Monday, July 28, 2008

முதல் வணக்கம்!

பிரணவப் பொருளான வேழமுகத்தானையும்
பிரணவப் பொருள் சொன்ன ஆறுமுகத்தானையும்
வணங்கி,
அருணகிரிநாதர் செய்தருளிய கந்தர் அலங்காரம் என்னும் இந்த நூலினைக் கைக்கொள்கிறேன்!
பொருள் சொல்லி, நயம் கண்டு, நலம் காண முயல்வோம், வாருங்கள்!
* வெறும் பாடல்களாய் மட்டுமே சொல்லாமல்,
* கதைகளாகவும், அருணகிரி வாழ்வின் சம்பவங்களாகவும்,
* ஆலயத்தில் முருகனுக்குச் செய்யும் அலங்காரங்களாகவும் சொல்லிச் செல்வேன்!

அங்கு போல், இங்கும் வந்திருந்து,
ஆதரவு தர வேணுமாய்
முருக அன்பர்களையும், நம் நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்!

இப்போது தான் ஆடிக் கிருத்திகை போச்சு! இன்று செவ்வாய்க்கிழமை...ஒவ்வொரு செவ்வாயும் செவ்வாயோன், சேயோன் அலங்காரம்...
தமிழ்க்கடவுள் முருகவேளுக்கு அலங்காரம்!
அவனருளாலே அவன் அலங்காரம்! இதோ துவங்குகிறது.....

22 comments:

ஷைலஜா said...

//
கதைகளாகவும், அருணகிரி வாழ்வின் சம்பவங்களாகவும்,
* ஆலயத்தில் முருகனுக்குச் செய்யும் அலங்காரங்களாகவும் சொல்லிச் செல்வேன்!
///


வாக்கிற்கு அருணகிரி என்பார்கள்.
சும்மாஇரு சொலல்றஎன்ற ஞானமொழியை இறைவன் அவருக்கேஉபதேசித்தான்!அவர் வாழ் வின் கதைகளை ரவி வாயிலாக இங்கு காணப்போகிறோமா? ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Raghav said...

"முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முன்னின்று காக்கும் இறைவனுக்கே"

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வழக்கமா எங்க திராச ஐயா தான் மொதல் ஆசீர்வாதம் கொடுப்பாரு, புது வலைப்பூவுக்கு!

அலங்காரம்-ன உடனே நம்ம ஷைலு அக்கா வந்துட்டாங்க போல! :)

ஆமாக்கா!
சொல் அற-ன்னு அருணகிரிக்குச் சொன்னான்.
ஆனா நம்ம சொல்-அற-ன்னு இருந்த பதிவு எப்படிப் போடுவதாம்? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Raghav said...
"முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முன்னின்று காக்கும் இறைவனுக்கே"//

ஜூப்பரு!
முதல் வணக்கம் ராகவ்!

சரி...கந்தப்பூவிற்கு எங்கே எங்கள் சொந்தப்பூ? மகரந்தப்பூ? ஜிராப்பூ? ஜோராப்பூ? :)

G.Ragavan said...

முருகப் பெருமான் வலைப்பூவிற்கு எனது வாழ்த்துகள். தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்.

Anonymous said...

கேஆரெஸ் , கரும்பும் துவர்க்கும் ‍ செந்தேனும் புளிக்கும்னு நினைக்கிறேன். முருகன் அலங்காரம் தித்திக்கும் என்ற எதிர்பார்ப்புடன்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G.Ragavan said...
முருகப் பெருமான் வலைப்பூவிற்கு எனது வாழ்த்துகள்.//

உங்க வலைப்பூவுக்கு நீங்களே வாழ்த்துக்களா ராகவா?

//தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்//

நானும் தான்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சின்ன அம்மிணி said...
கேஆரெஸ் , கரும்பும் துவர்க்கும் ‍ செந்தேனும் புளிக்கும்னு நினைக்கிறேன்.//

ஆமாக்கா ஆமாம்!
கொஞ்ச நாள் கரும்பு ஜூசை வெளியில் வச்சா புளிக்குமே!

//முருகன் அலங்காரம் தித்திக்கும் என்ற எதிர்பார்ப்புடன்//

ஆனா, முருகன் அலங்காரம் என்னென்னைக்கும் தித்திக்கும்!
உங்க எதிர்பார்ப்பை எதிர்பார்த்து இருக்கிறேன்! :))

தி. ரா. ச.(T.R.C.) said...

கார்த்திகை பெண்களால் நேர்த்தியாய் வளர்ந்தவனின் கீர்த்தியை பாடும் கேஆஸ் வாழ்க! படிக்க காத்திருக்கிறேன்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...//

அதானே பார்த்தேன்!
என் ஒவ்வொரு முதல் வணக்கம் பதிவுக்கும் திராச இல்லாமயா?
என்றும் போல் வந்தமைக்கும், ஆசி தந்தமைக்கும், முருகனருள் முந்தமைக்கும் நன்றி திராச!

Anonymous said...

அன்புக்குரிய ரவிசங்கர் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களுடைய கந்தரலங்காரம் வலைத்தளத்தைப் பார்வையிட்டேன்.
அழகாக - வர்ணனையுடன் - உங்கள் தமிழில் எழுதுவது வரவேற்கத்தக்கது. அருணகிரிநாதருடைய கந்தர் அனுபூதியும் அற்புதமான ஒரு பாடற்தொகுப்பு. ஆனால் பொதுவாக 51 பாடல்களைத்தான்; தொகுத்திருக்கிறார்கள். 101 பாடல்கள் இருப்பதாக அறிந்தேன். நீங்கள் நிய10யோர்க்கில் இருப்பதால் உமது இந்திய நண்பர்களிடம் இதுபற்றி விசாரித்து உதவ முடியுமா? என்னிடம் ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடு இருக்கிறது. (51 பாடல்கள் பொருளுடன்) ஏனைய பாடல்களும் பொருளுடன் இருந்தால் சிறப்பு.
இருக்கும் பாடல்கள் நெஞ்சக் கனகல்லும் ……. காப்பில் தொடங்கி
ஆடும் பரிவேல்
உல்லாச நிராகுல
வானோ புனல்பார்
வளைபட்ட கைம்மா
மகமாயை களைந்திட
திணியான மனோசிலை
கெடுவாய் மனனே
அமரும் பதிகேள்
மட்டுர் குழல்
கார்மா மிசை காலன்
கூகா என என்கிளை
செம்மான் மகளைத்
முருகன் தனிவேல்
கைவாய் கதிர்வேல்
முருகன் குமரன்
பேராசை எனும்
யாம் ஓதிய கல்வியும்
உதியா மரியா உணரா
வடிவும் தனமும்
அரிதாகிய மெய்ப்பொருளுக்கு
கருதா மறவா நெறிகாண
காளைக் குமரேசன்
அடியைக் குறியாது
கூர்வேல் விழி மங்கையர்
மெய்யே என வௌ;வினை
ஆதாரம் இலேன் அருளைப்
மின்னே நிகர்வாழ்வை
ஆனனா அமுதே அயில்வேல்
இல்லேயெனும் மாயையில்
செவ்வான் உருவில்
பாழ்வாழ்வு எனும்
கலையே பதறிக் கதறித்
சிந்தாகுல இல்லொடு
சிங்கார மடந்தையர்
விதிகாணும் உடம்பை
நாதா குமரா நம என்று
கிரிவாய் விடுவிக்ரம வேல்
ஆதாளியை ஒன்று
மாவேழ் சனனம் கெட
வினையோட விடும்
சாகாது எனையே சரணங்களிலே
குறியைக் குறியாது
தூசா மணியும் துகிலும்
சாடும் தனிவேல் முருகன்
கரவாகிய கல்வி உளார்
எந்தாயும் எனக்கருள்
ஆறாறையும் நீத்து
அறிவொன்று அற நின்று
தன்னம் தனிநின்று
மதிகெட்டு அறவாடி
உருவாய் அருவாய்…… என்று முடிகிறது.

101 பாட்டுக்கள் உடைய நூல் (உரையுடன்) எங்காவது இருப்பின் தயவுசெய்து தொடர்புமுகவரியையும் முடிந்தால் ஈமெயில் முகவரியையும் தெரியப்படுத்தின் நன்றியுடையவனாவேன்.

தங்களின் சமயப்பணிக்கும் தமிழ்ப்பணிக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

என்றும் நன்றியுடன்
தங்க. முகுந்தன்.
www.kiruththiyam.blogspot.com

Anonymous said...

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. இது கந்தரனுபூதியிலுள்ள 12வது பாடல்.

ஈழத்துச் சித்தர் பரம்பரையில் வந்த சிவயோக சுவாமிகளின் நற்சிந்தனையிலும் பல இடங்களில் இந்த வரிகள் இடம்பெற்றுள்ளன.

சும்மாவிருக்குஞ் சுகமறியவேண்டும்
மவுனத்தின் வைப்பே
பின்னை ஒன்றும் பேசாதடங்கி
உணர்;ந்தார்க் குணர்வரிய ஓங்கார மெய்ப்பொருளை
சும்மாவிருக்கின்ற சுகம் கிடைக்குமாகில்
மாசில்லா மாதவர்தம் மனத்திற் பிரகாசன்
சும்மாவிருக்கின்ற சூட்சம் பேணுவோம்
ஆருமறியார்களந்த ரகசியத்தை
அறிந்தடங்கி யகிலத்திலே வாழுவது நன்று
சோதித்தே யெனைச் சம்மாவிருத்தினார்
இருந்து பாரென்றெனக்கோர் இனியநல்வாக்குத்தந்த
ஒருமொழியதனாலென்னை ஓவியம்போலவாக்கி
பேசவுமறியாமற்பேய்க்கோலங்கொண்டே
மவுனமாயிருந்திளைப்பாறீர்
நீ நான் அற நின்று மகிழ்ந்து
சொல்லும் பொருளுமற்றுச் சும்மாவிருக்க வேண்டும்
பூரணமான நிட்டையும் வேண்டும்
மௌனநிலையிலே ஆழ்த்து
எண்ணமெலாம் விட்டுவிட்டு ஏகாந்த மோனநிலை
பேசாத மந்திரத்தின் பெருமை நீ தந்திடெடா
ஊமைபோலிருந்தே உண்மை உணருவார்
பினையொன்றும் பேசவிடமில்லைக் காணே!
ஒடுங்கு மனதிலுண்மை புலப்படும்
மவுனநிலையில் மனத்தை நிறுத்தி
ஆமைபோல வைங்துமடக்கி ஊமைபோலிருந்து
செத்தவர்போலத் திரிவோம்
பேசி அறியார்
தன்னை மறந்திருப்பார்
கட்டறுத்து நிட்டையிலே கங்குல் பகலின்றி
வாய்விட்டுச் சொல்ல வகையெனக்கிங்கில்லையே!
மாறாத மௌனத் தியானத்தில் நில்லு
நிற்போம் சமாதியிலே யென்றும் நிலைத்திருப்போம்
நோவாது பேசாது நோன்பைப் பிடிக்கவும்

என்று பேசாத நிலையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.(இன்னும் பல வரிகள் இருக்கின்றன – பின்னர் அவற்றைக் குறிப்பிடுகிறேன்)

ஏதோ உங்களுடைய மலர் அர்ச்சனைக்கு நானும் சில மலர்கள் தரவே இதைக் குறிப்பிட்டேன். குறையாக எண்ண வேண்டாம். வலைத்தளத்திற்கு நான் புதியவன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

என்றும் இறைவனருளுக்காக
தங்க. முகுந்தன்.
www.kiruththiyam.blogspot.com

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Anonymous said...
உங்கள் தமிழில் எழுதுவது வரவேற்கத்தக்கது//

ஹிஹி!
நமக்கு லோக்கலா எல்லா மக்களுக்கும் போய்ச் சேர மாதிரி எழுதத் தாங்க வருது! :)

//தங்க. முகுந்தன்//

முருக பக்தர்கள் எல்லாம் முகுந்தனாகவும் ராகவனாகவும் தான் இருக்காங்க! :)))

//101 பாட்டுக்கள் உடைய நூல் (உரையுடன்) எங்காவது இருப்பின் தயவுசெய்து தொடர்புமுகவரியையும் முடிந்தால் ஈமெயில் முகவரியையும் தெரியப்படுத்தின் நன்றியுடையவனாவேன்//

அடியேனுக்கு தெரிந்து காப்புச் செய்யுள் தவிர்த்து, 51 பாடல்கள் தான் அநுபூதியில்!

கெளமாரம் தளத்தில் பாருங்க!
http://www.kaumaram.com/anuboothi/index.html
நண்பர் ராகவன் அநுபூதி முழுமைக்கும் பொருள் சொல்லி இருக்காரு! இங்கே பாருங்க!

நீங்க சொன்ன 101 பாடல்கள் இருக்க, வாய்ப்பில்லையோ-ன்னு தான் நினைக்கிறேன்! கந்தர் அலங்காரத்துக்கு 108!
எதுக்கும் இன்னொரு முறை பெரியவர்களையும் கேட்டுச் சொல்கிறேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@தங்க முகுந்தன்
//ஏதோ உங்களுடைய மலர் அர்ச்சனைக்கு நானும் சில மலர்கள் தரவே இதைக் குறிப்பிட்டேன். குறையாக எண்ண வேண்டாம். வலைத்தளத்திற்கு நான் புதியவன். தவறு இருந்தால் மன்னிக்கவும்//

ஆகா...எதுக்கு மன்னிப்பு?
நாங்க தான் நன்றி சொல்லணும்!
மலர் அர்ச்சனைக்கு ஈழத்து மலர்களை கொடுத்தீங்களே! அதுக்கு! :)

கூட்டு அர்ச்சனை தான் சிறப்பு!
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

தொடர்ந்து அலங்காரத்துக்கு வாங்க முகுந்தன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஈழத்துச் சிவயோக சுவாமிகளின் வரிகளைக் கொடுத்தமைக்கும் நன்றி!

//சும்மாவிருக்கின்ற சுகம் கிடைக்குமாகில்
மாசில்லா மாதவர்தம் மனத்திற் பிரகாசன்
சும்மாவிருக்கின்ற சூட்சம் பேணுவோம்//

மாதவப் பெருமாள் மனத்தில் பிரகாசிக்கும் முருகனா? :)

//ஒருமொழியதனாலென்னை ஓவியம்போலவாக்கி//

//நோவாது பேசாது நோன்பைப் பிடிக்கவும்//

அருமையான வரிகள்!

குமரன் (Kumaran) said...

தினம் ஒரு பதிவு என்று தொடங்கியிருக்கிறீர்களா? நல்லது. நல்லது. திங்கள் அப்பனை வணங்கிவிட்டு செவ்வாய் சேந்தனை வணங்குதலா? நன்கு நடக்கட்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து படிக்கிறேன்.

Anonymous said...

தங்களுடைய பெயரிலேயே 3 இந்துக் கடவுளரின் நாமங்களைக் கொண்டிருக்கின்றீர்கள்.

கண்ணபிரான் - மஹாவிஷ்ணு.
இரவி – பிரத்தியட்ச தெய்வமாகிய சிவசூர்யன்.
ஷங்கர் - மஹாதேவனாகிய சிவன்.

கூட்டாக அர்ச்சனை புரிய கூப்பிட்டதற்கு மனமார்ந்த நன்றி. அலங்காரத்துக்கு என்னால் முடிந்ததைச் செய்யச் சித்தமாயுள்ளேன்.

நீங்கள் குறிப்பிட்டபடி எல்லா மக்களுக்கும் போய்ச் சேரும் விதத்திலேயே - எமது சற்குருநாதர் சிவயோக சுவாமிகள் பாடிய கிளிக்கண்ணி என்ற பாடலைத் தருகிறேன். ஈழத்தின் வடபுலத்தில் அமைந்துள்ள நல்லூர்க் கந்தன் மீது பாடப்பட்ட இப்பாடலும் தங்களுடைய மலரலங்காரத்துக்கு உபயோகப்படட்டும். எதிர்வரும் 8ம்திகதி கொடியேற்றத்துடன் 25 நாள் மகோற்சவம் இடம்பெறவிருப்பதால் இவ்வர்ச்சனையை உங்கள் மூலமாக அவருக்கு சுவிஸிலிருந்து அர்ப்பணம் செய்கிறேன். அர்ப்பணத்தை ஏற்பீர்கள்தானே!ஆன்மா ஒருபோதும் - கிளியே
அழியாதது நாங்கள்
வீண்பாhவம் விட்டிடடி – கிளியே
விளங்கு நல்லூர் தெரியுதடி 1

காண்பானும் காட்சியும்போய்க் - கிளியே
கண்டபல பொருளும் விட்டு
மாண்பாகச் சிந்தையிலே – கிளியே
வடிவேலைப் போற்றிடடி 2

ஊண்பொhருளும் ஒழியுமடி – கிளியே
உலகமெலாம் அழியுமடி
சேண்பொலியும் திருவடியை – கிளியே
சிந்தையிலே போற்றிடடி 3

சங்கோசை கேட்குதடி – கிளியே
தாளமேள முழங்குதடி
எங்கெங்கும் வெளிச்சமடி – கிளியே
ஏந்திழாய் நடந்துவாடி 4

சண்பக மரத்தடியிற் -கிளியே
சாதுக்களின் கூட்டமடி
மண்போட்டாhல் மண்விழாதே – கிளியே
மனிதரெல்லாங் கூடிக்கொண்டார் 5

மாறிப் பொறிவழிபோய்க் – கிளியே
மாறாட்டம் கொள்ளாதே
ஆறி நடந்துவாடி – கிளியே
ஆதிசயங்கள் மெத்தவடி 6

தேர்முட்டிப் படிமேலே – கிளியே
செல்லப்ப னென்ற சீமான்
ஆர்வமுடன் இருக்கிறான்டி – கிளியே
அங்குபோவோம் வந்திடடி 7

கிட்ட நெருங்கையிலே – கிளியே
கிடுகிடென்று நடுங்குதடி
முட்டாளைப் போலேயவன்
முகமும் விளங்குதடி 8

பித்தனெனப் பலபேரும் - கிளியே
பேசிப்பேசி இகழ்வார்கள்
எத்தினாலும் அவன்மனமோ – கிளியே
எள்ளளவும் கலங்காதே 9

பத்தியுடன் வந்திடடி – கிளியே
பார்த்தவுடன் அஞ்சாதே
வித்தகஞ் சேர் திருவடியில் – கிளியே
விழுந்துநீ கும்பிடடி 10

நாமறியா மென்றுசொல்லிக் - கிளியே
நகைசெய்வான் நாணாதே
தாமதம் பண்ணாதே – கிளியே
சடுதியாய்க் கும்பிடடி 11

கோணாத சிந்தையுடன் - கிளியே
கும்பிட்டு நின்றிடடி
வீணான ஆசையெல்லாம் கிளியே
விட்டோடும் வெற்றியடி 12

ஆரறிவாரெ ன்றுசொல்லிக் - கிளியே
அதட்டுவான் அஞ்சாதே
பாரறிந்த பித்தனடி
பட்சமுடன் பணிந்து நட 13

கண்டார் நகைப்பரெனக் - கிளியே
கண்மணிநீ அஞ்சாதே
பண்டார வேடமடி –கிளியே
பாடிப் பணிந்திடடி 14

ஒண்டொடியே வந்திடடி - கிளியே
உள்வீதிக்கும் போவமடி
வண்டி வண்டி யாயிளநீர் -கிளியே
வந்து குவியுதடி 15

வகைவகையாய்ப் பச்சரிசி – கிளியே
வாழைக்குலை தேங்காய்கள்
உவகையுடன் கொண்டுவந்து – கிளியே
உதவுகிறார் பாhர்த்திடடி 16

கர்ப்பூரப் பெட்டிகளும் - கிளியே
கட்டுக்கட்டாய்க் கரும்புகளும்
பொற்பூவும் சந்தனமும் - கிளியே
பொலியுதடி வீதியெல்லாம் 17

கண்டாயோ கார்மயிலே - கிளியே
கந்தன் விளையாட்டுக்களை
மண்டலங்கள் நடுங்குமடி –கிளியே
மணியோசை கேட்குதடி 18

பந்திபந்தி யாயிருந்து – கிளியே
பார்ப்பார்க ளெல்லாரும்
விந்தைசேர் மந்திரத்தைக் – கிளியே
விளம்புகின்றார் கேட்டிடடி 19

பச்சைப் பசுங்கிளியே – கிளியே
பார்த்தாயோh கதவுகளை
அச்சமின்றி மூடிவிட்டார் - கிளியே
அபிடேகம் ஆகுதடி 20

ஏக மனதாகிக் - கிளியே
எல்லாரும் நிற்கையிலே
வேகமுடன் கதவுகளைக் - கிளியே
வேதியர்கள் திறந்துவிட்டார் 21

அஞ்சடுக்குத் தீபமுதல் - கிளியே
அடுக்கடுக்காய்த் தீபமெல்லாம்
அந்தணர்;கள் காட்டுகிறார் - கிளியே
அன்புடனே கும்பிடடி 22

அங்கையிலே பூவெடுத்துக் - கிளியே
அந்தணர்கள் ஆசீர்வாதம்
சங்கையின்றிச் சொல்லுகிறார் - கிளியே
சண்முகனை வேண்டிடடி 23

திருநீறுஞ் சந்தனமும் - கிளியே
தீர்த்தம்பரி மாறுகிறார்
செங்கமல மடமாதே – கிளியே
சேவித்து நீ வேண்டியணி 24

ஆர்த்தசாமப் பூசைக்குநாம் - கிளியே
ஆரணங்கே நிற்பமென்றால்
மெத்தநேர மாகுமடி - கிளியே
வீட்டிலேயா ளில்லையடி 25

விரைவாய் நடந்துவாடி – கிளியே
வீணர்தங் கூட்டமடி
மாரிக்கால மானதனால் - கிளியே
மாகவன மாய்நடடி 26

ஓடாதே வழுக்குமடி – கிளியே
உரைத்திடடி ஐந்தெழுத்தை
வாடாதே வீட்டுவாசல் - கிளியே
வந்தோமே திறந்திடடி. 27

G.Ragavan said...

தங்க முகுந்தன் அவர்களே,

51 பாடல்களைக் கொண்டது கந்தர் அநுபூதி. காப்போடு சேர்த்து 108 பாடல்களைக் கொண்டது கந்தரலங்காரம்.

நீங்கள் குறிப்பிடுவது அநுபூதி. அதில் பாடல்கள் 51தான். ஆன்மீகச் செம்மல் கண்ணபிரான் ரவிசங்கர் பொருள் சொல்வது கந்தரலங்காரம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@தங்க முகுந்தன்
கிளிக் கண்ணி அபாரம்!
ஈழத்துச் சிவயோக சுவாமிகள் பாட்டுக்கு நீங்களே தனியாக ஒரு வலைப்பூ தொடங்கலாமே!

//தங்களுடைய பெயரிலேயே 3 இந்துக் கடவுளரின் நாமங்களைக் கொண்டிருக்கின்றீர்கள்.
கண்ணபிரான் - மஹாவிஷ்ணு.
இரவி – பிரத்தியட்ச தெய்வமாகிய சிவசூர்யன்.
ஷங்கர் - மஹாதேவனாகிய சிவன்//

:)
//இரவி – பிரத்தியட்ச தெய்வமாகிய சிவசூர்யன்.//

சூர்யனை நாரணனோடு தானே சேர்த்துச் சொல்வார்கள்! சூர்யநாராயணன் என்று!
சிவசூர்யன் அவ்வளவாகக் கேள்விப்பட்டதில்லை!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@குமரன்-நன்றி!
@ராகவா-வந்து தெளிவுபடுத்தியமைக்கு நன்றி!

தங்க முகுந்தன், அடியேனும் ஊரில் சில பதிகம் பாடுவோரை விசாரித்து விட்டேன்! அநுபூதி 51 பாடல் தான்!

தங்க முகுந்தன் said...

எனக்குத் தெரிந்தவரை சங்கரர் ஆறு சமயங்களாக இந்து சமயத்தை வகுத்து வைத்துள்ளார்
சைவம் சிவனையும்
வைஷ்ணவம் நாராயணனரையும்
சாக்தம் சக்தியையும்
காணாபத்தியம் விநாயகப் பெருமானையும்
கௌமாரம் கந்தக் கடவுளையும்
சௌரம் சூரியனையும் முன்னிறுத்தி இருக்கிறது.
எனவே சூரியனையும் நாராயணனையும் ஒன்றாக சேர்ப்பதில் எனக்கு உருவ வழிபாட்டில் உடன்பாடு கிடையாது.

தங்க முகுந்தன் said...

எனக்குத் தெரிந்தவரை சங்கரர் ஆறு சமயங்களாக இந்து சமயத்தை வகுத்து வைத்துள்ளார்
சைவம் சிவனையும்
வைஷ்ணவம் நாராயணனரையும்
சாக்தம் சக்தியையும்
காணாபத்தியம் விநாயகப் பெருமானையும்
கௌமாரம் கந்தக் கடவுளையும்
சௌரம் சூரியனையும் முன்னிறுத்தி இருக்கிறது.
எனவே சூரியனையும் நாராயணனையும் ஒன்றாக சேர்ப்பதில் எனக்கு உருவ வழிபாட்டில் உடன்பாடு கிடையாது.

தவறு இருந்தால் மன்னிக்கவும்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP