்? (அகங்காரம்=ஆணவத்தைச் சொல்லவில்லை! அஹங்காரத்தைச் சொன்னேன்)
2. அஹங்காரம் என்றால் என்ன? மமகாரம் என்றால் என்ன?
//'சொல் அற சும்மா இரு' எனும் முருகனின் உபதேசம் அந்த மாபெரும் பொருளை அறியமுடியவில்லை என்று அருணகிரி கூறுகிறார்//
அறிய முடியவில்லை-ன்னு சொல்றாரே தவிர, "சும்மா" இருக்க முடியலை-ன்னு சொல்லலை பாருங்க! அதான் முக்கியம்! அதான் பதிவில் முக்கியமாக் கோடிட்டுக் காட்டினேன்!
அறிய முடியவில்லை என்றாலும் அவரால் "சும்மா" இருக்க முடிந்தது!
அதுக்கும் காரணம், முருகனை முன்னுக்குத் தள்ளித் தன்னைப் பின்னுக்குத் தள்ளியதால் தான்! அது தான் பதிவின் மையச் சிந்தனை!
முருகனருள் "முன்" நிற்கும் என்று சொல்லும் போதெல்லாம், நாம் நம்மைப் பின்னே தள்ளி, முருகனை மெய்யாலுமே முன்னே தள்ள முயற்சிகள் செய்ய வேணும்!
//எண்ணங்களை அற்றுப்போகச்செய்ய வேண்டுமானால் முதலில் கைவரியை அடக்கி மத்யமாவை அடக்கி பஸ்யந்தியையும் அடக்கி முடிவில் பரா நிலையில் ஒன்றுமே எழும்பாமல் நிறுத்தவேண்டும்//
யக்கா-அப்படின்னா என்னக்கா?
மத்யமா, பஸ்யந்தி எல்லாம் ஒன்னும் தெரியாது! பாசந்தி தெரியும்! ஜாலியாக் குடிப்பேன்! :))
//மனசு அழிந்த நிலை இதுதான். இந்த நிலையில் உணர்வுகள் இருக்கமாட்டா. பதிப்பிக்கப்படவும் மாட்டாது.இதுதான் நினைவும் மறப்பும் அற்ற நிலை//
:)
இது யோகிக்களுக்கான "சும்மா" இருத்தல்!
நமக்கான "சும்மா" இருத்தலைப் பதிவில் சொல்லிப்பிட்டேன்-பா!
//நினைப்பும் இல்லை இரவும் இல்லை பகலும் இல்லை
அது ஒரு TWILIGHT ZONE!//
பூஜ்ய ஸ்ரீ ஷைலாஜானந்த மகரிஷிகள் திருவடிகளே சரணம்! :))
//அப்படியே டைரில எழுதிவச்சதை சும்மா இப்போ நேரம்கிடைச்சிதேன்னு இங்க ஆன்மீகசூப்பர்ஸ்டார் பதிவில் பின்ன்னூட்டமென இட்டுவிட்டேன்!//
:)
ஆன்மீக சூப்பர் ஸ்டார் என்னிக்குமே குமரன் தான்!
அடியேன் சூப்பர் ஸ்டார் அல்ல! ஸ்வாதி ஸ்டார்! :)
//Raghav said...
அண்ணே.. ஒரு தடவை படிச்சேன்.. ஆனாலும் என் மரமண்டைல ஏற மாட்டேங்குது..//
அப்படின்னா "சும்மா" இருக்கீங்க-ன்னு அர்த்தம் ராகவ்! :)
//நல்லா படிச்சுட்டு, புரிஞ்சிட்டு வந்து பின்னூட்டம் போடுறேன்.. இது வருகைப் பதிவு மட்டுமே. :)//
ஹா ஹா ஹா!
//Raghav said...
எனக்கு ஞாபகம் உள்ள குறல் இதுதான்.. முதல்வன் படத்துல ரகுவரன் சொல்வாரே.. :)
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல் வேந்தர் சேர்ந்தொழுகு வார்//
குறள் வளர்த்த ரகுவரா நீ வாழ்க! நின் புகழ் வாழ்க!
//Raghav said...
தேவர்கள் எல்லாம் பாற்கடல்ல இருந்து வெள்ளி டம்ளர்ல பால் எடுத்து குடிப்பாங்கன்னு சொல்வேன்..//
மன்மதனும் ரதியும் மட்டும் ஒரே கடல்-ல ரெண்டு ஸ்ட்ரா போட்டுக் குடிப்பாங்களோ? :))
//Raghav said...
//நடக்க வேண்டியதை முன்னுக்குத் தள்ளி,
"நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால்.....
குதர்க்கம் குறையும்! "சும்மா" இருப்போம்! //
ரவி அண்ணா விளக்கங்கள் அருமை.. முதலில் நான் தான் குழப்பிக் கொண்டேன்..//
அப்படி வாங்க வழிக்கு!
அணுகும் போதே, "சும்மா" இருத்தல் பெரிய விஷயம்-ன்னு நினைச்சா இப்படி தான்! இப்ப பாருங்க! எம்புட்டு ஈசி!
இதான் அருணகிரியும் சொல்றாரு!
அம் மா பொருள் எல்லாம் தெரியலை-ன்னா கூட சும்மா இருந்தேன்! ஏன்னா முருகன் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பதால் அவனை முன் தள்ளி, என்னைப் பின் தள்ளிச், சும்மா இருந்தேன்!
//ஷைலஜா said...
//
இந்தளப் பெண் பற்றி இன்னும் நிறைய எழுதணும்-னு நினைச்சேன்! அப்பறம் "சும்மா" இருந்துட்டேன்! :)
//
ராகவ்!!! கவனிச்சியா உங்க அண்ணாத்த என்ன சொல்லறார்னு?:):)//
ராகவ் நான் சொல்லுறத கவனிக்க மாட்டாரு!
அவர் இந்தளம் சொல்லுறத கவனிச்சிக்கிட்டு இருக்காரு! :))
//பூஜ்ய ஸ்ரீ ஷைலாஜானந்த மகரிஷிகள் திருவடிகளே சரணம்! :)) //
நானும் வணங்கிக்கிறேன்.. ஆனா ஒரு சந்தேகம்.. பூஜ்ய ஸ்ரீ அப்புடின்னா என்ன அர்த்தம்.. ?? உலக விஷயங்கள்ல நாட்டம் இல்லாம இருக்குறதா..
//மன்மதனும் ரதியும் மட்டும் ஒரே கடல்-ல ரெண்டு ஸ்ட்ரா போட்டுக் குடிப்பாங்களோ? :)//
நான் பாத்ததில்லைங்கண்ணோவ்.. பாற்கடல்னா.. பால் நிரம்பிய கடல்னு நினைச்சது சரியா தப்பா ?? :)
//ராகவ் நான் சொல்லுறத கவனிக்க மாட்டாரு!
அவர் இந்தளம் சொல்லுறத கவனிச்சிக்கிட்டு இருக்காரு!:))//
அண்ணே.. எனக்கு பந்தள ராஜனைத் தான் தெரியும்.. :)
இறைவனின் திருமுக உல்லாசம். கண்டு கொண்டேன். எண்ணிக் கொண்டிருப்பேன். நன்றி இரவிசங்கர்.
//Raghav said...
நானும் வணங்கிக்கிறேன்.. ஆனா ஒரு சந்தேகம்.. பூஜ்ய ஸ்ரீ அப்புடின்னா என்ன அர்த்தம்.. ?? உலக விஷயங்கள்ல நாட்டம் இல்லாம இருக்குறதா..//
பூஜ்ய ஸ்ரீ-ன்னா பூஜிக்கத் தக்க, வணக்கத் திரு!
பூஜா ஸ்ரீ, தேஜா ஸ்ரீ-ன்னு படிச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல! :)
//Raghav said...
நான் பாத்ததில்லைங்கண்ணோவ்.. பாற்கடல்னா.. பால் நிரம்பிய கடல்னு நினைச்சது சரியா தப்பா ?? :)//
தப்பே இல்ல!
வெள்ளி டம்ளர் தான் தப்பு! ஸ்ட்ரா போட்டு தான் தேவர்கள் குடிப்பாங்க! :)
//அண்ணே.. எனக்கு பந்தள ராஜனைத் தான் தெரியும்.. :)//
பந்தள ராணி-ன்னு சொல்லுங்க! :)
//குமரன் (Kumaran) said...
இறைவனின் திருமுக உல்லாசம். கண்டு கொண்டேன். எண்ணிக் கொண்டிருப்பேன். நன்றி இரவிசங்கர்//
என்ன குமரன்
கண்டு கொண்டேன்
எண்ணிக் கொண்டேன்-ன்னு கவி பாடறீங்க?
சும்மா=சரணாகதி விளக்கம் சொல்லுங்க! :)
Nandri KRS - murugan arul kittatum... thirumoolarin mozhiyil - arunagirinathar-kku kidaittha inbham peruga ivvaiyagham...
இனிமையான நடை ... அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்!
Post a Comment