Tuesday, September 23, 2008

அலங்காரம்-09/10: முருகன் அருணகிரிக்குச் செய்த உபதேசம் என்ன?

முருகன் தந்தைக்கு உபதேசம் செய்தான்! எல்லாருக்கும் தெரியும்! ஆனா அவன் என்ன-ன்னு உபதேசம் செய்தான்? அது எல்லாருக்கும் தெரியுமா? அதே உபதேசத்தை அருணகிரிக்கும் பின்னாளில் செய்தானாம்! அருணகிரியே சொல்றாரு! முருகன் சொன்னான்-ன்னு சொல்றாரு, ஆனா என்ன சொன்னான்-ன்னு சொல்லாம கொஞ்சம் லொள்ளு பண்ணுறாரு! பார்க்கலாம் வாரீங்களா, இன்னிக்கி அலங்காரத்துல? :)

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து, உச்சியின் மேல்
அளியில் விளைந்தது, ஒரு ஆனந்தத் தேனை, அநாதி இல்
வெளியில் விளைந்த, வெறும் பாழை பெற்ற, வெறும் தனியை
தெளிய விளம்பிய வா முகம் ஆறுடை தேசிகனே!

(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

மேலோட்டமான பொருள்:
சிவ மயமான மலையின் மீதுள்ள ஆனந்த மயமான தேன்! - அதுக்குப் பேரு சிவானந்தம்!
முதல் முடிவு என்று இல்லாது, ஆனந்த வெளியாக விளங்கும் தனிமை நிலை! சும்மா இருத்தல்! அதை, ஆறுமுக தேசிகன் எனக்குத் தெளிவாக உபதேசித்தானே! என்ன ஆச்சரியமோ?

பாட்டைக் கொஞ்சமாப் பிரிச்சி மேயலாம்! இது தத்துவங்கள் நெறைஞ்ச பாட்டு! அதுனால கொஞ்சம் லைட்டாப் பிரிச்சி மேயறேன்! :)
மீதியை முருக பக்தர்கள், பின்னூட்டத்தில் விளக்கேற்றி விளக்குவார்கள்!

ஒளியில் விளைந்த = ஒளியில் என்ன விளையும்? ஒளியில் தான் உணவுக்கே உணவு விளையுது!
ஒளிச் சேர்க்கை - Photo Synthesis கேள்விப்பட்டிருக்கீங்க தானே அறிவியல் வகுப்பில்? செடி கொடிகள் எல்லாம் ஒளியில் தான் உணவு தேடிக் கொள்கின்றன!
செடிகளை விலங்குகள் உண்கின்றன!
விலங்குகளை மனிதன் உண்கிறான்!
மனிதனை?....
மனிதனை எது உண்கிறது?
அகங்காரம் உண்கிறது! ஹா ஹா ஹா! அடியேன் சொல்வது சரியா மக்களே? :)

உயர் ஞான பூதரத்து = உயர்ந்த ஞானமாகிய மலை! ஒளியில் விளைந்த ஞான மலை!
மலை எப்படிங்க ஒளியில் போய் விளையும்? கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க! ஆத்ம ஒளி - அதில் எழும்பும் ஞான மலை!

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், வாக்கினிலே ஒளியுண்டாகும் என்றான் பாரதி!
ஆத்மாவில் சத்திய ஒளி, விளைய விளைய, ஞானம் என்னும் மலை மேலே மேலே எழும்புது!

இன்னும் ஈசியாப் புரிஞ்சக்கணுமா? எப்பவாச்சும் கொஞ்ச நாள் ஏதோ ஒரு சோகத்தில் இருந்து விட்டு, திடீர்-னு உங்களுக்கே ஒரு தெளிவு பிறந்திருக்கும் அல்லவா?
மனதில் தெளிவு-ன்னு ஒன்னு, விளைய விளைய, சிந்தனை மேலே மேலே எழும்புது!
ஆத்மாவில் சத்திய ஒளி, விளைய விளைய, ஞானம் என்னும் மலை மேலே மேலே எழும்புது!

உச்சியின் மேல் = அந்த ஞான மலையின் உச்சியில் மேல் என்ன இருக்கு?
அளியில் விளைந்தது ஒரு ஆனந்தத் தேனை = அளி-ன்னா கருணை! தமிழ் மொழியில் சொல்லும் பேரும் எப்படியெல்லாம் இருக்குன்னு பாருங்க!
கருணை இருந்தாத் தானே அளிக்க முடியும்? அதான் அளி-ன்னே கருணைக்குப் பேர் வச்சிருக்காங்க பண்டைத் தமிழ்ச் சான்றோர்!

இப்படி ஆத்ம ஒளியில், எழுந்த ஞான மலையின் மேல் என்ன இருக்கு? என்ன இருக்கணும்? ஞானமா? கர்மமா? பக்தியா? ஹிஹி....கருணை இருக்கணுமாம்!
நிறைய பேருக்கு, சாதகம் செய்யறேன் பேர்வழி-ன்னு ஆத்மா, ஞானம்-ன்னு எல்லாம் பேசிட்டு, அந்த மலையில் என்ன எழுப்பிக்கறாங்க?
ஆணவம், படோபடம், விளம்பரம், புகழ்ச்சி மாயை - இதெல்லாம் தான் ஏத்திக்கறாங்க!

எத்தனை "ஸோ கால்ட் ஸ்வாமி-ஜிக்களைப்" பார்க்கிறோம்! ஆனா கொஞ்ச நாள் தான்! பாரம் தாங்காம, கொஞ்ச நாள்-லயே மலை மீதிருந்து, அதல பாதாளத்திற்கு விழுந்துடறாங்க! அப்போது சாதாரண மக்களே, இந்த முன்னாள் சாதகர்களைக் கைத்தூக்கி விட வேண்டி இருக்கு! :)

ஆக, ஆத்ம ஒளியில் எழுந்த ஞான மலையின் மேல்...கருணை இருக்கணும்!
தான் நரகம் புகினும் பரவாயில்லை! அன்பர்களுக்கு மோட்சம் கிட்டினால் போதும் என்ற பரம கருணை! கேழில் பரங்கருணை! அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் "கருணை"!
காரேய்க் கருணை இராமானுசா என்று அதான் கருணையை முன் வைத்து அவரைச் சொன்னார்கள்! பரம காருண்ய காரணத்தால் தான் யதி-ராசர், துறவிக்கெல்லாம் அரசர் என்று போற்றினார்கள்! அருட் பெரும் ஆத்ம சோதியில் தனிப் பெருங் கருணை இருக்கணும் என்று வள்ளலார் எம்புட்டு நுட்பமாச் சொல்லி இருக்காரு பாருங்க!

கருணை தான் ஞானியின், யோகியின், பக்தனின் பரம லட்சணம்!
ஆத்ம ஒளியில் எழுந்த ஞான மலையின் மேல்...கருணை இருக்கணும்!
அப்படிக் கருணை இருந்தால், தேன் விளையும்! அளியில் (கருணையில்) விளைந்தது ஒரு ஆனந்தத் தேனை என்கிறார் அருணகிரி! என்ன தேன்?

சிவானந்தம் என்னும் தேன்!
அம்பிகானந்தம் என்னும் தேன்!
முருகானந்தம் என்னும் தேன்!
மாலானந்தம் என்னும் தேன்!
அச்சுதானந்தம் என்னும் தேன்!
அத்தனையும் கிருபானந்தம் என்னும் தேன் தான்! கருணையே சிவம்! அன்பே சிவம்! காரேய்க் கருணை உடையவருக்குக் கருணையே பரமம் சிவம்!

அநாதி இல் வெளியில் விளைந்த = ஆதி=தோற்றம் x அநாதி=முடிவு! முடிவில்லாத வெட்ட வெளி = Cosmos. அம்பலவாணர் நடமிடும் வெளி! அங்கு என்ன தான் விளையும்?

வெறும் பாழை = வெற்றிடம் தான் விளையும்! அண்ட வெளியில் பாழ் என்னும் வெற்றிடம் தான் விளையும்! Vaccum! Volume of space that is empty of matter!
Quantum Theory உங்களுக்குப் படிக்கப் பிடிக்குமா? அவிங்களுக்கு இந்திய இறையியலில் அறிவியல் எப்படி எல்லாம் பின்னிப் படர்ந்து இருக்கு-ன்னு ஈசியாப் புரியும்!

பாழ் = கணிதத்தில் Zero என்பதை விட இங்கு Null என்று கொள்ளலாம்! நாதம் என்பார்கள்! நாத விந்து கலாதீ நமோ நம! ஒன்றுமில்லாத நிலை! கொஞ்சம் கவனிச்சிப் பாருங்க - அந்த "ஒன்றும்" இல்லாத நிலை என்பதில் "ஒன்று" இருக்கு அல்லவா?

ஹிஹி! இதுக்கு மேலச் சொன்னா, இதைப் படிச்சிக்கிட்டு வர எங்க அம்மா பயந்துருவாங்க! நிப்பாட்டிக்கறேன்! :) நீங்க பின்னூட்டத்தில் தொடருங்க! நம்ம பையன் மட்டும் இதப் பத்திப் பேசலை; ஜீவா பேசறாரு, குமரன் பேசறாரு, ராகவன் பேசறாரு, மெளலி பேசறாரு, பாலாஜி பேசறாரு, அம்பி பேசறாரு-ன்னு பார்த்தாங்கன்னா, அவங்க பயம் போயிடும்! :))

வெறும் தனியை = "ஒன்றும்" இல்லாத என்பதில் "ஒன்று" இருக்குன்னு சொன்னேன்-ல? அந்த ஒன்றைத் தான் வெறும் தனி என்கிறார் அருணகிரி!
அந்த வெறும் தனி தான் பிரணவம்! அது தான் ஓம்!

தெளிய விளம்பியவா = அந்த ஓங்காரத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தவனே!
முகம் ஆறு உடை தேசிகனே = ஆறு முகங்களை உடைய தேசிகனே (குருவே)! அருணகிரிக்குச் சொன்னது போல், அடியோங்களுக்கும், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

(குறிப்பு: இந்தத் தேசிகன் என்னும் சொல்லையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அருணகிரியின் எண்ணப் போக்கையும், ஆழ் மனச் சிந்தனைகளையும் புரிந்து கொள்ள இதுவும் உதவும்! மாதவிப் பந்தலில் பின்னர் பார்ப்போம்!)



தேன் என்றும், பாகு என்றும், உவமிக்க ஒணாத மொழி, தெய்வ வள்ளி
கோன், அன்று எனக்கு, உபதேசித்தது ஒன்று உண்டு! கூற அற்றோ?
வான் அன்று! கால் அன்று! தீ அன்று! நீர் அன்று! மண்ணும் அன்று!
தான் அன்று! நான் அன்று! அசரீரி அன்று! சரீரி அன்றே!




மேலோட்டமான பொருள்:
தேன்/பாகு என்றெல்லாம் உவமை சொல்ல முடியாத அளவுக்கு தெய்வ-வள்ளி மொழி இனிக்கிறது! தலைவன் முருகன்! அவன் முன்பொரு நாள், எனக்கு உபதேசித்த "ஒன்னு" இருக்கு! அதைக் கூற முடியுமோ? வேண்டுமானால் ஒரு குறிப்பு கொடுக்கிறேன்!
அது வானம் இல்லை, வாயு இல்லை! தீ இல்லை! நீர் இல்லை! மண்ணும் இல்லை!
தானும் இல்லை! நானும் இல்லை! அருவமும் இல்லை! உருவமும் இல்லை!

என்ன மக்களே, அருணகிரியார் கொடுத்த க்ளூ ஏதாச்சும் புரிஞ்சிச்சா? இந்தப் பாட்டைப் பிரிச்சி மேய்ஞ்சேன்னா, என்னை மேய்ஞ்சிருவாய்ங்க! :)
அருணகிரி என்னமா சஸ்பென்ஸ் கொடுக்கறாரு! சான்ஸே இல்லை! அருணகிரி முதலில் பக்தர்! முடிவிலும் பக்தர்! ஆனால் அவர் தெளிவுக்கு, அவரைச் சித்தர் என்று தாராளமாகக் கொண்டாடலாம்! அம்புட்டு நுட்பம்!

தேன் என்றும், பாகு என்றும், உவமிக்க ஒணாத மொழி, தெய்வ வள்ளி கோன்! = நல்லாப் பாருங்க தெய்வ வள்ளி என்னும் சொற்செட்டுகளை!
இதுக்குச் சில பேரு தெய்வத்தன்மை பொருந்திய வள்ளி-ன்னு மட்டும் பொருள் எடுத்துப்பாய்ங்க! ஆனா தெய்வ வள்ளி-ன்னா, தெய்வானை-வள்ளி! அப்படியும் பொருள் எடுத்துக்கலாம்! பாருங்க அப்பவே அருணகிரியார் ஆடும் பதிவுலக விளையாட்டை! :)

அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு = அன்று-ன்னா என்று? என்னிக்கி தெய்வ-வள்ளி கோன் அவருக்கு உபதேசித்தான்? அருணகிரி வரலாறு அறிந்தவர்கள் அறியத் தர வேணும்!

கூறவற்றோ = சொல்லத் தான் முடியுமா?

வான் அன்று! கால்(காற்று) அன்று! தீ அன்று! நீர் அன்று! மண்ணும் அன்று! = ஆக பஞ்ச பூதங்களும் இல்லை!
கால் கொண்டு மெள்ளமா நடக்கலாம், வேகமா ஓடலாம், குதிக்கலாம், இன்னும் பல...அதான் காற்றுக்கும் கால் என்று பெயர்! தென்றல் காற்றைச் சிறு கால் அரும்பத் தீ அரும்பும் என்று சொல்லும் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்! தமிழ் மொழியின் இடுகுறிப் பெயர்களை விட காரணப் பெயர்களின் அருமையே அருமை!

தான் அன்று! நான் அன்று! அசரீரி அன்று! சரீரி அன்றே! = தானும் இல்லை! நானும் இல்லை! அருவமும் இல்லை! உருவமும் இல்லை!

இப்படி எதுவுமே இல்லை இல்லை-ன்னா, அப்ப என்ன தான்-யா அந்த உபதேசம்?
சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம், "இரு" செவி மீதிலும் பகர்-ன்னு, அப்படி என்னய்யா சொல்லிட்டான் எங்க முருகன்?
முருகன் இப்படியெல்லாம் கன்னா பின்னா-ன்னு க்ளூ கொடுத்தா பொருள் சொன்னான்?
அருணகிரியார் மட்டும் ஏன் இப்படிப் பண்ணுறாரு? ரொம்ப தான் லொள்ளு பண்ணறாரோ? :)

அடுத்த செவ்வாயில் அடுத்த அலங்காரத்தில் இதைச் சந்திப்போம்! சிந்திப்போம்!

100 comments:

jeevagv said...

இரண்டாவது பாடலில், இதில்லை, அதில்லை என்று ஒவ்வொன்றாக இல்லை என்று சொல்வது - நேதி நேதி என யக்ஞவால்கியர் உபநிடதத்தில் சொல்வதைப் போன்றுள்ளது அல்லவா!
இவையில்லெல்லாம் தனக்குக் கிடைத்தை குறிப்புகளால், குறிக்கப்பட்டவனை, ஒவ்வொரு குறிப்பாகத் தேடித் தேடி, இறுதியில் அவையெல்லாம் உணர்த்தும் ஆன்மாவில் முடிவதாக சொல்வதாகத் தெரிகிறது.
இறுதியில் சரீரி அன்றே - என்பதற்கு - ஆன்மா அல்லவா - என்று பொருள் கொண்டால் - அந்த உபதேசத்தின் பொருள் உணர்த்துவதாகத் தெரிகிறது!
அகராதியில் இருந்து:
சரீரி carīri

, n. < šarīrin. Soul, as the owner of the body; [சரீரத்தை யுடையது] ஆன்மா.

அன்றே aṉṟē

, ind. < அன்மை-று + ஏ. Is it not so?, a neg. interrogative, equivalent to an emphatic affirmative; அல்லவா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நண்பர்களே,
பாடலின் ஒலிச் சுட்டிகள் அந்தந்த பாடலுக்கு வேலை செய்கின்றனவா என்று யாராச்சும் சரி பார்த்துச் சொல்லுங்களேன்!
இங்கு எனக்கு வேலை செய்கிறது. ஜீவா-வுக்கு வேறு ஏதோ பாடல் வருகிறது போல! ஏன்-னு தெரியலை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
இரண்டாவது பாடலில், இதில்லை, அதில்லை என்று ஒவ்வொன்றாக இல்லை என்று சொல்வது - நேதி நேதி என யக்ஞவால்கியர் உபநிடதத்தில் சொல்வதைப் போன்றுள்ளது அல்லவா!//

ஆமாம் ஜீவா! அருமையாச் சுட்டிக் காட்டி இருக்கீங்க!

நேதி நேதி = அதுவும் இல்லை! இதுவும் இல்லை! என்று அத்வைத (அல்லிருமை) பாணியிலும் சொல்லலாம்!

நேதி நேதி = அது மட்டுமே இல்லை! இது மட்டுமே இல்லை என்று விசிட்டாத்வைத (விதப்பொருமை) பாணியிலும் சொல்லலாம்!

அருணகிரி, அது இது என்று மட்டுமே குறித்து விடாது, ஒவ்வொன்றாய்க் காட்டிக் காட்டி, அதுவும் இல்லை, இதுவும் இல்லை என்று சொல்கிறார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இவையில்லெல்லாம் தனக்குக் கிடைத்தை குறிப்புகளால், குறிக்கப்பட்டவனை, ஒவ்வொரு குறிப்பாகத் தேடித் தேடி, இறுதியில் அவையெல்லாம் உணர்த்தும் ஆன்மாவில் முடிவதாக சொல்வதாகத் தெரிகிறது//

ஹூம்...அப்படியா?
ஆன்மாவைச் சொல்வதோடு நிறுத்தி விடுகிறாரா அருணகிரி? பரம் பொருளைச் சொல்லப் புகவில்லையா?

பஞ்ச பூதங்கள் இல்லை, தான் இல்லை, நான் இல்லை வரைக்கும் சரி! அசரீரி இல்லை-சரீரியும் இல்லை என்பதில் தான் இன்னும் கொஞ்சம் தெளிவு வேண்டி இருக்கு!

நீங்கள் கொடுத்த சரீரி-யின் பொருளைக் கண்டேன்! உண்மை தான்! சரீரத்துக்கு உள் இருப்பதை சரீரி என்றும் குறிக்கும் வழக்கம் உண்டு!
சரீரம்/சரீரி
சேஷன்/சேஷி
பிரகாரம்/பிரகாரி
என்றும் சொல்லுவார்கள்!

//இறுதியில் சரீரி அன்றே - என்பதற்கு - ஆன்மா அல்லவா - என்று பொருள் கொண்டால்//

வித்தியாசமான பார்வை!
அப்போ அ-சரீரி அன்று என்றும் சொல்கிறாரே! அ-சரீரி என்பதற்கு இல்லை-ஆன்மா, உடல் என்று பொருளா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அன்றோ? என்றால் "அல்லவா?"-ன்னு தெரியும்! அன்றே என்றாலும் "அல்லவா?" தானா?

அன்று என்றாலும் ஆமாம் என்ற பொருளில் வருகிறது!
ஈயென இரத்தல் இழிந்து அன்று!
அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்த அன்று!

RATHNESH said...

மேலோட்டமான பொருளும் சுவை (தமிழின் உபயத்தால்); பிரித்து மேய்ந்தாலும் சுவை (பொருளின் ஆழத்தால்).

விருந்து வைத்ததற்கு நன்றி.

VSK said...

அருணையாரை அணுகும் போது கொஞ்சம் 'அஹம்' என்பதைத் தள்ளி வைத்து வரவேண்டும்!

சும்மா வருவதல்ல ஞானம்!

முருகன் இறங்கி வந்து காதில் சொன்னதை அப்படியே போட்டு உடைத்துவிட இவரால் முடியாது!

கோபுரத்தின் மீது ஏறிக் கூவியதைப்போல் இதனைச் சொல்லிவிட இது வெறும் ஜென்மம் கடைத்தேறும் மந்திரம் அல்ல!

இந்த ஜென்மம் கடைத்தேறினால், மீண்டும் பிறப்பு நிச்சயம்!

ஆனால், இவர் சொல்ல விழைவது ஜென்மமே இல்லாமல் செய்யும் 'ஒன்று'!

இது அவரவர் சாதகம் செய்து மட்டுமே அனுபவித்து உணரக்கூடிய 'ஒன்று'!

அதை 'லொள்ளு'எனச் சொல்லுவது சரியில்லை ரவி!

இதை அடையத்தான் காலம் காலமாக யோகிகளும் ஞானிகளும் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதனைச் சூசகமாகத்தான், இப்படித்தான், சொல்லி ஆசையைத் தூண்டிவிட்டு, சாதகனை உயரச் செல்லவைக்க முடியும்!

இதற்கு மேல் சொல்ல எனக்குத் தெரியவில்லை!

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லா மேஞ்சுருக்கீங்க கே.ஆர்.எஸ்
:-)

மிகப் பெரிய உபன்யாசகர்கள் போல எல்லாத்தையும் எல்லாத்தோடும் சேர்த்து பொருள் சொல்வது என்பது குணானுபாவங்களை போற்றுவது போல. நல்லா ரிலேட் பண்ணுறீங்க... :-)

மெளலி (மதுரையம்பதி) said...

சாதனை பண்ணுற யாரும் எதையும் பழித்துப் பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்கு. அப்படி பழிக்கறவங்க முதலில் சாதகரே இல்லை, அப்பறம் அவங்க எங்கருந்து எங்கே விழ?. :)

மெளலி (மதுரையம்பதி) said...

ஆக அருணகிரியும் தனக்கு என்ன உபதேசமாச்சுன்னு சொல்லலை....அஹங்காரம்/மமகாரம் பிடித்த மனுஷன். என்ன உபதேசமாகி சாதனை பண்ணி என்ன பிரயோஜனம்?.. :)

மெளலி (மதுரையம்பதி) said...

//கோபுரத்தின் மீது ஏறிக் கூவியதைப்போல் இதனைச் சொல்லிவிட இது வெறும் ஜென்மம் கடைத்தேறும் மந்திரம் அல்ல!

இந்த ஜென்மம் கடைத்தேறினால், மீண்டும் பிறப்பு நிச்சயம்!

ஆனால், இவர் சொல்ல விழைவது ஜென்மமே இல்லாமல் செய்யும் 'ஒன்று'!//

சூப்பரு. நல்லாச் சொன்னீங்க வி.எஸ்.கே. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//இரண்டாவது பாடலில், இதில்லை, அதில்லை என்று ஒவ்வொன்றாக இல்லை என்று சொல்வது - நேதி நேதி என யக்ஞவால்கியர் உபநிடதத்தில் சொல்வதைப் போன்றுள்ளது அல்லவா!//

ஆமாம், எனக்கும் அதை படித்த போது நேதி-நேதி தான் நினைவுக்கு வந்தது. :)

மெளலி (மதுரையம்பதி) said...

//கோபுரத்தின் மீது ஏறிக் கூவியதைப்போல் இதனைச் சொல்லிவிட இது வெறும் ஜென்மம் கடைத்தேறும் மந்திரம் அல்ல!//

கோபுரத்தின் உச்சியில் கூவியது எதற்கு...எல்லோரும் ஒருமுறை கேட்டுக்கங்க...இதோட முடிந்தது இதன் பலன் அப்படின்னா?... :)

திரும்ப-திரும்ப அந்த மந்திரத்தை உலகில் எல்லோரும் சொல்ல வேண்டும் என்று தானே?.. அப்படி சொல்வது சாதகம் இல்லாம வேற என்னவோ?. :)

மெளலி (மதுரையம்பதி) said...

//நேதி நேதி = அது மட்டுமே இல்லை! இது மட்டுமே இல்லை என்று விசிட்டாத்வைத (விதப்பொருமை) பாணியிலும் சொல்லலாம்!//

ஹிஹிஹி... புரிஞ்துங்க கே.ஆர்.எஸ் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//RATHNESH said...
மேலோட்டமான பொருளும் சுவை (தமிழின் உபயத்தால்);//

அது அருணையார் தமிழ்!

//பிரித்து மேய்ந்தாலும் சுவை (பொருளின் ஆழத்தால்)//

அது அருணையார் பொருள்!

//விருந்து வைத்ததற்கு நன்றி//

இது அருணையார் வைத்த விருந்து! அருணையார் சொல்ல நாம் செய்யும் அலங்காரம்!
நன்றி அவருக்கே ரத்னேஷ் ஐயா! :)

மெளலி (மதுரையம்பதி) said...

கே.ஆர்.எஸ் /ஜிரா / விஎஸ்கே

"உபதேச மந்திர பொருளாகி..." அப்படின்னு கூட திருஆவினன் குடி திருப்புகழ்ல வருமில்ல?..

தெரியாமத்தான் கேட்கிறேன்...அவருக்கு என்ன உபதேசம் கிடைச்சுதுன்னு எங்கும் நேரடியாச் சொல்லையா?...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//VSK said...
அதை 'லொள்ளு' எனச் சொல்லுவது சரியில்லை ரவி!//

SK,
லொள்ளு என்று அருணகிரியாரைப் பதிவில் பழித்துள்ளேன் என்று நினைக்கிறீர்களா? எதற்கும் இன்னொரு முறை வாசித்து விட்டுச் சொல்கிறீர்களா?

**அருணகிரி முதலில் பக்தர்! முடிவிலும் பக்தர்! ஆனால் அவர் தெளிவுக்கு, அவரைச் சித்தர் என்று தாராளமாகக் கொண்டாடலாம்! அம்புட்டு நுட்பம்!**
- இதையும் வாசித்து விடுங்கள்!

//அருணையாரை அணுகும் போது கொஞ்சம் 'அஹம்' என்பதைத் தள்ளி வைத்து வரவேண்டும்!//

அதே!
அந்த "அகம்" என்பதைத் தள்ளி வைத்து விட்டு வந்திருந்தால், இந்த "லொள்ளு" என்பதைப் புரிந்து கொண்டு இருந்திருக்க முடியும்!

மிகவும் நுட்பமான தத்துவங்களை முன் வைக்கிறார் அருணகிரி!
"எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே" என்று அடுத்த சில பாட்டில் பாடவும் போகிறார்! அந்தத் தத்துவத்தை விளக்கவும் போகிறார்! - அதற்கு ஒரு சிறு preamble-தோற்றுவாய் தான் இந்தப் பதிவு!

பாரி ஒருவனும் அல்லன்! - என்று இகழ்ச்சி போல் தொனிக்கும் புகழ்ச்சி தாங்கள் அறியாதது அல்ல!
ஆழ்ந்த தத்துவம் என்பதால் இப்படி எளிமையில் அணுக வேண்டியுள்ளது!

இந்த வித்தையைச் சொல்லிக் கொடுப்பதும் அருணகிரியே தான்! முருகன் செய்யும் லொள்ளு என்று அவர் எங்கும் சொல்லவே இல்லையா? முருகா, உன்னைப் போய் கிழவன் என்கிறதே இந்த உலகம், ஹா ஹா ஹா! - என்று சொல்லவில்லையா என்ன? :)

அஹம் ப்ரம்மாஸ்மி!
இப்போது அதே அஹத்தைத் தள்ளி வைத்து விட்டு வர முடியுமா சொல்லுங்கள்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோபுரத்தின் மீது ஏறிக் கூவியதைப்போல் இதனைச் சொல்லிவிட இது வெறும் ஜென்மம் கடைத்தேறும் மந்திரம் அல்ல!//

//சூப்பரு. நல்லாச் சொன்னீங்க வி.எஸ்.கே. :-)//

பதிவைப் பதிவில் இருந்து படிப்பதும் ஒன்று!
அவரவர் மனத்தில் இருந்து படிப்பதும் மற்றொன்று! :)

பதிவில் இராமானுசா என்ற ஒரு பாட்டோடு, வள்ளலாரையும் உடன் வைத்துள்ளேன்! அதுவும் "கருணை" என்ற விளக்கத்துக்காக மட்டுமே!

ஆனால் "அஹத்தில்" எது தென்பட வேண்டுமோ, அதுவே தென்படுகிறது! என்ன செய்ய! :(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// மதுரையம்பதி said...
சாதனை பண்ணுற யாரும் எதையும் பழித்துப் பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்கு. அப்படி பழிக்கறவங்க முதலில் சாதகரே இல்லை, அப்பறம் அவங்க எங்கருந்து எங்கே விழ?. :)//

பழித்துப் பேசப்பட்ட வாசகங்கள் எவை எவை என்று சுட்டிக்காட்டி உதவினால் நன்றியுடையவனாக இருப்பேன், மெளலி அண்ணா!
தயை கூர்ந்து சொல்லி உதவவும்!

//சாதனை பண்ணுற யாரும் எதையும் பழித்துப் பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்கு//

நட்பற்ற அவுணரை வெட்டிப் பலியிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!

மாள அன்ற மண் **நீசர்கள்** கழுவேற
வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா

இதெல்லாம் என்ன மெளலி அண்ணா?

சொல்லை மட்டுமே பார்த்தால் பழித்தல் போலவே இருக்குல்ல?
பழிக்கின்றவர்கள் எப்படி சாதகர்கள் ஆக முடியும்? சரியாச் சொன்னீங்க! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
ஆக அருணகிரியும் தனக்கு என்ன உபதேசமாச்சுன்னு சொல்லலை....அஹங்காரம்/மமகாரம் பிடித்த மனுஷன்//

உண்மை!
அஹங்காரம்/மமகாரம் பிடித்த மனுஷன்!
அஹங்காரம்/மமகாரம் - இவற்றைப் பிடித்து உலுக்கிய மனுஷன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
//நேதி நேதி = அது மட்டுமே இல்லை! இது மட்டுமே இல்லை என்று விசிட்டாத்வைத (விதப்பொருமை) பாணியிலும் சொல்லலாம்!//

ஹிஹிஹி... புரிஞ்துங்க கே.ஆர்.எஸ் :)//

புரிஞ்சிடுச்சி-ன்னா சந்தோஷம் தான் மெளலி அண்ணா! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
கோபுரத்தின் உச்சியில் கூவியது எதற்கு...எல்லோரும் ஒருமுறை கேட்டுக்கங்க...இதோட முடிந்தது இதன் பலன் அப்படின்னா?... :)//

அதானே! இது என்ன ஒருமுறை கேட்டுட்டுப் போக இன்ஸ்டன்ட் ரசம் - எம்.டி.ஆர் மசாலா மிக்ஸா? :))

//திரும்ப-திரும்ப அந்த மந்திரத்தை உலகில் எல்லோரும் சொல்ல வேண்டும் என்று தானே?.. அப்படி சொல்வது சாதகம் இல்லாம வேற என்னவோ?. :)//

சாதகம் தானே!
சாதகம் இல்லை-ன்னு எங்கு சொல்லி இருக்கு? பதிவிலா? எங்கே?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
மிகப் பெரிய உபன்யாசகர்கள் போல எல்லாத்தையும் எல்லாத்தோடும் சேர்த்து பொருள் சொல்வது என்பது குணானுபாவங்களை போற்றுவது போல. நல்லா ரிலேட் பண்ணுறீங்க... :-)//

ஹா ஹா ஹா! :))
மிகவும் ரசித்-தேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//VSK said...
சும்மா வருவதல்ல ஞானம்!//

உண்மை SK!
சும்மா வருவதல்ல ஞானம்!
"சும்மா" இருப்பதால் வருவதே ஞானம் - என்று அருணையாரும் சொல்லி உள்ளார் அல்லவா?

//முருகன் இறங்கி வந்து காதில் சொன்னதை அப்படியே போட்டு உடைத்துவிட இவரால் முடியாது!//

அடுத்து வரும் பாடல்களில், முருகன் காதில் சொன்னதை, கருணை உள்ளத்தோடு அருணையார் போட்டு உடைக்கிறாரே SK!

//கோபுரத்தின் மீது ஏறிக் கூவியதைப்போல் இதனைச் சொல்லிவிட இது வெறும் ஜென்மம் கடைத்தேறும் மந்திரம் அல்ல!//

கோபுரத்தின் மேல் சொல்லப்பட்டது "வெறும்" ஜென்மம் கடைத்தேறும் மந்திரம் மட்டும் தானா? நல்லாத் தெரியுமா?

//இந்த ஜென்மம் கடைத்தேறினால், மீண்டும் பிறப்பு நிச்சயம்!
ஆனால், இவர் சொல்ல விழைவது ஜென்மமே இல்லாமல் செய்யும் 'ஒன்று'!//

ஓ...அப்படியா?
ஜென்மம் கடைத்தேறல் என்றால் என்ன?
ஜென்மம் இல்லாமல் செய்தல் என்றால் என்ன?
- தாங்கள் விளக்கி அருள வேண்டுகிறேன்!

//இது அவரவர் சாதகம் செய்து மட்டுமே அனுபவித்து உணரக்கூடிய 'ஒன்று'!//

மிகவும் உண்மை!
சாதகத்தில் செலுத்தவும், சாதகத்தில் சிதறாது இருக்கவும், உபதேசம் தேவை தானே? அதைச் சொல்லி அருள வேணாமா?
அதையும் அருணகிரி "எல்லாருக்கும்" மறைக்காது சொல்லிக் கொடுக்கிறார்!

//இதனைச் சூசகமாகத்தான், இப்படித்தான், சொல்லி ஆசையைத் தூண்டிவிட்டு, சாதகனை உயரச் செல்லவைக்க முடியும்!//

"ஆசையைத் தூண்டி"த் தான் ஒரு சாதகனைச் செல்ல வைக்க முடியுமா என்ன? - ஈசனோடு ஆயினும் "ஆசை" அறுமின்கள்!

மெளலி (மதுரையம்பதி) said...

//பழித்துப் பேசப்பட்ட வாசகங்கள் எவை எவை என்று சுட்டிக்காட்டி உதவினால் நன்றியுடையவனாக இருப்பேன், மெளலி அண்ணா!
தயை கூர்ந்து சொல்லி உதவவும்!//

நீங்க பழித்தீர்கள் அப்படின்னு சொல்லல்லை கே.ஆர்.எஸ். சாதகம் பண்றவங்களது படோபம் பற்றி கிழே இருப்பதை படித்துட்டு நானும் ஆமோதித்தே கமெண்டினேன்.

//நிறைய பேருக்கு, சாதகம் செய்யறேன் பேர்வழி-ன்னு ஆத்மா, ஞானம்-ன்னு எல்லாம் பேசிட்டு, அந்த மலையில் என்ன எழுப்பிக்கறாங்க?
ஆணவம், படோபடம், விளம்பரம், புகழ்ச்சி மாயை - இதெல்லாம் தான் ஏத்திக்கறாங்க!//

ஆமோதித்தலுடன் நல்ல சாதகன் (அது எந்த வழியான ஆன்மிக சாதனையாக இருந்தாலும்)மற்றதை பழிக்கமாட்டான்னு சொன்னேன். அஷ்டே. நீங்க பழித்ததாக சொல்லவில்லை:)

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆனால் "அஹத்தில்" எது தென்பட வேண்டுமோ, அதுவே தென்படுகிறது! என்ன செய்ய! :(//

நீங்க அழுவாச்சி பொம்மை போட்டாலும், மேல இருக்கும் உங்க பதிலுக்கு நான் நல்லாவே சிரிச்சேன் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
ஆமோதித்தலுடன்...
நல்ல சாதகன் (அது எந்த வழியான ஆன்மிக சாதனையாக இருந்தாலும்)மற்றதை பழிக்க மாட்டான்னு சொன்னேன்//

புரிந்துணர்வுக்கு நன்றி மெளலி அண்ணா!
உண்மை தான் அண்ணா! நல்ல சாதகர்களிடத்தில் பழிப்புணர்வு இருக்காது! ஏன் தெரியுமா?

பதிவில் சொன்ன அதே காரணம் தான்!
** ஆக, ஆத்ம ஒளியில் எழுந்த ஞான மலையின் மேல்...கருணை இருக்கணும்! **
காருண்யத்தினால் பழிப்புணர்வு பிறக்காது!

அருணகிரியார் ஒரே அடியில் சொல்லிட்டாரு!
** உச்சியின் மேல், அளியில் விளைந்தது ஒரு ஆனந்தத் தேனை **

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அன்பர்களுக்கு முக்கியமாக ஒன்றை இங்கே சொல்லிக் கொள்ள விழைகின்றேன்.

//நிறைய பேருக்கு, சாதகம் செய்யறேன் பேர்வழி-ன்னு//

இப்படிப் பதிவில் ஒரு வாசகம் இருக்குமே ஆனால், அது நல்ல முறையில் சாதகம் செய்பவரைக் குறிப்பிடுவது அன்று! அதுக்குத் தான் மிகவும் எச்சரிக்கையாக "எத்தனை "ஸோ கால்ட் ஸ்வாமி-ஜிக்களைப்" பார்க்கிறோம்" என்றும் கூடவே சேர்த்துக் கொள்கிறேன்!

போலிச் சாமியார்கள் வெறுமனே டுக்ருங் கரணே-ன்னு முணுமுணுக்கிறார்கள் என்று ஆதிசங்கரர் சொல்லும் போது, உண்மையான துறவிகள் எல்லாம், அச்சோ சங்கரர் தங்களைத் தான் குறிப்பிடறாரோ-ன்னா மனம் கலங்குவார்கள்? இல்லையே! அது போலத் தான் இங்கும்!

பதிவில் காணலாகும் அருணகிரியாரின் நுட்பக் கருத்துக்களை மட்டும் காணுங்கள்! கண்டு விவாதியுங்கள்! விவாதித்து கருத்து ஆக்குங்கள்! - இது குணானுபவ பாக்கியம்!

கேஆரெஸ் இதை நினைச்சித் தான் இப்படி எழுதினானோ, அதை நினைச்சித் தான் அப்படி எழுதினானோ-ன்னு பார்த்துக்கிட்டு இருந்தா - இது கும்மி பாக்கியம்! :)

எது தங்களுக்கு வேண்டுமோ, அதைத் தாராளமாகச் செய்யலாம்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அன்பர்களுக்கும் அடியவர்க்கும் இன்னொன்றும் சொல்லிக் கொள்ள விழைகின்றேன்!

பதிவில் இராமானுசரை வேண்டுமென்றே நுழைத்தோ, இல்லை அவரை உயர்த்துவதற்காகப், பிறரைத் தாழ்த்தியோ...வாசகங்கள் இருந்தால், இதோ அடியேன் கன்னம்! பளார் என்று அறைந்து கொள்ளுங்கள்!

ஆனால் அப்படி ஒரு வாசகம் இருக்கா? சொல்லுங்களேன்?

அருணகிரியார் அளியால் (கருணையால்) விளைந்த தேன் என்கிறார்; அதை விளக்கும் போது பரங்கருணைக்கு எடுத்துக்காட்டாக இராமானுசரையும் வள்ளலாரையும் காட்டினேன்!

அதுக்கு எதுக்குடா இராமானுசரைக் காட்டுற? இது கந்தரலங்காரமா இல்லை கண்டவன் அலங்காரமா-ன்னு கேட்டா, அது வேற பிரச்சனை!
அடியேன் அருணகிரி காட்டிய அதே வழியில் தான் செல்கிறேன்!

முன் பகுதி முழுக்க முருகனைப் புகழ்ந்து,
பின் பகுதி முழுக்க, எந்தை வருக, ரகு நாயக வருக, என் கண் வருக, எனது ஆருயிர் வருக, அபிராமா என்கிறார் அருணகிரி!

முருகனை வருக வருக-ன்னு பாட வந்தீங்களா? இல்லை வேறு யாரையாச்சும் வருக வருக-ன்னு பாட வந்தீங்களா? இது திருப்புகழா இல்லை திருமால் புகழா?? - என்று அதே கேள்வி கேட்க முடியுமா, எங்கள் ஐயன் அருணகிரியை?

அப்படி இருக்க, ஏன் இந்த ஒப்பீடு?

//கோபுரத்தின் மீது ஏறிக் கூவியதைப்போல் இதனைச் சொல்லிவிட இது வெறும் ஜென்மம் கடைத்தேறும் மந்திரம் அல்ல!//

ஜென்மம் கடைத்தேறும் மந்திரம் என்ன?
ஜென்மத்தை அறுக்கும் மந்திரம் என்ன?
மந்திரத்தின் திருப்பெயரையாச்சும் அறியத் தருவீர்களா?

மெளலி (மதுரையம்பதி) said...

//கேஆரெஸ் இதை நினைச்சித் தான் இப்படி எழுதினானோ, அதை நினைச்சித் தான் அப்படி எழுதினானோ-ன்னு பார்த்துக்கிட்டு இருந்தா - இது கும்மி பாக்கியம்! :)

எது தங்களுக்கு வேண்டுமோ, அதைத் தாராளமாகச் செய்யலாம்! :))//

சூப்பரு...

ஆனாப்பாருங்க..உங்க போஸ்ட்ல தான் எனக்கு விளையாட தோணுது...ஏன்னு தெரியல்ல :)

மெளலி (மதுரையம்பதி) said...

//போலிச் சாமியார்கள் வெறுமனே டுக்ருங் கரணே-ன்னு முணுமுணுக்கிறார்கள் என்று ஆதிசங்கரர் சொல்லும் போது, உண்மையான துறவிகள் எல்லாம், அச்சோ சங்கரர் தங்களைத் தான் குறிப்பிடறாரோ-ன்னா மனம் கலங்குவார்கள்? இல்லையே! அது போலத் தான் இங்கும்!//

இங்கும் யாரும் கலங்கல்லன்னு தான் நினைக்கிறேன்..

ஏன்னா எனக்கு தெரிந்தவரையில் நாம யாரும் சாதகன்னு சொல்லிகற லெவலுக்கு அருகில் கூட இல்லை அப்படின்னுதான் தோணுது.

Kavinaya said...

//ஹிஹி! இதுக்கு மேலச் சொன்னா, இதைப் படிச்சிக்கிட்டு வர எங்க அம்மா பயந்துருவாங்க! நிப்பாட்டிக்கறேன்! :) //

நானுமே பயந்து போய் படிக்கிறத நிப்பாட்டுறதுக்குள்ள, நல்ல வேளையா நீங்களே நிப்பாட்டிட்டீங்க :)

தெய்வ-வள்ளி பொருள் சொன்ன விதம் அருமை.

(பின்னூட்டங்களை படிச்சதுல, பதிவு பத்தி வேற என்ன சொல்ல வந்தேன்னு மறந்து போச்சு! வேற எதும் இருந்தா அப்புறம் வரேன் கண்ணா :)

Kavinaya said...

பாடல்களோட ஒலிச் சுட்டிகள் எனக்கு சரியாதான் வேலை செஞ்சது...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
சூப்பரு...ஆனாப்பாருங்க..உங்க போஸ்ட்ல தான் எனக்கு விளையாட தோணுது...ஏன்னு தெரியல்ல :)//

ஹா ஹா ஹா!
அதான் என்னோட ராசி! :)

தாராளமா விளையாடுங்கண்ணா! நம்ம பசங்களோடு தானே வெளையாட முடியும்! அதெல்லாம் ஒன்னுமே சொல்ல மாட்டேன்!

ஆனா விளையாட்டுல, மெயின் மேட்டரையும் மறக்கக் கூடாது-ல்ல? இப்போ பதிவில் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுங்க! டார்ச் லைட் அடிங்க! நீங்க அடிக்காட்டி யாரு அடிப்பா? :)

ஜீவா-வின் அ+சரீரி-க்கு விளக்கம் ப்ளீஸ்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
ஏன்னா எனக்கு தெரிந்தவரையில் நாம யாரும் சாதகன்னு சொல்லிகற லெவலுக்கு அருகில் கூட இல்லை அப்படின்னுதான் தோணுது//

ஹா ஹா ஹா
"நாம"-ன்னு எல்லாரையும் சொன்னா எப்படி? ஏதோ என்னைச் சொன்னீங்கன்னா அர்த்தம் இருக்கு! உங்களை நீங்க வேணும்னே அப்படித் தான் சொல்லீப்பீங்க! ஆனா மற்ற நண்பர்கள் எல்லாம் அடியவர்கள் தான்! சிலர் சாதகர்களா கூட இருக்கலாம்-ல? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
பாடல்களோட ஒலிச் சுட்டிகள் எனக்கு சரியாதான் வேலை செஞ்சது...//

Dankees ka! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

SK ஐயா
லொள்ளு என்ற சொல் தவறான புழக்கம் (பிரயோகம்)-அது தான் உங்க வருத்தம் என்றால் அடியேன் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்!

இனிமையான கேலிக்கு லொள்ளு என்ற சொல் தான் இளைஞர்களிடையே புழக்கம்! அதைத் தான் அப்படியே கையாண்டேன்! இது காளமேகக் கவிகள் போலத் தொன்று தொட்டு வருவது தான்! மயிலை மன்னாரு, அவரு வழக்குல, ஐயன் வள்ளுவரை உரிமை பாராட்டுவது இல்லையா? அதே மாதிரி எடுத்துக் கொள்ளுங்கள்!

ஆனால் நீங்கள் சொல்வது போல், அருணகிரியார் மறை பொருளாக எல்லாம் மறைத்து வைக்கவில்லை! முருகன் அவருக்குத் தந்த "ரகசியத்தை" நமக்கும் அப்படியே தந்துவிட்டுத் தான் செல்கிறார்!

ரகசியத்தின் பதவுரை பொழிப்புரையைத் தான் "எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே" என்று கேட்கிறார்!

மற்றபடி அகார-உகார-மகார தத்துவத்தையும், இன்ன பிற "ஜென்மமே இல்லாமல் செய்யும் மந்திரங்களை" எல்லாம் மறை பொருள்-ன்னு சொல்லிச் சாதகர்க்கு மட்டும் மறைச்சி வைக்கல! அப்படியே அள்ளியள்ளி அநுபூதியில் கொட்டித் தான் கொடுக்கிறார்!

நல்ல வேளை,
அருணகிரியின் சந்தத் தமிழை, தமிழக ஆன்மீக உலகம், அறைக்குள் பூட்டி வைக்காமல் இருந்தது! நாமும் இழக்காமல் இருந்தோம்! முருகனருள் தான் முன்னின்றது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
நானுமே பயந்து போய் படிக்கிறத நிப்பாட்டுறதுக்குள்ள, நல்ல வேளையா நீங்களே நிப்பாட்டிட்டீங்க :)//

எனக்குத் தெரியும் அம்மா, அக்கா சைக்காலஜி! :)

//தெய்வ-வள்ளி பொருள் சொன்ன விதம் அருமை//

நன்றி-க்கா!

//பின்னூட்டங்களை படிச்சதுல, பதிவு பத்தி வேற என்ன சொல்ல வந்தேன்னு மறந்து போச்சு!//

சாரி-க்கா!
பல நேரங்களில் தேவையற்ற கும்மிகள், பதிவின் சாரத்தை மறக்கடிக்கச் செய்து விடுகிறது! நம் பதிவுலகில், இதைப் பலர் பதிவுகளில் கண்டுள்ளேன்! இனி இந்த விஷயத்தில், அடியேன் இன்னும் கொஞ்சம் ஸ்டிரிக்ட்டா இருக்கப் போகிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்தக் களேபரத்தில், ஜீவா முன் வைத்த அருமையான சிந்தனை அப்படியே நின்று விட்டதே! சாரி ஜீவா! வாங்க!

அசரீரி அன்று! சரீரி அன்றே! =
கேட்டிருந்தேனே! சரீரி-ன்னா ஆத்மா என்று கொள்ளலாம்!
அப்போ அ-சரீரி என்றால் உடல்-ன்னு கொள்ளணுமோ?

தான் அன்று! நான் அன்று! = தான்/நான் ரெண்டும் வேற வேறயா ஜீவா?

Test said...

மிகவும் நல்ல பதிவு, நல்ல பொருளுரை

குமரன் (Kumaran) said...

இந்தத் தலைப்பு தேவை தானா இரவிசங்கர்? நீங்கள் அருணகிரிநாதர், பெருமாள், முருகன், இராமானுஜர் என்று எல்லோருக்கும் இப்படிப்பட்ட தலைப்பு தான் கொடுக்கிறீர்கள். ஆனால் நம் நண்பர்களில் சிலருக்கு முருகன், அருணகிரிநாதர் இவர்களுக்கு நீங்கள் தரும் தலைப்பும் கருத்தும் தானே கண்ணில் படுகிறது. அவர்கள் வேறொரு இடத்தில் 'இராமானுஜர் செய்யும் லொள்ளு', 'விஷ்ணு செய்யும் லொள்ளு' என்று பேசத் தொடங்குவார்களே. அப்படி சொல்வதில் எனக்கு வருத்தம் இல்லை. அவர்களின் வருத்தத்தின் விளைவாக அப்படி சொல்கிறார்களே; அந்த வருத்தம் தேவை தானா என்பது தான் என் வருத்தம்.

குமரன் (Kumaran) said...

ஓ. மலைத்தேன் தான் சிவானந்தமா? அப்ப அது நமக்குக் கிடைக்காது. முடவன் கொம்புத்தேனுக்கோ மலைத்தேனுக்கோ ஆசை படலாமா? :-(

மனிதனை அகங்காரம் மட்டுமா உண்கிறது? முதலும் முடிவும் இல்லாததுன்னு சொன்னீங்களே அந்த 'மலைத்தேனும்' தானே உண்கிறது?! :-)

பூதரம் என்றால் மலையா? ஏன் மலைக்கு அந்தப் பெயர் வந்தது?

சிவானந்தம் தெரியும், முருகனானந்தமும் தெரியும். யாருங்க அது அம்பிகானந்தம், மாலானந்தம், அச்சுதானந்தம் - இவங்கள்லாம் உங்க அலுவலகத்துல வேலை பாக்குற பொண்ணுங்களா? :-)

ஆதி என்றால் தோற்றம், முதல் என்ற பொருள் சரி. ஆனால் அநாதி என்றால் முடிவா? அநாதி என்றால் தொடக்கமில்லாத என்றே பொருள் படித்துவிட்டு இங்கே முடிவு என்ற பொருளைப் படிக்க ஏதோ குறைவது போல் இருக்கிறது. ஆனால் முடிவில்லாத வெளி என்று அநாதி இல் வெளிக்குப் பொருள் சொல்வதும் பொருத்தமாகத் தோன்றுகிறது.

வெறும் தனின்னா ஓம்காரம்ன்னு எப்படி சொன்னீங்க? அது எதுவா வேண்டுமானாலும் இருக்கலாமே?

தமிழில் இடுகுறிப்பெயர்களே இல்லை என்று சொல்லுவார்கள் சில தமிழறிஞர்கள்.

குமரன் (Kumaran) said...

அன்றே என்பதற்கு 'அல்லவா?' என்ற பொருளும் 'ஆமாம்' என்ற பொருளும் இடத்திற்குத் தகுந்த படி புழங்கியிருக்கிறது தான். ஆனால் இங்கே 'இல்லை' என்ற பொருளில் தான் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

'தானும் இல்லை', 'நானும் இல்லை' என்பதும் கொஞ்சம் குழப்புகிறது.

சரீரி, அசரீரி என்பதற்கு உருவம், அருவம் என்றே பொருள் கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. 'உள்ளதும் இல்லதும் அல்லது அவன் உரு' என்பார் நம்மாழ்வார். அதற்குப் பொருள் சொல்லும் போது 'உருவம் உள்ள அசேதனமும் இல்லை அவன் உரு', 'உருவம் இல்லாத சேதனமும் இல்லை அவன் உரு' என்று சொல்லுவார்கள். அதனையே இங்கே ஓசை முனியும் சொல்கிறாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில் விசிஷ்டாத்வைதத்திற்கும் சைவசித்தாந்தத்திற்கும் 'பரம்பொருள் யார்' என்பதை தவிர்த்து மற்ற கருத்துகளில் மிகுந்த ஒற்றுமை உண்டு என்பதே என் புரிதல்.

குமரன் (Kumaran) said...

எஸ்.கே. அப்படி என்றால் கோபுரத்தில் ஏறி கூவி அழைத்துச் சொன்னது 'இந்த' ஜன்மத்தை மட்டும் கரையேற்றி மீண்டும் நிச்சயமாகப் பிறப்பிக்குமா? நான் அறிந்தவரை 'கோபுரத்தில் ஏறிக் கூவியவர்' அப்படி சொல்லவில்லையே????

அருணகிரியாரை நெருங்கும் போது மட்டும் அஹத்தை விலக்க வேண்டுமா? 'கோபுரத்தில் ஏறிக் கூவியவரை'ப் பற்றி சொல்லும் போது அஹம் கூடவே இருக்கலாமா? சொன்னதைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றுகிறது எஸ்.கே.

ஆதி சங்கரர் பல பாடல்களில் மீண்டும் மீண்டும் பாடச் சொன்னதை, எப்போது பேசினாலும் ஆசாரியர்கள் முடிவில் சொல்லுவதை, எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் 'ஸ்மிருதி' என்ற பின்னொட்டுடன் சொல்லப்படுவதை 'இந்த' ஜன்மத்தை மட்டுமே கடைத்தேற்றுவது என்று நீங்கள் சொன்னதை மட்டுமே வைத்து அதனை மௌலி வழி மொழிந்ததை மட்டுமே வைத்து இது எல்லா அத்வைதிகளில் கருத்து என்று எண்ண விரும்பவில்லை. வயதிலும் அனுபவத்திலும் அறிவிலும் மூத்தவரான நீங்கள் இப்படி எழுதியதில் எனக்கு மிகுந்த வருத்தம். நிந்தா ஸ்துதியைப் புரிந்து கொள்ளாமல் தேவையற்று சினந்து அந்த சினத்தில் சொல்லத் தகாததை எல்லாம் சொல்லிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

:-(((((

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர்,

முதல் இரு பின்னூட்டங்களும் இடுகையை மட்டும் வெட்டி ஒட்டி வைத்திருந்ததைப் பேருந்தில் படித்த போது அப்போதே தோன்றிய எண்ணங்கள். அவற்றை வீட்டிற்கு வந்தவுடன் பின்னூட்டங்களாக இட்டேன். முதல் பின்னூட்டத்திற்கு வேறு அன்பர்களை மனத்தில் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது பின்னூட்டங்களைப் படிக்கும் போது எஸ்.கே. எழுதியிருப்பதைப் பார்த்தால் மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் நிந்தா ஸ்துதியாக எழுதுகிறீர்கள். ஆனால் அதனைப் புரிந்து கொள்பவர்கள் மிகவும் குறைவாகவே இங்கே இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு அடுத்த இடுகைக்குத் தலைப்பை இடுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

jeevagv said...

//தான் அன்று! நான் அன்று! = தான்/நான் ரெண்டும் வேற வேறயா ஜீவா?//
இப்படியும் பொருள் கொள்ளலாமோ:
"தான்" அன்று : மட்டும் அன்று : மேலே சொன்னவை மட்டும் அன்று.
நான் அன்று : நான் மட்டும் அன்று, என்னில் மட்டும் அன்று.
அசரீரி அன்று: அசரீரியாக, முருகன் கொடுத்த குறிப்பும் அன்று.
பின் என்னதான் என்றால், பரமனின் துளியாய் இந்த ஜீவனில் இருப்பது, அந்த ஆன்மாவே என்று, தன்னை அறிதலே, பரமனை அறிவதாகும்.

சரீரி, அசரீரி என்பவற்றுக்கு நேரடியான பொருளைக் கொள்ள யத்தனித்தபோது தோன்றிய எண்ணங்கள் இவை, கே.ஆர்.எஸ். மற்றபடி உங்கள் விளக்கத்தினை மறுக்கவில்லை. தலைப்பில் இருந்த அந்த மூன்றெழுத்தைக் கூட கவனிக்கவில்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Logan said...
மிகவும் நல்ல பதிவு, நல்ல பொருளுரை//

நன்றி லோகன்! அலங்காரம் செய்ய தொடர்ந்து வாங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இரவிசங்கர்,
எஸ்.கே. எழுதியிருப்பதைப் பார்த்தால் மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் நிந்தா ஸ்துதியாக எழுதுகிறீர்கள். ஆனால் அதனைப் புரிந்து கொள்பவர்கள் மிகவும் குறைவாகவே இங்கே இருக்கிறார்கள்//

:(

அடியேனை மன்னித்து விடுங்கள் குமரன்! எதற்கு இத்தனை வருத்தம்?

இங்கே இறைவனைப் புரிந்து கொள்ள அன்பர்கள் எடுக்கும் முயற்சியில், ஆயிரத்தில் ஒரு பங்கு, சக அடியவர்களை/மனிதர்களைப் புரிந்து கொள்ள எடுத்தால்...இது போன்ற பேதா பேதங்கள் தோன்றாது!

இத்தனை மாதங்கள் அடியேனைப் பார்க்கிறார்கள்! கந்த பிரானுக்கு உஷத்காலம் தொட்டு, அர்த்த ஜாம அலங்காரங்கள் செய்வதை எல்லாம் சொல்லி மகிழும் அடியேனைப் பார்த்த பின்னரும், இப்படி ஒரு பேச்சு வருகிறது!

இவன் இப்படியெல்லாம் தாழ்த்திப் பேசக் கூடியவன் தானா? என்ற நோக்கத்தைச் சிந்தித்திருந்தால் இவை எல்லாம் எழாது! ஆனால் இங்கு நோக்கம் பார்ப்பவர்கள், ஆத்திகரோ நாத்திகரோ, மிக மிக அரிது!

அப்படியே நாயேன், ஒரு கால் தாழ்த்தி இருந்தாலும், நேரடியாக அடியேனைக் கண்டிக்கலாம்! இல்லை பதிலுக்கு என்னைத் தாழ்த்தி அடிக்கலாம்! அதை விடுத்து திரு மந்திர அர்த்தங்களைத் தாழ்த்திப் பேதா பேதம் காண்பது.... :(

வேலுண்டு வினையில்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
....
என்பதை நினைவில் கொண்டு அடுத்த இடுகைக்குத் தலைப்பை இடுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்//

அடுத்த இடுகை என்ன? இந்த இடுகைக்கே தலைப்பை மாற்றி விட்டேன்!
- முருகன் அருணகிரிக்குச் செய்த உபதேசம் என்ன?

எம்பெருமானின் திருமுக உல்லாசத்துக்குத் தான் நாம்!
நம் கும்மி உல்லாசத்துக்கு எம்பெருமான் இல்லை! ஹரி ஓம்!

மெளலி (மதுரையம்பதி) said...

அசிரீரி அப்படிங்கற சொல் வந்தா அடுத்ததாக 'கேட்டது' அசிரீரியை 'கேட்டார்கள்' இப்படி ஏதாச்சும் இருக்கும். ஆகையால் அசிரீரி அப்படின்னா அது அருவத்தைத்தான் குறிக்கும்.

மெளலி (மதுரையம்பதி) said...

//அருணகிரியாரை நெருங்கும் போது மட்டும் அஹத்தை விலக்க வேண்டுமா? 'கோபுரத்தில் ஏறிக் கூவியவரை'ப் பற்றி சொல்லும் போது அஹம் கூடவே இருக்கலாமா? சொன்னதைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றுகிறது எஸ்.கே//

குமரன்,

நீங்க மேல சொல்லும் பொருள்ள எஸ்கே சொல்லவில்லைன்னு தான் நான் நினைக்கிறேன். அவர் அப்படிச் சொல்லியிருந்தா அந்த பொருளை நான் வழி மொழியல்லைன்னு மட்டும் சொல்லிக்கறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//இப்போது பின்னூட்டங்களைப் படிக்கும் போது எஸ்.கே. எழுதியிருப்பதைப் பார்த்தால் மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் நிந்தா ஸ்துதியாக எழுதுகிறீர்கள். ஆனால் அதனைப் புரிந்து கொள்பவர்கள் மிகவும் குறைவாகவே இங்கே இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு அடுத்த இடுகைக்குத் தலைப்பை இடுங்கள் //

குமரன்,

ஹிஹி...எதை நிந்திக்கிறோம், எவ்வளவு தூரம் நிந்திக்றோம் அப்படிங்கறது இருக்கில்ல?. இதைச் சொல்லும் போது நான் இந்த இடுகையை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. இதை நான் ரொம்ப விண்டு விரிச்சு எழுதினா அப்பறம் அது வேற விதமா போயிடும், அது வேண்டாம்.ஆனா நான் சொல்ல வருவது கே.ஆர்.எஸுக்கு நல்லாவே புரியும், ஆனா புரியாத மாதிரி ஏதோ சொல்றாரு.

இதுக்கு நீங்க இப்படி ஒரு அர்த்தம் கொடுப்பது/ஆமோதிக்கறது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கு.

மெளலி (மதுரையம்பதி) said...

//நாம"-ன்னு எல்லாரையும் சொன்னா எப்படி? ஏதோ என்னைச் சொன்னீங்கன்னா அர்த்தம் இருக்கு! உங்களை நீங்க வேணும்னே அப்படித் தான் சொல்லீப்பீங்க! ஆனா மற்ற நண்பர்கள் எல்லாம் அடியவர்கள் தான்! சிலர் சாதகர்களா கூட இருக்கலாம்-ல? :)//

யார் சாதகர் அப்படிங்கறது அவரவருக்கு தெரிந்தால் போதும். நான் யார் அடுத்தவரைப் பற்றி சொல்ல?.

மேலே சொன்னதில் இருக்கும் 'நாம்' என்பதை வாபஸ் வாங்கிக்கறேன் கே.ஆர்.எஸ்.

அதேபோல நிந்தாஸ்துதியோ/நொந்தாஸ்துதியோ நீங்க எந்த ஸ்துதி பண்ணுனாலும் சரி, பரிகாசம் பண்ணுனாலும் சரி, அது உங்க மனசுக்குத் தெரியும் நீங்க எதை மனசுல வச்சு எதை எழுதுறீங்க/சொல்றீங்கன்னு. இனி நானும் இதை எல்லாம் கேள்வி கேட்க மாட்டேன். ஒகே-யா?

குமரன் (Kumaran) said...

//நீங்க மேல சொல்லும் பொருள்ள எஸ்கே சொல்லவில்லைன்னு தான் நான் நினைக்கிறேன்.//

சரி மௌலி. நான் புரிந்து கொண்டதே தவறாக இருக்கட்டும். எஸ்.கே. ஐயா 'கோபுரத்தின் மீது ஏறிக் கூவியதைப்போல் இதனைச் சொல்லிவிட இது வெறும் ஜென்மம் கடைத்தேறும் மந்திரம் அல்ல! இந்த ஜென்மம் கடைத்தேறினால், மீண்டும் பிறப்பு நிச்சயம்!' என்று சொன்ன போது எந்த பொருளில் சொன்னார் என்று நீங்களோ அவரோ விளக்க வேண்டுகிறேன்.

என் புரிதல்: கோபுரத்தின் மீது ஏறிக் கூவிச் சொன்னது திருமந்திரம் எனப்படும் நாராயண மந்திரம். சொன்னவர் இராமானுஜர். எஸ்.கே. ஐயா சொன்னது 'அந்தத் திருமந்திரம் வெறும் ஜென்மம் கடைத்தேறும் மந்திரம். அந்த மந்திரத்தால் இந்த ஜென்மம் மட்டுமே கடைத்தேறும். பின்னர் மீண்டும் பிறப்பு நிச்சயம்'. இந்தப் பொருளில் அவர் சொன்னாரா இல்லையா என்று அவரிடமே கேட்டுச் சொல்லுங்கள். அப்படியே நீங்கள் எந்த விதத்தில் புரிந்து கொண்டீர்கள் என்றும் சொல்லுங்கள்.

அருணகிரியார் சொன்ன மந்திரம்/சொல்லாத மந்திரம் உயர்வானது என்று சொல்ல 'கோபுரம் ஏறிக் கூவிச் சொன்ன மந்திரத்தை'த் தாழ்த்த வேண்டுமா? கோபுரம் ஏறிக் கூவிச் சொன்னதால் உங்கள் பார்வையில் அந்த மந்திரம் அவ்வளவு கேவலமாகப் போய்விட்டதா? அப்புறம் எதற்கு 'பஜ கோவிந்தம்' என்று பாடவேண்டும்? 'நாராயண ஸ்மிருதி' என்று சொல்லவேண்டும்?

குமரன் (Kumaran) said...

எவ்வளவு தூரம் நிந்தித்தாலும் அது நிந்தா ஸ்துதி தான் என்ற தெளிவு இருந்தால் இப்படி பேச இயலாது. என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். எவ்வளவு தூரம் இரவிசங்கர் நிந்திப்பது போல் பேசினாலும் அதெல்லாம் ஒரு நண்பனிடம் எடுத்துக் கொள்ளும் உரிமையைப் போலத் தான். அந்த உரிமையை அவர் எல்லாரிடமும் எடுத்துக் கொள்கிறார். முருகனிடமும் அருணகிரியாரிடமும் மட்டும் இல்லை. மாலவனிடமும் அவன் அடியார்களிடமும் அதையே செய்கிறார். அதில் எந்த 'பேதமும்' அவர் பார்ப்பதில்லை.

அவர் செய்வதெல்லாம் சரி என்ற வாதத்தில் நான் இறங்கவில்லை. எளிமைப்படுத்துகிறேன் என்றும் பலருக்கும் போய் சேர வேண்டும் என்றும் இளைஞர்கள் பேசும் மொழியில் நான் பேசுகிறேன் என்று அவர் சொல்கிறார். அப்படி செய்யும் போது பெரியவர்கள் அதனைப் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொள்ளாமல் அவரை ஏசுங்கள். அவர் ஏற்றுக் கொள்வார். நானும் கேட்டுக் கொள்கிறேன்; அல்லது அவருக்குப் பரிந்து பேசுகிறேன். அதை விட்டு இராமானுஜரின் மிகப்பெரிய சாதனையையும் திருமந்திரத்தையும் தாழ்த்திப் பேசுவதை என்னால் எள்ளளவும் பொறுத்துக் கொள்ள இயலாது. அங்கும் நிந்தா ஸ்துதி தான் செய்யப்பட்டது என்றால் அதனைப் புரிந்து கொள்ளாமல் பேசிவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் என்னுடைய தற்போதைய புரிதலின் படி அது வேண்டுமென்றே தாழ்த்திப் பேசியது; அது கட்டாயம் நிந்தாஸ்துதி இல்லை.

அடியேன் சிறிய ஞானத்தன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//நேரடியாக அடியேனைக் கண்டிக்கலாம்! இல்லை பதிலுக்கு என்னைத் தாழ்த்தி அடிக்கலாம்! அதை விடுத்து திரு மந்திர அர்த்தங்களைத் தாழ்த்திப் பேதா பேதம் காண்பது.... :(//

ஹிஹி!! இது உங்களுக்கு இப்போ தெரியுதுல்ல?...நீங்க மறைமுகமா எதையெல்லாம்/எப்படியெல்லாம் ஏற்றி-இறக்கி பதிவுல எழுதறீங்க? அப்போ அதெல்லாம் எவ்வளவு அடுத்தவரை புண்படுத்தும்...அதிலும் உங்களை ஓரளவு அறிந்தவர்களுக்கு. அது சரியா?. உடனே தரவு எல்லாம் கேட்க வேண்டாம். பதில் என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் சொன்னதுதான்.

நான் எதையும் நிறுவ வேண்டும் என்ற எண்ணத்தில் கேள்விகள்/கமெண்ட் போடுவதில்லை. ஆனா நீங்க எழுதறதும் அப்படித்தானான்னு உங்க ஆழ் மனசுல கேட்டுக்கங்க.

அதே போல நீங்க எந்த கருத்து எழுதினாலும் அது யாரையும் பாதிக்காது/புண்படுத்தாது இருக்கிறான்னும் பார்த்துக்கங்க...

யாருக்கும் எதையும் சொல்ல வேண்டியதில்லை. தன் நெஞ்சறிவது மட்டுமே போதும் :-).

மெளலி (மதுரையம்பதி) said...
This comment has been removed by the author.
மெளலி (மதுரையம்பதி) said...

//கோபுரம் ஏறிக் கூவிச் சொன்னதால் உங்கள் பார்வையில் அந்த மந்திரம் அவ்வளவு கேவலமாகப் போய்விட்டதா? அப்புறம் எதற்கு 'பஜ கோவிந்தம்' என்று பாடவேண்டும்? 'நாராயண ஸ்மிருதி' என்று சொல்லவேண்டும்?//

குமரன்,

கோபுரத்தில் ஏறிச் சொன்னாலும், கூரையினடியில் சொன்னாலும் நாவினிக்கச் செய்வதுதான் நாராயண மந்திரம். அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. விஎஸ்கே அவர்களிடம் கேட்டுச் சொல்லும் அளவிற்கு எனக்கு பரிச்சயம் இல்லை. ஆனால் நான் அவரது பின்னூட்டத்தை வழிமொழிந்தது கே.ஆர்.எஸுக்காக மட்டுமே. அது நாராயணனையோ/ராமானுஜரையோ பழிப்பதாக கண்டிப்பாக நான் பார்க்கவில்லை. நான் அதை நிந்தாஸ்துதி என்று கூடச் சொல்லவில்லை, அது கே.ஆர்.எஸ் புரிதலுக்காக, அவருடைய ரியாக்ஷனுக்காக மட்டுமே!!!

மெளலி (மதுரையம்பதி) said...

//அவர் செய்வதெல்லாம் சரி என்ற வாதத்தில் நான் இறங்கவில்லை. எளிமைப்படுத்துகிறேன் என்றும் பலருக்கும் போய் சேர வேண்டும் என்றும் இளைஞர்கள் பேசும் மொழியில் நான் பேசுகிறேன் என்று அவர் சொல்கிறார். //

நானும் அவர் சொல்வதை எல்லாம் எதிர்ப்பதில்லை குமரன். அவ்வாறான எண்ணம் என் பின்னூட்டங்களில் ஏற்பட்டால் அதற்கு எனது வருத்தங்கள்.

ஆனால் இளைஞர்களுக்கு புரியும் மொழியில் பேசுறேன்னு தமிழ் சினிமா வசனங்களில் எழுதுகையில் பேசினா அது அடுத்தவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதை உணராதவரா அவர்?. மன்னிக்கவும், அவர் தமது எழுத்துக்களை உணராமல் எழுதுகிறார் என்று தோன்றவில்லை.

மெளலி (மதுரையம்பதி) said...

//பதிவின் சாரத்தை மறக்கடிக்கச் செய்து விடுகிறது! நம் பதிவுலகில், இதைப் பலர் பதிவுகளில் கண்டுள்ளேன்! இனி இந்த விஷயத்தில், அடியேன் இன்னும் கொஞ்சம் ஸ்டிரிக்ட்டா இருக்கப் போகிறேன்!//

மேலே இருப்பது எனக்கு என்று நினைத்தே பதிலளிக்கிறேன்.

நீங்க பதிவுல எப்படி வேணா எழுதுவீங்க, அதை கேள்வி கேட்கக் கூடாது அப்படித்தானோ?.

அல்லது எனக்கு தவறுன்னு தொன்றுவது உமக்குத் தவறில்லை அப்படின்னு எடுத்துக்கிட்டு அமைதியா போகணும் அதானே நீங்க எதிர்பார்க்கிறீங்க?

நீங்க ஏன் ஸ்டிரிக்ட்டாயிருக்கணும், நானே கேள்விகளை குறைத்துக் கொண்டு, படிச்சுட்டு, உள்ளேனய்யா போட்டுட்டு போயிடறேன். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//நாவினிக்கச் செய்வதுதான் நாராயண மந்திரம்//

இப்படிச் சொல்றதால அது முக்திக்கு வழிசொல்லாது என்று நான் சொல்வதாக பொருள் கொள்ள வேண்டாம்....சிலருக்கு நாராயண மந்திரம், சிலருக்கு மஹா ஷோடசி மந்திரம், சிலருக்கு பஞ்சாக்ஷரம். ஏதை சொல்வதானாலும் அடுத்தவரை பாதிக்காது, பழிக்காது இருப்பது அவசியம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆனா நான் சொல்ல வருவது கே.ஆர்.எஸுக்கு நல்லாவே புரியும், ஆனா புரியாத மாதிரி ஏதோ சொல்றாரு//

கே.ஆர்.எஸுக்கு நல்லாவே புரியலை! சத்தியமாகவே புரியவில்லை!
இப்போதாவது இங்கே புரிவது போல் அனைவரும் அறியச் சொல்கிறீர்களா?

அவரவர், அவரவர் மனத்தில், அவருக்குப் புரியும், இவருக்குத் தெரியும் என்று ஏதேதோ நினைத்துக் கொண்டு, வெட்ட வெளியில் பேசுவது எந்த பயனும் தாராது! எம்பெருமான்/எம்பெருமாட்டி இல்லை பகவான்/பகவதி சாட்சியாக இங்கே வெளிப்படையாகச் சொல்லுங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஹிஹி!! இது உங்களுக்கு இப்போ தெரியுதுல்ல?...நீங்க மறைமுகமா எதையெல்லாம்/எப்படியெல்லாம் ஏற்றி-இறக்கி பதிவுல எழுதறீங்க?//

மறைமுகமாகவோ இல்லை நேரடியாகவோ.....
எதை
எப்படி
எங்கே
எப்போது
ஏற்றி-இறக்கினேன் என்பதை இங்கே அறியத் தாருங்கள்!
எம்பெருமான் திருவடி சாட்சியாக அறியத் தாருங்கள்!
அத்தனையும் மூடி விட்டு ஓடுகிறேன்!

//அப்போ அதெல்லாம் எவ்வளவு அடுத்தவரை புண்படுத்தும்...அதிலும் உங்களை ஓரளவு அறிந்தவர்களுக்கு. அது சரியா?//

யாரை
எப்போது
எந்த வார்த்தையால்
புண்படுத்தினேன்?
அறியத் தாருங்கள்!
அத்தனையும் மூடி விட்டு ஓடுகிறேன்!

//உடனே தரவு எல்லாம் கேட்க வேண்டாம்.//

ஏன் கேட்கக் கூடாது?
Why should not there be a fact based discussion?

மறைமுகமா ஏற்றி-இறக்கி பதிவுல எழுதறேனா?
மறைமுகமா? அப்படின்னா என்ன?

இதை நினைச்சித் தான் இப்படி எழுதினான்,
அதை நினைச்சித் தான் அப்படி எழுதினான்,
என்பது தானே உங்கள் துணிபு?

வாக் தேவி, மானசா தேவி...போல் அடியேன் வாக்கிலும், மனதிலும் உறைந்து, இந்த மறைமுகத்தைக் கண்டுபிடித்தீர்களா?

ஆம் என்று சொல்லுங்கள்! மொத்தமும் மூடி விடுகிறேன்!

உங்கள் பல நாள் குமுறலை, இன்று இங்கே கொட்டியமைக்கு நன்றி!
ஆனால் அந்தக் குமுறலில் நியாயம் உள்ளதா, இல்லை வெறுமனே ஆதங்கம் உள்ளதா என்பதை நுணுக்கிப் பார்த்து, நிவேதனத் தட்டில் வையுங்கள்! இறைவி பிரசாதிப்பதை அப்படியே உச்சிஷ்டமாக ஏற்றுக் கொள்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆனால் நான் அவரது பின்னூட்டத்தை வழிமொழிந்தது கே.ஆர்.எஸுக்காக மட்டுமே//

//அது கே.ஆர்.எஸ் புரிதலுக்காக, அவருடைய ரியாக்ஷனுக்காக மட்டுமே!!!//

ஆக...
அடியேன் மர-மண்டைக்கு நேரடியாக எடுத்துக் காட்ட மாட்டீர்கள்! இப்படி ஆச்சார்யர்களைச் சொல்லிக் காட்டுவதும், அதற்கு கூடவே சபாஷ் போடுவதுமாக உணர்விக்கப் புகுவீர்கள்! வெரி குட்! :(

இப்படி எல்லாம் சங்கரரையோ, இல்லை அண்மைக் கால அடிகளார் எவரையோ கூடச் செய்ய அடியேன் மனம் கணப் பொழுதும் துணியாது! இது தான் அடியேன் சாதகம்!

கேஆரெஸ்! கேஆரெஸ்! அவனுக்காக மட்டும்! அவன் ரியாக்ஷனுக்காக! அவன் என்ன அப்படி ஒரு மகா மையமா? ஆச்சார்ய ஸ்ரீபாத தூளியின் கால் தூசியென்ன, கடுகளவு தூசி பெறாத அந்தக் கேவலமானவனைக் குப்பையில் வீசுங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆனால் இளைஞர்களுக்கு புரியும் மொழியில் பேசுறேன்னு தமிழ் சினிமா வசனங்களில் எழுதுகையில் பேசினா அது அடுத்தவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதை உணராதவரா அவர்?//

என்னாது? சினிமா வசனத்துல ஆன்மீகம் பேசினா அடுத்தவங்களுக்கு வருத்தம் ஏற்படுமா? யாருங்க அப்படிச் சொன்னது?

திருக்குறளைக் குப்பத்து பாஷையில் பேசினா, தமிழறிஞர்களுக்கு வருத்தம் ஏற்படுமா? மயிலை மன்னார் வள்ளுவரைத் தன் லோக்கல் பாஷையில் உரிமை கொண்டாடலையா? மன்னாரைப் பற்றி வள்ளுவரிடம் கேளுங்க! மெச்சிக் கொள்ளுவாரு!

எந்தத் தகாத சினிமா வார்த்தையைச் சொன்னேன்? அது என்ன வருத்தத்தை ஏற்படுத்துச்சி? அதைச் சொல்லுங்க! XXX-ன்னு பின்னூட்டத்தில் நான் சொன்னேனா? இல்லை பலான பலான ஜல்சா பண்ணாரு இந்தக் கடவுள்-ன்னு பேசினேனா? காட்டுங்கள் பார்ப்போம்!

என்னான்னு சொல்லாமலேயே, பொதுப்படையாப் பேசிப் பேசி, அடிச்சிட்டான், அடிச்சிட்டான் என்பதில் ஒரு நியாயமும் இல்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அடியேன் இன்னும் கொஞ்சம் ஸ்டிரிக்ட்டா இருக்கப் போகிறேன்!//

பதிவுக்குத் தொடர்புடைய For/Against பின்னூட்டங்களை மட்டுமே ஊக்குவித்து,
வீண் கும்மி/ஜல்லிகளை வேண்டாம் என்று நானே கேட்டுக் கொள்ளப் போவதைத் தான் சொல்லி இருந்தேன்!

கவி அக்கா சொன்னதை முழு மனசோடு பாருங்கள்! //பின்னூட்டங்களை படிச்சதுல, பதிவு பத்தி வேற என்ன சொல்ல வந்தேன்னு மறந்து போச்சு//

இதற்காகச் சொன்னது!
இதில் கூட.....படு பாவி கேஆரெஸ் "மறைமுகமா" ஏதோ சொல்லி உள்ளான்! அதானே?

//நீங்க பதிவுல எப்படி வேணா எழுதுவீங்க, அதை கேள்வி கேட்கக் கூடாது அப்படித்தானோ?.//

ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சே!
உங்க மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க!
கேள்விகளை என்னைக்காச்சும் தடுத்துள்ளேனா அடியேன் பதிவில்? நாத்திகக் கேள்விகள் உட்பட!

//நானே கேள்விகளை குறைத்துக் கொண்டு, படிச்சுட்டு, உள்ளேனய்யா போட்டுட்டு போயிடறேன். :-)//

அதற்குக் கூட அவசியம் இருக்காது!
எழுதினால் தானே உள்ளேன் ஐயா போடுவீர்கள்? பொறுத்திருந்து பாருங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
நீங்கள் அருணகிரிநாதர், பெருமாள், முருகன், இராமானுஜர் என்று எல்லோருக்கும் இப்படிப்பட்ட தலைப்பு தான் கொடுக்கிறீர்கள். ஆனால் நம் நண்பர்களில் சிலருக்கு முருகன், அருணகிரிநாதர் இவர்களுக்கு நீங்கள் தரும் தலைப்பும் கருத்தும் தானே கண்ணில் படுகிறது//

உடனே காமாலைக் கண்-ன்னு பேச எனக்கு ரெண்டு நிமிஷம் ஆகுமா, குமரன்? முன்னர் எப்பவாச்சும் இப்படிப் பேசி இருக்கேனா? ஆனா அப்படித் தனிப்பட்ட பேச்சே அடியேன் நாவில் வராது!

அதுனால தான் "மறைமுகமா" பேசறேன், "சினிமா வசனம் வச்சிப் புண்படுத்திட்டேன்"-ன்னு எல்லாம் சொல்லுறாங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
ஓ. மலைத்தேன் தான் சிவானந்தமா? அப்ப அது நமக்குக் கிடைக்காது.//

ஏன் கிடைக்காது குமரன்? சிவானந்தம் சித்திக்க சிவனார் எப்போதும் தடை சொல்லவே மாட்டார்!
உலப்பிலா ஆனந்த மாயத் தேனினைச் சொரிந்து அல்லவா?

//முடவன் கொம்புத்தேனுக்கோ மலைத்தேனுக்கோ ஆசை படலாமா? :-(//

ஏன்? முடவனுக்கு ஆசை இருக்கக் கூடாதா குமரன்? பாலூட்டிய அன்னை சீகாழித் திரிபுரசுந்தரி, தேனூட்ட மாட்டாளா என்ன?

அருணகிரி புலனடக்கம் இல்லாத முடவன் போலத் தான் இருந்தார். புலனை அடக்கினார் என்று செக் பண்ணிப் பார்த்து விட்டா, அநுபூதி அருளப்பட்டது? (இதுல ஏதாச்சும் "மறைமுகமா" சொல்லி இருக்கப் போறேன்! யாராச்சும் சுட்டிக் காட்டிருங்க)

அருணகிரியின் புலனடக்கம் பார்க்கவில்லை இறைவன்! அவர் கண்ணில் முத்து முத்தாய் நீர்! முத்தைத் தரு பத்தி வந்து விட்டது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நானும் SK ஐயா சொன்ன சின்ன சின்ன விடயமெல்லாம் பொருட்படுத்தாமல் விட்டு விட்டு,

ஜீவா சொன்ன அழகான வித்தியாசமான கருத்தை விவாதிக்க வரணும்-ன்னு மாலையில் இருந்து முயன்று முயன்று பார்க்கிறேன்! ஹூஹூம்!

SK ஐயா மின்னஞ்சலில் சில விடயம் தெளிவுபடுத்தி விட்டார்!
** அடியேன் பதிவில் சற்று dilute செய்து விட்டேன். குருவின் துணை கொண்டு தான் இது போன்ற உபதேச மொழிகளை உணர முடியும்! அதான் அருணகிரி முழுமையாக விரிக்க வில்லை ** என்பது அவர் கருத்து!

மேலும் அருமையான கருத்தாக்கக் கேள்விகள் இப்போது எழுந்துள்ளன:
* வெறும் தனின்னா ஓம்காரம்ன்னு எப்படி சொன்னீங்க? அது எதுவா வேண்டுமானாலும் இருக்கலாமே?
* தமிழில் இடுகுறிப்பெயர்களே இல்லை என்று சொல்லுவார்கள் சில தமிழறிஞர்கள்
* அநாதி என்றால் முடிவா?
* பூதரம் என்றால் மலையா?
* விசிஷ்டாத்வைதத்திற்கும் சைவசித்தாந்தத்திற்கும் 'பரம்பொருள் யார்' என்பதை தவிர்த்து மற்ற கருத்துகளில் மிகுந்த ஒற்றுமை உண்டு!

இவற்றை எல்லாம் உரையாடி மகிழ விழைவு தான்! ஆனால்....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
பின் என்னதான் என்றால், பரமனின் துளியாய் இந்த ஜீவனில் இருப்பது, அந்த ஆன்மாவே என்று, தன்னை அறிதலே, பரமனை அறிவதாகும்//

அருணகிரி, இது போன்று வேறெங்கு எல்லாம் அத்வைதம் தொட்டுச் செல்கிறார் என்று பேசவும் அடியேன் விழைவு! ஆனால்...

//கே.ஆர்.எஸ். மற்றபடி உங்கள் விளக்கத்தினை மறுக்கவில்லை//

அச்சோ...எதுக்கு ஜீவா டிஸ்கி எல்லாம்? தங்களை அறிய மாட்டேனா?

//தலைப்பில் இருந்த அந்த மூன்றெழுத்தைக் கூட கவனிக்கவில்லை!//

நல்ல காரியம் செய்தீர்கள் ஜீவா!
அம்மாவும் இந்தப் பதிவைப் படித்தார்களாம்! தொலைபேசும் போது சொன்னார்கள்! ஆனால் பின்னூட்டங்களை அல்ல!

ஏன்னா அவிங்களுக்கு homepage மட்டும் தான் bookmark செய்து கொடுத்துள்ளேன்! அதில் வரிசையாக ஐந்து பதிவு தெரியும்! அவிங்களுக்கும் comments-ஐ க்ளிக் செய்து, படிக்க எல்லாம் தெரியாது!

அம்மா சொன்னது இதான்:
ரொம்ப தத்துவமாச் சொல்லாம, பேசுற பாஷையில சிம்பிளாச் சொல்லி இருக்கடா! ஈசியாப் புரியிது! மீதியை நாங்களே யோசிச்சிக்கறோம்! நல்ல வேளை Vaccum, வெளி-ன்னு எல்லாம் சொல்லாம, எனக்குப் பயந்து நிறுத்திட்ட போல! :))

மெளலி (மதுரையம்பதி) said...

ஹா! 2-3 மணிநேரத்தில் எத்தனை பதில்கள்....

பதிவு மீண்டும் சாரம் நோக்கி போகையில் வேண்டாம்...ஆகவே மீ புட்டிங் ஸ்டாப்.

கே.ஆர்.எஸ், என்பதில்கள் பின்னூட்டமாக இடாது தனிமெயிலில் வரும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன்,
நீங்க மேல சொல்லும் பொருள்ள எஸ்கே சொல்லவில்லைன்னு தான் நான் நினைக்கிறேன்//

:)
அதெல்லாம் ஒருத்தன் மட்டும் தான் பண்ணுவான்!

//ஹிஹி...எதை நிந்திக்கிறோம், எவ்வளவு தூரம் நிந்திக்றோம் அப்படிங்கறது இருக்கில்ல?. //

அதானே!
நிந்தனைக்கும் ஒரு எல்லை உண்டு-ல்ல! எங்கெங்கு எல்லாம் எல்லை மீறி நிந்தித்தேன் என்பதை மட்டும் காட்ட மாட்டோம்! சும்மா பொதுப்படையாச் சொல்லிக்கிட்டு மட்டும் இருப்போம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இப்படிச் சொல்றதால அது முக்திக்கு வழிசொல்லாது என்று நான் சொல்வதாக பொருள் கொள்ள வேண்டாம்....//

இந்த டிஸ்கி அடியேனுக்குத் தேவையும் இல்ல!
நீங்கள் இப்படி எல்லாம் "மறைமுகப்" பொருளில் பேசுகிறீர்கள் என்று அடியேன் சொன்னதுமில்லை; சொல்லவும் மாட்டேன்!

//சிலருக்கு நாராயண மந்திரம், சிலருக்கு மஹா ஷோடசி மந்திரம், சிலருக்கு பஞ்சாக்ஷரம். ஏதை சொல்வதானாலும் அடுத்தவரை பாதிக்காது, பழிக்காது இருப்பது அவசியம்//

பஞ்சாட்சரப் பதிவு ஒன்றினை சிவன் பாட்டில் இட்டேன்! ஐந்து விதமான பஞ்சாட்சரங்களைப் பற்றியும் அதில் சொல்லி இருந்தேன்!
அதில் தான் நாதன் நாமம் நமசிவாய-வைப் பாதிச்சி, பழிச்சி இருக்கேன் போல! எதுக்கும் ஒரு தபா (சினிமாக் கெட்ட வார்த்தை) பாத்துக்கிட்டு வந்துடறேன்! நீங்களும் பாருங்க!
http://sivanpaattu.blogspot.com/2008/05/blog-post_1343.html

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முத்தாய்ப்பாக.....

* அடியேன் எந்தெந்த பதிவில், எந்தெந்தப் பின்னூட்டங்களில் யார் யாரை, எவ்வெப்போது முறை தவறிப் பேசினேன்?
* சுடு சொல் வீசினேன்?
* இல்லை எவரெவர் தெய்வத்தைத் தாழ்த்தி உரைத்தேன்?
* இல்லை எவரெவர் கொள்கைகளை இகழ்ந்து பேசினேன்?
* எங்கெங்கு எல்லாம் கும்மி அடித்தேன்?
அறியத் தாருங்கள்!

அடுத்த நிமிடம் நெடுஞ்சாண் கிடையாக, பொதுவில் வீழ்ந்து சேவிக்கிறேன்! மாதவிப் பந்தலை மூடி விட்டுச் செல்கிறேன்!

இத்தனைக்கும் இடம் பொருள் ஏவல் பார்த்து தான் உரைக்கிறோம்!
அப்படியும், அதற்குப் பெயர் = சீண்டி விடறீங்க! எங்களைத் தூண்டி விடறீங்க! இப்படித் தானே யோசித்து எழுதினீர்கள்? அப்படித் தானே யோசித்து எழுதினீர்கள்? அவனை மனத்தில் வைத்துத் தானே, "நைசாக" கதாபாத்திரத்தின் வாயிலாக உரையாடலை வைத்தீர்கள்?
இதெல்லாம் தான் அடியேன் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்தது!

மாற்றுக் கருத்துக்களை வன்சொல் இன்றி, இன் சொல்லால் கூட உரைக்கக் கூடக் கூடாது!
தரவு கேட்டால், ஒன்று எள்ளி நகையாடுவது, இல்லை கும்மியடிப்பது, இல்லை முத்திரை குத்துவது!
தரவைக் கொடுத்தால், அப்போதும் நகையாடுவது, கும்மியடிப்பது, இல்லை முத்திரை குத்துவது!

அது என்னடா உனக்கு விடாப்பிடித்தனம்? நீ சொல்றது தான் எப்பமே சரியா?
தரவோ, சொரவோ, ஒரு முறையாச்சும் ஒப்புக் கொள்ளேன்! அது என்ன, எப்பமே வாதம் வைக்கும் பழக்கம்?

இங்கு சாதி தாழ்த்தாமை, தமிழ் தாழ்த்தாமை இல்லை-ன்னு எதுக்கு பப்ளிக்கா பேசற?
இங்கு இல்லைன்னு சொன்னா, அங்கு இருக்கு-ன்னு தானே அர்த்தம்? - இப்படித் தான் போய் முடியும்!

கருத்துக்கு, கருத்து கொண்டு உரையாடுவது இங்கு தெரியாது, இல்லை முடியாது! உடனே அஸ்திரம் எடுப்பது!

* மாற்றுக் கருத்தை நயமுடன் உரைப்பவர்கள் குழப்பவாதிகள்!

* தங்களையும் குழப்பிக் கொண்டு, மற்றவர்களையும் குழப்புபவர்கள்!

* ஒரு அணியில் இருந்து கொண்டு, மற்ற அணியில் உள்ள நல்லதைச் சொன்னால் xxx-தனம்!

* காமலைக் கண் பிடித்தவர்கள்

இப்படி எல்லாம் நேரடியாகவோ, இல்லை மறைமுகமாகவோ, அடியேன் சொன்ன ஒரு இடத்தைக் காட்டுங்கள் பார்ப்போம்! பிறகு பேசிக் கொள்ளலாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன் - கவலையை விடுங்க!

இது நூற்றாண்டு நூற்றாண்டாக நடப்பது தான்! இது இந்திய இறையியல், ஆன்மீக உலகத்தின் சாபக்கேடு!

இப்போதெல்லாம், வெளியில் அரியும் சிவனும் ஒன்னு-ன்னு சொல்லியே ஆகணும். வெளியில் பெரியார் சமூகத் தலைவர் என்று சொல்லித் தான் ஆகணும்! வேறு வழியில்லை!
ஆனால் "அஹத்துக்கு" உள்ளே இருப்பதை அந்த "அஹம் பிரம்மாஸ்மியே" அறியும்!

இங்கே தெய்வங்களுக்கு இடையேயோ, கொள்கைகளுக்கு இடையேயோ பிரச்சனை என்றுமே இருந்ததில்லை! ஆட்களுக்கு இடையே உள்ளது தான், ஆன்மீகப் போர்வை போர்த்தி வருகிறது காலம் காலமாக!

வைணவன் தொல்லை கொடுத்தானே! அதான் பெருமாளைக் கடலில் போடு! சைவன் வம்பு இழுத்தானே! கோயிலை இன்னும் விஸ்தரிச்சி வம்பு பண்ணு!

அவர் வாதில் வென்று விட்டாரே! இவர் கருத்து பிரபலமாகி விட்டதே!
இவர் நம் கருத்தை மறுத்துப் பேசி விட்டாரே! இல்லை வேறு ஒரு "பார்வை" கொடுத்து விட்டாரே!

அத்வைத-த்வைத-விசிஷ்டாத்வைத உரையாடலில், அத்வைதத்தின் கை கொஞ்சம் ஓங்கினாற் போல் ஆயிரிச்சே! அதாச்சும் பரவாயில்லை! அந்த அத்வைதியின் கை கொஞ்சம் ஓங்கிரிச்சே!
இதை எப்போது மடக்கலாம்? எப்போது குத்திக் காட்டலாம்? எப்போது கும்மி அடிக்கலாம்?

இதே மாயச் சுழல் தான், காலம் காலமாக!
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! கற்றாரை யான் வேண்டேன்! இனி வேண்டவே வேண்டேன்! கற்பனவும் இனி அமையும்!

எம்பெருமான் திரு முக உல்லாசம்! இப்படிச் செய்கிறோமே! இதனால் அவன் முகம் வாடுமோ?
- இதை நாம என்னிக்குத் தான் பார்த்திருக்கோம், புதுசா இன்னிக்கி பார்க்கிறத்துக்கு?


அஜ்ஞானினா மயா தோஷா
நசேஷான் விஹிதாந் ஹரே
க்ஷமஸ்வத்வம் க்ஷமஸ்வத்வம் சேஷசைல சிகாமணே!

அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப் பதுவே?

குமரன், ராகவன், SK, திராச ஐயா, பாலாஜி...இன்னும் பல அன்பர்கள் பல எழுத்துப் பிழைகளையும், சொற் பிழைகளையும், பாடல் பொருட் பிழைகளையும், திரைப்படக் கதைப் பிழைகளையும் எல்லாம் எடுத்துக் காட்டியுள்ளனர்!

அவற்றை எல்லாம் திருத்திக் கொண்டு தான் அடியேன் தொடர்ந்துள்ளேன்! இவ்வமயத்தில் அன்பர் பலருக்கும் அடியேன் நன்றியறிதல்களையும் சொல்லிக் கொள்ள விழைகின்றேன்!

ஆத்திகமோ, நாத்திகமோ - எத்தன்மைக் கேள்வி ஆயினும், அனைத்தையும் ஏற்று,
எவரையும் ஒதுக்காது, அனைவரும் கூடி இருந்து குளிர்ந்தேலோ-ன்னு....

குணானுபவத்தை எதிர்பார்ப்பது அடியேன் "மடத்தனம்" தான்!
ஹரி ஓம்!

மெளலி (மதுரையம்பதி) said...

ஐயா சாமி, நாந்தான் தனிமெயில்ல வச்சுக்கலாமுன்னு சொல்லிட்டேன்ல அப்பறம் ஏனிந்த கொலைவெறி?

//அறியத் தாருங்கள்!

அடுத்த நிமிடம் நெடுஞ்சாண் கிடையாக, பொதுவில் வீழ்ந்து சேவிக்கிறேன்! மாதவிப் பந்தலை மூடி விட்டுச் செல்கிறேன்!
//

அறியத் தரமாட்டேன்....ஆகவே அடுத்த பதிவினை போட ரெடியாகவும்.

இல்லை நான் நெடுஞ்சான்கிடையா விழணுமானா அதைப் பண்ணிடறேன்...ஆனால் நீர் எழுதும் எல்லாவற்றையும் ஏற்று விழுவதான அர்த்தத்தில் அல்ல... நீர் உமது எழுதுவதை தொடர மட்டுமே.

இனி என் பின்னூட்டங்கள் இப்பதிவில் வராது, நீங்களும் நிறுத்திக் கொள்வது நல்லது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
கே.ஆர்.எஸ், என்பதில்கள் பின்னூட்டமாக இடாது தனிமெயிலில் வரும்//

தேவை இல்லை!
பொதுவில் சொன்ன குற்றச்சாட்டை, பொதுவில் வைத்தே வழக்குரைத்து நீதி காணவும்!

மறைமுகமா எதையெல்லாம் / எப்படியெல்லாம் ஏற்றி-இறக்கி வசைபாடினேன் என்பதை அதே வசைபாடிய சொற்களைக் கொண்டு நிலை நாட்டும் வரை...
குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி மெளனம் காப்பதே முறைமை!

ஆசா நிகளம் துகள் ஆயின் பின்
"பேசா" அநுபூதி பிறந் ததுவே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இப்போ தான் இப்படி ஒரு மின்னஞ்சலைப் பார்த்தேன்! யார் இவர்? பாவம், இங்கிட்டு நடக்கும் வெவரம் தெரியாம காமெடி பண்ணிட்டாரு போல!

Dr. சாரதி has left a new comment on your post "வாசி வாசி, மரா மரா! ஒன்றானவன், உருவில் இரண்டானவன்...":

உங்களுடைய சிவதொண்டிற்கு என்னுடைய வாழ்த்துகள். தயவுசெய்து பிரதோச மஹிமை பற்றியும் எழுதவும்

Kannabiran, Ravi Shankar (KRS) said...


இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை,
எல்லை மீறித் தெய்வ "நிந்தனை" செய்யப்படுவதாகச் சொல்லப்படும் வலைப்பூவினை முடக்கி வைக்கிறேன்!


பகவத் "நிந்தனைகள்" மேலும் பரவாமல் இருக்கவே இந்த ஏற்பாடு!

அடியார்களும், அன்பர்களும் கருணை கூர்ந்து மன்னியுங்கள்!

இந்த வழக்கைத் தனிப் பதிவாகப் போட்டு, விசாரணை செய்ய அடியேனுக்கு விருப்பமில்லை!
ஊர் ரெண்டு பட்டு, கூத்தாடிக்குக் கொண்டாட்டம் தர அடியேன் மனம் ஒப்பவில்லை!

எம்பெருமான் திருமுக உல்லாசத்திற்கு மாறாக, No, Never!!
எனவே இந்தக் கந்தன் சன்னிதானத்திலேயே விசாரணை துவங்கட்டும்!

குமரன் (Kumaran) said...

விசாரணை நடப்பது இருக்கட்டும். குற்றம் சாட்டியவர்கள் யார் யார், குற்றம் சாட்டப்பட்டவர் யார் யார், இருபுறத்து சாட்சிகள் யார் யார், விசாரணை நடத்தப் போவது யார் யார், தீர்ப்பு யார் சொல்லுவார்கள் என்ற விவரங்களை எல்லாம் தர வேண்டுகிறேன். அதற்கு முன்னர் எதையும் முடக்கி வைக்க அனுமதி கிடையாது. :-)

நீங்கள் இப்படி பட்டியல் இட்ட பின்னர் அந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம் அந்த அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டு விசாரணை நடக்க ஒத்துழைக்க வேண்டும். ஒருவர் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் இந்த விசாரணை நடக்காது. அதற்கு முன்னர் அவசரப்பட்டு எதற்கும் முடக்கி வைப்பதற்கு அனுமதி கிடையாது. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
விசாரணை நடப்பது இருக்கட்டும். குற்றம் சாட்டியவர்கள் யார் யார், குற்றம் சாட்டப்பட்டவர் யார் யார்//

இது கந்தரலங்காரம்!
இது கந்தன் சன்னிதானம்!
முருகனே கதியும் விதியுமாய், நீதியும்,
நீதிபதியும்,
நீ-தீ-பதியுமாய் இருப்பவன்!

முதல் குற்றவாளி: அடியேன்
குற்றச்சாட்டு விழுந்த இடம்: காரேய்க் கருணை இராமானுஜன்.

குற்றம் சாட்டுபவர்: பதிவர். திருவாளர் மதுரையம்பதி,
மற்றும் குழாம்.

குற்றச்சாட்டுகள்:

1. //நீங்க மறைமுகமா எதையெல்லாம்/எப்படியெல்லாம் ஏற்றி-இறக்கி பதிவுல எழுதறீங்க? அப்போ அதெல்லாம் எவ்வளவு அடுத்தவரை புண்படுத்தும்...//

2.//எதை நிந்திக்கிறோம், எவ்வளவு தூரம் நிந்திக்றோம் அப்படிங்கறது இருக்கில்ல?//

3. //ஆனால் இளைஞர்களுக்கு புரியும் மொழியில் பேசுறேன்னு தமிழ் சினிமா வசனங்களில் எழுதுகையில் பேசினா அது அடுத்தவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தும்//

4. //நீங்க பதிவுல எப்படி வேணா எழுதுவீங்க, அதை கேள்வி கேட்கக் கூடாது அப்படித்தானோ?//

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எதை இறக்கினேன்?
எப்படி எல்லாம் இறக்கினேன்?
யாரைத் தாழ்த்தினேன்?
எப்படி எல்லாம் தாழ்த்தினேன்?
எதை நிந்தித்தேன்?
எவ்வளவு தூரம் எல்லை மீறி நிந்தித்தேன்?

இவற்றுக்கான குற்றப் பத்திரிக்கை,
தகுந்த ஆதாரங்களோடு,
தாக்கல் செய்யப்படும் வரை,

Interim Stay: மாதவிப் பந்தல் என்னும் நச்சு மரம் மூடப்பட்டே இருக்கும்!

இது வரை இப்படித் தொழுகை செய்யும் இடத்தை மூடியதே இல்லை!
ஒரே ஒரு முறை (சென்ற முறை ஊருக்குச் செல்லும் போது) தனிப்பதிவு மட்டும் போட்டுக் கோடிக்காட்டினேன்!

இப்படி மூடியது, ஏதோ என் தனிப்பட்ட அகங்காரத்துக்காகவோ, இல்லை என்னைப் போயி இப்படிச் சொல்லிட்டாங்களே என்பதற்காகவோ எல்லாம் அல்ல!

தனிப் பெருங் கருணை இராமானுசர் மேல் தேவையில்லாமல் விழுந்த அடி!
அதுவும் அடியேனை அடிக்க எண்ணி அண்ணல் மேல் விழுந்த அடி!
அதற்கு அடியேன் செய்யும் பிராயச்சித்தம்! அவ்வளவே!

மேலும் நீலகண்டப் பெருமான் சிவபிரான், அன்னை தர்ம சம்வர்த்தினி (அறம் வளர்த்த நாயகி), மற்றும் கொஞ்சு குழந்தை முருகப்பெருமான்,

மேலும் அத்வைதம், ஞான-கர்ம-பக்தி மார்க்கங்கள், யோகிகள் செய்யும் சாதனைகள் - இவர்கள் மீதெல்லாம் நிந்தனை செய்கிறேன்! எவ்வளவு தூரம் நிந்தனை செய்கிறேன், எல்லை மீறி நிந்தனை செய்கிறேன் என்ற குற்றச்சாட்டு வந்து விட்டதால்...

மாதவிப் பந்தல் என்னும் நிந்தனா விருட்சம் (நிந்தனை மரம்),
விஷக் காற்று கக்கி விடக் கூடாதே என்பதற்காகவும் தான் பந்தல் பூட்டப்படுகிறது!

புதிய பதிவுகள் ஏதுமில்லை! பழைய பதிவுகள் தானே! அதையும் வாசிக்க விழைவோர், தனி மடல் அனுப்பினால், private blog invitation அனுப்பி வைக்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என் தம்பி பாலாஜி,
முன்பு ஆடித் தபசு கோமதி அம்மன் பதிவில் ஒரு பின்னூட்டம் மனம் வருந்தி இட்டிருந்தார்.

அவர் வருத்தத்தைப் பார்த்து சங்கடப்பட்ட நான், அதை அப்போது வெளியிடவில்லை!
இப்போது சூழல் சரியாக இருப்பதால், அவர் பின்னூட்டத்தை வெளியிடுகிறேன்!

//வெட்டிப்பயல் said...
உங்க வலைப்பதிவுல வர பின்னூட்டங்களை படிச்சா எனக்கு மனசுல வருத்தங்களும், வெறுப்புகளும் தான் அதிகமாகுது. அதுல உங்க தப்பு எதுவுமில்லை. முழுக்க முழுக்க என் தப்பு தான். என் மனசு பக்குவப்படவில்லை.

அதனால இனிமே உங்க பதிவை படிக்கறதையும், பின்னூட்டம் போடறதையும் நிறுத்தி கொள்கிறேன். இழப்பு எனக்கு தான். பரவாயில்லை.

ஓம் நமோ நாராயணாய நமக!!!//

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மாதவிப் பந்தல் பதிவுகள் எல்லை மீறிய நிந்தனையா?
அவை உங்களை புண்படுத்துதா-ன்னு பதிவர்கள் மத்தியில் அடியேன் வாக்கெடுப்பு வச்சா,

இல்ல-ன்னு தான் வரும்! அது பதிவர்களின் பெருந்தன்மை!


ஆனால் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியவர் ஏனா தானோ ஒருவர் இல்லை! வேறு யாரேனும் சொல்லி இருந்தால் சீண்டிக் கூட இருக்க மாட்டேன்!

ஆனால் இவர் அப்படி அல்ல! கோமதி அம்மன் பதிவில் கோடுகள் இருந்த நேரம் போதும். இனி எடுத்து விடுங்கள் என்று இவர் சொன்னதால் அப்படியே எடுத்து விட்டேன்!

அப்பேர்ப்பட்டவர் இத்தகைய படு பயங்கரமான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். ஆனால் அவற்றுக்கான ஆதாரங்களையோ, இல்லை சாரமுள்ள குற்றச்சாட்டு தானா என்பதையோ அறியத் தர மறுக்கிறார்!

அம்மையப்பனைச் சுற்றி வந்தால் உலகமே சுற்றி வந்தது மாதிரி!
இவர் குற்றம் சுமத்தியதால், ஆன்மீக உலகம் குற்றம் சுமத்திய மாதிரி!

அடியேன் முதல் பதிவு நினைவிருக்கா?

திருமலை திருப்பதியில், அடியார்களைக் குரங்குகள் (கோட்டி ஜனாலு) என்று பழித்துப் பேசினார்கள் அர்ச்சகர்கள்!
நாமக்கார அர்ச்சகர் தான்! ஆனாலும் வைணவ பாசம் என்று இங்கு சிலர் சொல்வது போலெல்லாம், பாசம் பாராது, எப்படிச் சீற்றம் கொண்டேன் என்று சொல்லி இருந்தேன்!

ஆனால் இப்போதோ...
அடியேனே,
அடியார்களை எல்லாம் பழித்துப் பேசுவதாகவும்,
எல்லை மீறி நிந்திப்பதாகவும்
வழக்கு உரைக்கப்பட்டு விட்டதால்.....

எம்பெருமான் திருவடிக் கமலங்களில் தலை தாழ்த்தி.....
இந்த பாகவதா அபசாரத்துக்குப் பந்தலை மூடி விட்டேன்!

வேறு சுய-பிரதாப காரணங்கள் ஏதுமில்லை!

அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ, கடல் சூழ்ந்த
பதிவுலகம் வாழ, பாகவத ஜனமே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

யோசிப்பவர் said...

ஆன்மீக அருந்தமிழே!!,

அடியேனுக்கு ஒரு சிறு சந்தேகம். "நமசிவாய" என்பது பஞ்சாக்ஷரம். "சரவணபவ" என்பது எப்படி அழைக்கப்படுகிறது?(எனக்கு விடை தெரியாது) தனி மடலுக்கு பதில் அனுப்பினால் நலம்(விஷயமிருக்கு!) மேலும் விரைவாக ஐயம் தீர்த்தால் இன்னும் நலம்!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யோசிப்பவர் said...
ஆன்மீக அருந்தமிழே!!//

ஆகா...இது வேறயா? யோசித்துச் சொல்லுங்கள் யோசிப்பவரே :)

//"நமசிவாய" என்பது பஞ்சாக்ஷரம். "சரவணபவ" என்பது எப்படி அழைக்கப்படுகிறது?//

சரவண பவ என்பது சடாக்ஷரம்! திருவாறெழுத்து!

//எனக்கு விடை தெரியாது) தனி மடலுக்கு பதில் அனுப்பினால் நலம்(விஷயமிருக்கு!) மேலும் விரைவாக ஐயம் தீர்த்தால் இன்னும் நலம்!!
//

ஆகா...மன்னிக்கவும்!
இப்போ தான் உங்க பின்னூட்டம் பார்த்தேன்! விமானப் பயணத்தில் இருந்தேன்! இன்று காலை தான் சென்னை வந்து சேர்ந்தேன்!

என்ன விஷயம் இருக்கு-ன்னு சொல்லுங்க! :)

Dr.Rudhran said...

it is good and interesting,keep writing on this

குமரன் (Kumaran) said...

//நீங்கள் இப்படி பட்டியல் இட்ட பின்னர் அந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம் அந்த அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டு விசாரணை நடக்க ஒத்துழைக்க வேண்டும். ஒருவர் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் இந்த விசாரணை நடக்காது.//

இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இரவிசங்கர். :)

மெளலி (மதுரையம்பதி) said...

மாதவிப் பந்தல் என்னுடைய கேள்விகளின் காரணமாக முடப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலே நான் குமரனுக்கு அளித்த பதிலில் சொல்லியது போல நான் ராமானுஜரையோ அல்லது நாராயண மந்திரத்தியோ. பழிக்கவில்லை என்று கூறிய பின்னரும் தனி மடலில் வைத்துக்கொள்ளலாம் என்று கூறிய பிறகும் வந்த பதில்களை பார்த்தேன். நான் KRSன் எழுத்துக்களைப் பற்றிய விமர்சனங்கள் என்ற விதத்தில் எழுதியது KRS அவரையே பழித்ததாக எடுத்துக் கொள்ளும் ஒரு தொனியிருப்பதை அறிந்து ஒரு முடிவுக்கு வருகிறேன்.

நான் பகிரங்கமாகச் சுமத்திய குற்றங்களுக்காக வருந்துகிறேன். மாதவிப் பந்தலுக்கு வரும் வாசகர்கள் படிக்க வழியில்லாது ஏமாந்து போகும் சாத்தியம் இருப்பதைக் கண்டும் வருந்துகிறேன். என் குற்றச்சாட்டுக்களால் பலருக்கும் ஏற்பட்ட மன உளைச்சல்களுக்கும், பந்தலுக்கு வருபவர்கள் ஏமாற்றத்தை தவிர்க்கும் பொருட்டும், பகிரங்கமாக மன்னிப்பும் கோருகிறேன்.

இந்த என்னுடைய மன்னிப்பும், வருத்தங்களும் மாதவிப் பந்தலை எல்லோருக்கும் திறந்துவிடும் திறவுகோலாக இருக்கும் என்று
நம்புகிறேன்.

மெளலி

கோவி.கண்ணன் said...

//இப்படி ஆத்ம ஒளியில், எழுந்த ஞான மலையின் மேல் என்ன இருக்கு? என்ன இருக்கணும்? ஞானமா? கர்மமா? பக்தியா? ஹிஹி....கருணை இருக்கணுமாம்!
நிறைய பேருக்கு, சாதகம் செய்யறேன் பேர்வழி-ன்னு ஆத்மா, ஞானம்-ன்னு எல்லாம் பேசிட்டு, அந்த மலையில் என்ன எழுப்பிக்கறாங்க?
ஆணவம், படோபடம், விளம்பரம், புகழ்ச்சி மாயை - இதெல்லாம் தான் ஏத்திக்கறாங்க!//

ரொம்ப சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள், இந்த பதிவில் எனக்கு மிகவும் பிடித்தவை இந்த வரிகள் தான். மனத்தூய்மை இல்லையென்றால் ஆத்ம (சுய) தரிசனம் வாய்ப்பே இல்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@மெளலி அண்ணா
என்ன இது? பெரிய பெரிய வார்த்தை எல்லாம்?

ஊருக்கு வந்த நேற்று மாலையே திருமலைப் பயணம்!
முடிஞ்சி வந்து பார்த்தாக்கா, இப்படி ஒரு பின்னூட்டம்.
நேற்று தொலைபேசினேனே! அப்போது கூட இப்படி எல்லாம் சொல்லலையே-ண்ணா?

எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேக்கறீங்க? என்ன தப்பு செஞ்சீங்க?
சில குற்றச்சாட்டுகளை முன் வைத்தீர்கள், அவ்ளோ தானே? அதுக்கு விசாரணை நடக்கட்டும்-னு தானே மூடி வச்சேன்!

சரி...பழசு பேச வேணாம்!
நிரந்தரமா எல்லாம் மூடும் எண்ணமில்லை!
ஒரு மண்டல காலம் மட்டும் மூடி வைக்கலாம்-னு தான் இருந்தேன்.

ஆனா இப்போ உங்க பின்னூட்டம் கண்ட பின்னாலும் அடியேன் இதைத் திறக்கவில்லையானால், அது மகா பாதகம்.

இதோ மாதவிப் பந்தலைத் திறந்து விடுகிறேன்! திருமலை எம்பெருமானின் ஆக்ஞையாகவே எடுத்துக் கொண்டு, திருக்கதவம் திறப்பின்மினே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@மெளலி அண்ணா
நீங்கள் இராமானுசரையோ, திருமந்திரத்தையோ ஒரு கால் பழித்தே சொன்னாலும் கூட அது உங்கள் கருத்துரிமை. அதுக்கு அடியேன் யார் தடை சொல்வது? வேண்டுமானால் எதிர் வாதங்களை வைக்கலாம்; அவ்வளவு தான்!

நான் என்னைப் பற்றிய விமர்சனமாகவும் எடுத்துக் கொள்ளவில்லை! அதான் சொல்லி இருந்தேனே! மூடி வைத்தது சுயபிரதாப சொந்தக் கோபங்களுக்கு இல்லையென்று!

என் எழுத்தின் மீதான உங்கள் விமர்சனங்களை அடியேன் என்றும் வரவேற்பேன். அடியேன் விசனம் விமர்சன விசனம் கிடையாது!

நீங்கள் சொன்னீங்கல்ல?
"நாங்க எப்படி எப்படி எல்லாம் புண்பட்டிருப்போம்"-ன்னு?
"எதை நிந்திக்கிறோம், எவ்வளவு தூரம் நிந்திக்றோம் அப்படிங்கறது இருக்கில்ல?" -ன்னு?

இது தான் பந்தலை மூடி வைத்த காரணம்! வேறு எந்த காரணமும் கிஞ்சித்தும் இல்லை!

பாகவதர்களைப் புண்படுத்திப் பகவானை வணங்குவது என்பது அடியேனுக்கு என்றுமே ஒத்துவராது!


அதான் பந்தலை மூடி, புண்படுத்தியமைக்கும் நிந்தனைக்கும் விசாரணை துவங்கச் சொன்னேன்!

சரி போகட்டும் அண்ணா!
பந்தலைத் திறந்துட்டேன்.
அதுக்காக விசாரணை நிற்க வேண்டாம்!

குற்றச்சாட்டுகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில், பரம பாகவதர்களிடம் அடியேன் மன்னிப்பு கோரியே ஆக வேண்டும். அடியேனை பாகவத கைங்கர்யத்துக்கு ஆட்படுத்துங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மாதவிப் பந்தலைத் திறந்தாயிற்று!
திருமலை தரிசன மகாபாக்கியத்தையே முதல் பதிவாக இடுகிறேன்! போதுமா?

இந்த முறையும் சுமார் அரைமணி நேரம் தரிசனம். அம்மாவும் இந்த முறை கூட இருந்தார்கள். ரொம்ப மகிழ்வாக இருந்தார்கள். ஜீயருடனும் பேசினார்கள்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அனைத்து அன்பர்களுக்கும் இனிய நவராத்திரி (இரா-ஒன்பது) வாழ்த்துக்கள்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்ன உபதேசம் என்ற கேள்விக்கு, இப்போ விடை சொல்லியாச்சு! :)

இந்த அலங்காரச் செய்யுள் இரண்டும் ஜோடிச் செய்யுள்! கேள்வி ஒன்றில், பதில் ஒன்றில்!

இதோ, பதில் பதிவு!
http://murugaperuman.blogspot.com/2008/11/11_11.html

RVR said...

I totally surrender to the excellent presentation in the blog.In Kandhar Alangaram you have taken us to the summit. I have posted one of your presentation 'OM'(Kandhar Alangaram) in Yahoo Group Thatha_Patty@yahoogroups.com and well appreciated. I had mentioned your blog with URL for others to be aware of this wonderful blog. Thank you,
RVR Houston

RVR said...

I had written my comments in July this year. I am retired professional and passing time on spiritual blog reading besides all worthy blogs on literature, our nation, science, astronomy etc. via google reader. I rate your writing and explaining as the best. I am never tired of visiting this particular posting explaining what Lord Muruga explained to his father. Your spiritual and scientific reasoning is awesome. Can you please post this in English version for the world to know? Old man of 65 laments you may ignore but it is worthy of a try please. With regards and Lord Bless you
RVR

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@RVR ஐயா
தங்கள் ஆசிக்கும் அன்பான சொற்களுக்கும் நன்றி!

முருகன் அப்பனுக்குச் சொன்னது எளிய தத்துவம் தான்! நாம் தான் அதைப் பெரிய பெரிய சொற்களால் எட்டாத தொலைவில் வைத்து விட்டோம்!
முருக மொழி, குழந்தை மொழி! அது எளிமையாகத் தான் இருக்கும்! அந்த எளிமையே நீங்கள் பதிவில் கண்டது! இதில் என் மணம் ஒன்றும் இல்லை! மலரின் மணத்தைத் தொடுத்து வைத்தேன்! அவ்வளவே!

ஆங்கிலத்தில் மொழியாக்கலாம் தான்! ஆனால் இது அருணகிரி+முருகன்! இருவருமே தமிழின் பாற்பட்டவர்கள்! தமிழர்கள் இந்த இருவரையுமே தமிழிலேயே அறிவார்கள்! அதற்கு எதுக்கு ஆங்கில ஆக்கம் என்று தான் யோசிக்கிறேன்!

தமிழ்நாட்டையும் கடந்தவர்க்கு வேண்டுமானால் ஆங்கிலம் உதவலாம்! ஆனால் அங்கே அருணகிரி எத்துணை பரிச்சயம் என்பது தான் யோசிக்க வைக்கிறது!

Dr.SR said...

Very interseting and redsourceful research

SITHAR said...

Dear Kandha priya,
I feel very proud by reading your blog and please keep it up.
Lord muruga will praise and bless you always.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP