Monday, July 28, 2008

கந்தனுக்கு அலங்காரம் கேஆரெஸ் செய்யலாமா?

சில பல தனிப்பட்ட காரணங்களுக்காக, வீட்டில் அம்மா, எனக்காகக் கந்தர் அலங்காரத்தை ஜபிக்கத் தொடங்கியுள்ளார்கள் போலும்! விராலிமலைக்கு என்னை அழைத்துச் சென்றதும் ஞாபகம் இருக்குங்களா?
கந்தரலங்காரம் சொல்லியதன் பயனாக, இப்போது தான் அம்மா சற்றே மன நிம்மதி பெற்றதாகச் சொல்கிறார்கள்! :)

அன்று இந்தியாவிற்குத் தொலைபேசினேன்; அப்போது....

"டேய் சங்கரா, என்னென்னமோ எழுதற! இப்போல்லாம் நான் கூட உன் பதிவுகளை வாசிக்க ஆரம்பிச்சிட்டேன்! நம்ம குல தெய்வம் முருகனைப் பத்தி எழுதேண்டா! "

"அதான் அப்பப்போ எழுதறேனேம்மா...முருகனருள்-ன்னு ஒரு வலைப்பூவில் எழுதறேன்! நான் எழுதிய அறுபடை வீட்டுக் காவடிச் சிந்தை, நண்பர்கள் எல்லாரும் விரும்பிப் பாடினார்கள்! நம்ம விராலிமலை, கந்த கோட்டம், அப்படி இப்படி-ன்னு எழுதிக்கிட்டு தான் இருக்கேம்மா!"

"அப்படியா? சரி சரி! நான் இப்போ தான் தட்டித் தடவி, உன் ப்ளாகை எல்லாம் பாக்குறேன்! அதான் தெரியலை போல!
நீ சொன்னியே-ன்னு மாதவிப்பந்தல்-ன்னு ஒரு சைட்டு! அதுக்கு மட்டும் தான் போனேன்! அது என்ன முருகனருள்? அது வேற தனியா வச்சிருக்கியா?
சரி, போவுது! சிவலிங்கம், சிவாராத்திரி, சிதம்பரம்-ன்னு எல்லாம் எழுதற போல! உண்டியல்-ல காசு போடாதீங்க-ன்னு எல்லாம் எழுதறியே! ஏன்-டா இப்படி எல்லாம் எழுதற?"

"அட விடுங்கம்மா! சில நேரங்களில் சில உண்மைகளைச் சொல்லித் தானே ஆகணும்! நீங்க எங்கள வளர்த்தா மாதிரியே, பூச்-பூச்சின்னு இருந்தா, நல்ல விசயங்கள் எல்லாம் அமுங்கித் தான் போவும்! அப்பப்ப சொல்லணும்!
இனி நான் இமெயில்-ல அனுப்பறது மட்டும் படிங்க, போதும்! எல்லாத்தையும் படிக்காதீங்க!"

"சரி, அது என்ன கோவிந்தா-ன்னு சொல்லும் போது மட்டும் நல்லா உருகி உருகி எழுதற! ஏதோ பெரிய பெரிய விளக்கமா வேற இருக்கு! நல்லாத் தான் இருக்கு! எனக்கே நல்லாப் புரியுதுடா!
ஆனா நம்ம வூடு இருக்குற வூட்டுல, இதெல்லாம் எங்க போயி படிச்சேன்னு தான் புரியலை! எல்லாம் உங்க ஆயா கொடுத்த செல்லம்! சின்ன வயசுல நம்ம கிராமத்துக் கோயில்-ல அந்த நாமக்காரப் பசங்க கூட, உன்னைச் சேரவே வுட்டுருக்கக் கூடாது!"

"அம்மா, கம்பேர் பண்ணிப் பேசனீங்கன்னா, எனக்குக் கோபம் வரும்! ஸ்டாப் இட்!
அதான் நீங்க கேக்கறத எழுதறேன்-ன்னு சொல்லிட்டேன்-ல!
நீங்க என்னை யாரோடும் பழக வுடலைன்னாக் கூட, வரவேண்டியது தானா வந்து சேரும்! வெளிச்சமே வராத காட்டுக்குள்ள, தாமரைப் பூவுக்கு, சூரியனை வரவுடாம குடை பிடிச்சிப் பாருங்களேன்? சூரியனுக்குப் பூக்குதா பூக்கலையா-ன்னு தெரிஞ்சி போயிரும்! இன்னொரு வாட்டி இப்படிக் கம்பேர் பண்ணிப் பேசாதீங்க! சொல்லிட்டேன்! ஆமா!"

"சரிடா, சரிடா! கோச்சிக்காதே! எலக்கியமாப் பேசி எங்கள மடக்க நல்லாவே கத்து வச்சிக்கிட்டு இருக்கப்பா நீ! சரீ....இந்தக் கந்தர் அலங்காரம் தினம் படிக்கச் சொன்னாங்களே! இது ஒன்னுமே எனக்குப் புரியலை! நீ பதம் பிரிச்சி எழுதிக் கொடுத்தீல்ல! அதைத் தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்! இதுக்கு அர்த்தம் சொல்லிப் படிச்சா நல்லா இருக்கும்-ல? பேசாம நீயே இதுக்கு அர்த்தம் சொல்லி எழுதேன்டா!"

"உம்...நம்ம வீட்டுக்கு ராகவன்-ன்னு ஒருத்தரு வந்தாரே! ஞாபகம் இருக்கா? நீங்க செஞ்ச மீனை நானும் அவர் கூடவே உக்காந்து சாப்பிட்டாகணும்-னு அடம் புடிச்சாரே! அவரு தான் இதுக்கெல்லாம் நல்லா அர்த்தம் எழுதுவாரு! ஆனா இப்போ அவர் அவ்வளவா சாமிப் பாட்டெல்லாம் எழுதறதில்ல!"

"ஏன்-பா?"

"அடுத்த வாட்டி அவரு நம்ம வீட்டுக்கு வரும் போது, அவரையே கேட்டுக்குங்க! சரி...நானே உங்களுக்கு விளக்கஞ் சொல்லி கந்தர் அலங்காரம் எழுதறேன்! சந்தோசமா? அவரு எழுதினா என்ன, நான் எழுதினா என்ன? எங்க ரெண்டும் ஒன்னு தான்!"

"ஊம்ம்ம்ம்ம்ம்"

"என்ன உம்ம்ம்ம்? மொத்தம் 108 பாட்டு இருக்கு! ஒரு தொகையலா வாரா வாரம் ஒன்னு தான் போட முடியும்! அப்படிப் போடும் போது, அர்த்தம் தனியாப் படிச்சிக்கோங்க! கூடவே இப்போ நீங்க தினமும் சொல்லுறதைச் சொல்லிக்குங்க! ஓக்கேவா?"

"சரிடாப்பா!"

"என்ன சரிடாப்பா? இப்படிப் பேசிப் பேசியே, காரியம் சாதிச்சிக்குவீங்களே! இதெல்லாம் என் கிட்ட தானே நடக்கும்? உங்க பொண்ணு கிட்ட பேசுங்களேன் பார்ப்போம்?"

"அட, அது இன்னொருத்தரு வூட்டுக்கு விளக்கேத்த போன பொண்ணுப்பா! அதைப் போயிச் சொல்லிக்கிட்டு..."

"உக்கும்...இன்னொருத்தர் வீட்டுக்குப் போயி எல்லா ரூம்-லயும் நல்லாவே வெளக்கு ஏத்துதாம்! மாசா மாசம் கரன்ட் பில்லு கட்டியே அழுவறாரு மாப்பிள்ளை! போதும் உங்க மொக்கை! நான் ஃபோனை வைக்கிறேன்! சாயந்திரம் அப்பா வந்தாப்பாரு கூப்புடுறேன்! பை!"

"கந்தர் அலங்காரம்....மறந்துடாத டா"

"பை..."



மேலே படிச்சீங்க-ல்ல! அதான் அடியேன் கந்தர் அலங்காரம் செய்ய வந்த கதை! :)

சரி, அலங்காரப் ப்ரியன்-ன்னு ஒருத்தருக்குத் தான் பேரு! அவருக்கு அலங்காரம்-ன்னா, இவனுக்கும் அலங்காரமா? இது என்ன மாமன்-மருமகன் கூட்டணியா?

அலங்காரம்-னா என்னங்க?
நாம பண்ணிக்கிட்டா மேக்கப், ஷோ, ஒப்பனை! ஆனா இறைவனுக்குப் பண்ணா மட்டும் அலங்காரம்!

எதுக்கு இறைவனுக்கு அலங்காரம் பண்ணனும்? சும்மா அப்பிடியே கும்பிட்டாப் போதாதா?
மலர் அலங்காரம், நகை அலங்காரம், உடை அலங்காரம், இசை அலங்காரம், பாட்டு அலங்காரம், தமிழ் அலங்காரம்...இம்புட்டும் எதுக்கு?

காதலி அலங்காரம் பண்ணிக்கிட்டு வந்தா, சூப்பரா இருக்கும்! வச்ச கண்ணு வாங்காம பார்க்கலாம்! "ஏய், இந்த ப்ளூ ஷேட்-ல, க்ரீன் பேட்டர்ன் போட்ட சாரீ-ல, நீ மயில் மாதிரி மின்னுறப்பா"-ன்னு வழியலாம்! அவளும் சந்தோசப்படுவா!

ஆனா இறைவனுக்கு அலங்காரம்?
கந்தனுக்கு அலங்காரம்?
தேவையா இதெல்லாம்?
சொல்லுங்க மக்களே, ஏன் அலங்காரம்? :)

34 comments:

வெட்டிப்பயல் said...

சூப்பர் சூப்பர்...

வழக்கம் போல படங்களும் அருமையா போட்டிருக்கீங்க...

வல்லிசிம்ஹன் said...

அலங்காரம் தேவை தான்.அவனை அழகு செய்தா நம்ம கண்ணும் அதைப் பார்த்து அலங்காரமா ஒளிவிடுமில்லையா.
உங்க கந்தனுக்காகக் காத்திருக்கேன். அதென்ன ஜிராவை வாருகிற வேலை. ??
கந்தசாமி கோச்சுக்கும் ஆமாம்!!சொல்லிட்டேன்:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// வெட்டிப்பயல் said...
சூப்பர் சூப்பர்...//

என்ன ஜூப்பர் ஜூப்பர்?
ஒழுங்கா கேள்விக்குப் பதில சொல்லுங்க!
வொய் அலங்காரம்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெட்டிப்பயல் said...
வழக்கம் போல படங்களும் அருமையா போட்டிருக்கீங்க...//

மத்த ரெண்டு பதிவு பக்கம் வெட்டி எட்டி பாக்கலை!
இங்க அம்மா கூட பெருமாள் டயலாக்-னா மட்டும் எட்டிப் பாத்துருவீங்களே? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
அலங்காரம் தேவை தான்.அவனை அழகு செய்தா நம்ம கண்ணும் அதைப் பார்த்து அலங்காரமா ஒளிவிடுமில்லையா.//

வாங்க வல்லியம்மா!
அலங்கார நல்வரவு!

நம்ம கண்ணு ஒளி விடத் தான் அலங்காரமா?
வேறு எதுவும் இல்லீயா? :)

//அதென்ன ஜிராவை வாருகிற வேலை. ??
கந்தசாமி கோச்சுக்கும் ஆமாம்!!சொல்லிட்டேன்:)//

அலோ! நான் எங்க வாரினேன்?
எங்க ஜிராவே எங்க வாரிதி!
அவரை வாரு இதி? நோ வே!

அம்மாக்கு ஜிராவை நல்லாத் தெரியும்! அவரப் பத்தி உசத்தியாத் தானே சொன்னேன்!

அவரு தான் இனியது கேட்கின்-ல எழுதறத கொஞ்ச காலமா நிப்பாட்டிக்கினாரு! ஆனா நான் அவர வுடறதா இல்ல! அவரு இனியது தந்தே ஆகணும்!

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
வழக்கம் போல படங்களும் அருமையா போட்டிருக்கீங்க...//

மத்த ரெண்டு பதிவு பக்கம் வெட்டி எட்டி பாக்கலை!
இங்க அம்மா கூட பெருமாள் டயலாக்-னா மட்டும் எட்டிப் பாத்துருவீங்களே? :)//

முதல்ல பார்த்த பதிவுக்கு முதல் பின்னூட்டம். இரண்டாவது பார்த்த பதிவிற்கு அடுத்த பின்னூட்டம் போட்டாகிவிட்டது.

பச்சை கண்ணாடி போட்டு பார்த்தால் உலகம் பச்சையாகத்தான் தெரியும் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெட்டிப்பயல் said...
பச்சை கண்ணாடி போட்டு பார்த்தால் உலகம் பச்சையாகத்தான் தெரியும் :-)//

என்ன பாலாஜி பச்சை பச்சையாப் பேசறீங்க?:)

பச்சை மாமலை போல் மேனி அல்லவா! அதான் உலகமே பச்சையாத் தெரியுது! அப்படியாச்சும் உலகம் பச்சைப் பசுமையா ஆவட்டுமே! என்னா சொல்றீங்க? :))

ஆயில்யன் said...

விழிக்குத்துணைதிரு மென்மலர்பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத்துணை முருகா எனும் நாமங்கள்! - அவ்வப்போது மிக கடினப்பட்டு படித்த பாடல்களில் இருக்கும் நினைக்கும் வரிகளில் இதுவும் உண்டு! விளக்கங்களோடு எதிர் பார்த்து காத்திருக்கிறேன்!

Raghav said...

//பச்சை மாமலை போல் மேனி அல்லவா! //

அதானே பார்த்தேன். அழகன் முருகன் பத்தி சொல்ற பதிவிலயும் அழகு மலையான் வர்றார்.

//வொய் அலங்காரம்?//
அலங்காரம் அவனுக்காக அல்ல, நமக்காக. அவனுடைய அனைத்து அவதாரங்களையும் பக்தர்கள் காண வேண்டாமா? அதனால தான் அலங்காரம்.

Raghav said...

//அப்படியாச்சும் உலகம் பச்சைப் பசுமையா ஆவட்டுமே!//

அதாவது உலகம் பூரா வைணவம் மட்டும் தழைக்கனும்னு சொல்றீங்க...

ஜி.ரா, கொஞ்சம் வந்து இவர ரெண்டு தட்டு தட்டுங்க.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
//அப்படியாச்சும் உலகம் பச்சைப் பசுமையா ஆவட்டுமே!//

அதாவது உலகம் பூரா வைணவம் மட்டும் தழைக்கனும்னு சொல்றீங்க...//

அடா அடா அடா!
உலகம் முழுக்க பச்ச பசேல்-னு செழிப்பா ஆகட்டுமே-ன்னு சொல்ல வந்தா.....

//ஜி.ரா, கொஞ்சம் வந்து இவர ரெண்டு தட்டு தட்டுங்க//

அடடா! எங்கள வச்சி கும்மி அடிக்க இப்படி ஒரு கூட்டம் சுத்துதா? :)

என் நண்பன் ராகவன் என்னைத்
தட்ட மாட்டாரு! செந்தமிழால் கட்டவே செய்வாரு!

G.Ragavan said...

அம்மா கேட்டதற்காகக் கந்தரலங்காரம் விளக்கம் சொல்ல வந்த ரவிக்கு நன்றி.

அமுதாம் தமிழே இனிது. அதுவும் முருகன் மேலென்றால்? இனியென்றும் இனியதே. அந்த இனியது கேட்க இனி அதுவாகக் கூட்டம் இங்கே வரப் போகிறது. வாழ்த்துகிறேன்.

G.Ragavan said...

// "உம்...நம்ம வீட்டுக்கு ராகவன்-ன்னு ஒருத்தரு வந்தாரே! ஞாபகம் இருக்கா?
நீங்க செஞ்ச மீனை நானும் அவர் கூடவே சாப்பிட்டாகணும்-னு அடம் புடிச்சாரே! //

அடம் பிடித்தது அன்று. அடுத்த முறை உறுதியாகத் திடம் பிடித்ததும் நன்று. காத்திருக்கிறேன் நந்நாள் என்னும் அந்நாளுக்காக. :D

// அவரு தான் இதுக்கெல்லாம் நல்லா அர்த்தம் எழுதுவாரு! ஆனா இப்போ அவர் அவ்வளவா சாமிப் பாட்டெல்லாம் எழுதறதில்ல!"

"ஏன்-பா?"

"அடுத்த வாட்டி அவரு நம்ம வீட்டுக்கு வரும் போது, அவரையே கேட்டுக்குங்க!//

இங்கயே சொல்றேன். அடுத்த வாட்டி போன் பண்றப்போ சொல்லீருங்க. கலீல் கிப்ரான் சொன்னாராம்..ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணர்கையில் மந்தையை விட்டு விலகுகின்றன. :-) சிறியேன் நான் யாதும் அறியேன் என்று உணர்கையில் மந்தையை விட்டு விலகுகிறேன். மந்தை போனாலும் எந்தையாம் கந்தை விட்டு விலகவில்லை. :-)


// சரி...நானே உங்களுக்கு விளக்கஞ் சொல்லி கந்தர் அலங்காரம் எழுதறேன்! சந்தோசமா?" //

கண்டிப்பா எழுதுங்க. மிக்க மகிழ்ச்சி. தாய் கேட்டேனும் முருகனுக்கு நீங்கள் எழுதனும்னு இருக்கு. அதான் இது. :-)

G.Ragavan said...

// Raghav said...

//அப்படியாச்சும் உலகம் பச்சைப் பசுமையா ஆவட்டுமே!//

அதாவது உலகம் பூரா வைணவம் மட்டும் தழைக்கனும்னு சொல்றீங்க...

ஜி.ரா, கொஞ்சம் வந்து இவர ரெண்டு தட்டு தட்டுங்க. //

நான் எங்கங்க அவரைத் தட்டுறது? அவருடைய விருப்பம் அவரோடது. அவரது எண்ணம் நிறைவேற எனது வாழ்த்துகள். :-)

என்ன இருந்தாலும் அவரு உ.உ.வ கே.ஆர்.எஸ் ஆச்சே. வைணவ வாரியார்னு பட்டம் குடுக்கலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன். நீங்க என்னடான்னா தட்டச் சொல்றீங்களே!

G.Ragavan said...

ஏன் அலங்காரம்? நல்ல கேள்வி.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் பூக்களைக் கொண்டும் அலங்காரம் செய்யலாம். அப்படி இன்றைக்குச் செய்தது நாளைக்கு ஆகாது. என்றைக்கும் ஆகும் வகையில் என்றுமுள தீந்தமிழில் கந்தனுக்கு அலங்காரம் செய்துள்ளார் அருணகிரியார்.

இதை இந்தப் பதிவில் சொல்லியுள்ளேன்.
http://iniyathu.blogspot.com/2005/10/blog-post.html

அலங்காரம் ஏன் என்று கேள்வி வருகையில் வர வேண்டிய இன்னொரு கேள்வி...கோயில் ஏன்? ஏனென்றால் கோயிலில்தானே அலங்காரம் நடக்கிறது. நெஞ்சகமே கோயில். நினைவே சுகந்தம். அன்பே மஞ்சன நீர். பூசை கொள்ள வாராய் பராபரமே என்று சொல்கிறதே தமிழ்.

அப்படி நெஞ்சமாகிய கோயிலில் அருணகிரி முருகனுக்குச் செய்த அலங்காரமே கந்தரலங்காரம். அதை மலர் தொடுத்து கந்தம் தெளித்து சூடம் ஏற்றிச் செய்வதே அலங்காராம் எனக்கருதுவதும் சரியன்று என்பது என் கருதுவது. அவ்வளவே நான் அறிந்தது.

இதற்கும் மேலதிகத் தகவல்கள் இருக்கும். அவைகளை நான் அறியேன். ரவி வந்து விளக்குவார் என்று கேட்டுக்கொள்கிறேன்.

jeevagv said...

ஆகா, அம்மாவுக்குக்காத்தான் புது பதிவா?
மாதிவிப்பந்தலை எல்லாம் மறைக்கத் திட்டமா?;-)

ஏன் அலங்காரம்?
அகம் அது உருக அலங்காரம்,
இகம் அதில் பரம் அதைக்கண்டு இளக அலங்காரம்,
உணர்வினில் தூர்ந்து ஊறிட அலங்காரம்

எண்ணமெல்லாம் எம்பெருமான் நிறைய அலங்காரம்,
ஓம்காரத்தில் ஒடுங்க அலங்காரம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...//

வாங்க ஜீவா!
அலங்காரம் செய்ய சரியான நேரத்தில் வந்துட்டீங்க!

//ஆகா, அம்மாவுக்குக்காத்தான் புது பதிவா?//
தாய்(தாயார்) சொல்லைத் தட்டாதே! :)

//மாதிவிப்பந்தலை எல்லாம் மறைக்கத் திட்டமா?;-)//

இல்ல! இல்ல! இல்லவே இல்ல! :)

//ஏன் அலங்காரம்?
அகம் அது உருக அலங்காரம்,
இகம் அதில் பரம் அதைக்கண்டு இளக அலங்காரம்//

அருமை!
இகத்தில் பரம் காண, இகத்தையும் அகத்தையும் முழுக்காட்டி, அலங்காரம் செய்ய வேண்டும் அல்லவா? அருமையாச் சொன்னீங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆயில்யன் said...
விழிக்குத்துணைதிரு மென்மலர்பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத்துணை முருகா எனும் நாமங்கள்! -//

ஆமாம் ஆயில்ஸ் அண்ணா!
இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு! அதான் பதிவின் மேல் முகப்பில் ஒட்டிட்டேன்!

//அவ்வப்போது மிக கடினப்பட்டு படித்த பாடல்களில்//

ஆகா!
பாட்டைப் பதம் பிரிச்சா வெரி வெரி ஜிம்பிள் அண்ணாச்சி!

//விளக்கங்களோடு எதிர் பார்த்து காத்திருக்கிறேன்!//

அடுத்த பதிவுகளில் எளிமையாவே தாரேன்!
ஆயில்யனுக்கு, விசாகன்னா ரொம்ப பிடிக்கும் போல! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
அம்மா கேட்டதற்காகக் கந்தரலங்காரம் விளக்கம் சொல்ல வந்த ரவிக்கு நன்றி//

தாய்(தாயார்) சொல்லைத் தட்டாதே! :))

//அமுதாம் தமிழே இனிது. அதுவும் முருகன் மேலென்றால்? இனியென்றும் இனியதே//

இனிது இனிது இனியது இனிது!
இனியது எந்நாளோ?
ஏக்கத்துடன்
-கேஆரெஸ்!

//அந்த இனியது கேட்க இனி அதுவாகக் கூட்டம் இங்கே வரப் போகிறது. வாழ்த்துகிறேன்//

நன்றி ராகவா!
வாழ்த்தும் வணக்கமும் வடிவேல் முருகனுக்கே!

கோவி.கண்ணன் said...

இராஜ அலங்காரத்திலும் முருகன் சாரி ஸ்கந்தன் பூணுலை வெளியே தெரியும் படிதான் அணிந்திருக்கிறார். :) அவரே அப்படிங்கிற போது ஐயமார்கள் வெளியே தெரியும் படி போடுவதில் தப்பே இல்லை. :)

யார் யாருக்கு எது கண்ணில் படுமோ அதுதான் படும் ! கண்ணு போட்டுடாதிங்க !!!
:)

அப்பறம் எங்க ஊர் அருகில் எட்டுக்குடியில் திருநீற்றால் அலங்காரம் செய்திருப்பார்கள், மிக அழகாக இருக்கும் !

(நாங்களும் பதிவு தொடர்பாக பின்னூட்டுவோம்ல)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
அடம் பிடித்தது அன்று.
அடுத்த முறை உறுதியாகத் திடம் பிடித்ததும் நன்று//

சாப்பிட,
அசைவத் தேருக்கு ராகவன் இன்று வடம் பிடித்தது நன்றே! :))

//இங்கயே சொல்றேன். அடுத்த வாட்டி போன் பண்றப்போ சொல்லீருங்க.//

நீங்களே சொல்லிக்குங்க ஃபோனைப் போட்டு! எனக்குச் செலவாகும்! :))

//கலீல் கிப்ரான் சொன்னாராம்..ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணர்கையில் மந்தையை விட்டு விலகுகின்றன//

கலீல் தூக்கக் கலக்கத்தில் சொல்லிட்டாரு! அவரை மன்னிச்சிருங்க ஜிரா!

அதான் கலீல் கிப்ரானுக்கு நம்ம ஆண்டாள் சொல்லுறா!
கறவைகள் பின்சென்று கானம்(பாட்டு) "சேர்ந்து" உண்போம்!
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது!

//சிறியேன் நான் யாதும் அறியேன் என்று உணர்கையில் மந்தையை விட்டு விலகுகிறேன்//

சிறியரோ, பெரியரோ
அறியரோ, அரியரோ
எல்லாம் அவனுக்கு உரியர்!
அதனால்
கூடி இருந்து
குளிர்ந்தேலோ ரெம்பாவாய்! :)

//மந்தை போனாலும் எந்தையாம் கந்தை விட்டு விலகவில்லை//

விலகவும் முடியாது
விலக்கவும் முடியாது
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது!
கந்தையும் எந்தையும் களித்து பேசி இருந்ததும் இந்நாடே! :)))

//தாய் கேட்டேனும் முருகனுக்கு நீங்கள் எழுதனும்னு இருக்கு. அதான் இது. :-)//

நீ கேட்டும் எழுதுவேன் ராகவா! இதான் அது! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
இராஜ அலங்காரத்திலும் முருகன் சாரி ஸ்கந்தன் பூணுலை வெளியே தெரியும் படிதான் அணிந்திருக்கிறார். :)//

வாங்கோ கோவி-வாள் வாங்கோ!
நன்னா நோட் பண்ணி இருக்கேள்!
கோவி கண்ணுல படனுமே-ன்னு தான் கவலைப் பட்டுண்டு இருந்தோம்! இப்போ பட்டுடுத்து! பட்டுடுத்து! :))

//அவரே அப்படிங்கிற போது ஐயமார்கள் வெளியே தெரியும் படி போடுவதில் தப்பே இல்லை. :)//

கோவி அண்ணா
சினிமாவில் ராஜராஜ சோழன் கூட தங்கத்தால் போட்டிருப்பாரே!

சரி....பழனி முருகன் போட்டிருக்குறது பூநூலா? நான் ஏதோ அது மலை ஏறும் ரோப்-ன்னுல்ல நெனச்சேன்! ஹா ஹா ஹா! :))

//அப்பறம் எங்க ஊர் அருகில் எட்டுக்குடியில் திருநீற்றால் அலங்காரம் செய்திருப்பார்கள்//

எட்டுக்குடி முருகன் கொள்ளை அழகுண்ணா!
எட்டுக் குடி வேலவன் - மனதில்
நட்டுக் குடி வேலவன்!

//(நாங்களும் பதிவு தொடர்பாக பின்னூட்டுவோம்ல)//

KRS பதிவுல மட்டும்! :)))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கோவி அண்ணா
எட்டிக்குடியா எட்டுக்குடியா?

முருகன் மயில் மீது இருக்க, இரு புறம் மங்கையர் மருங்கே நிற்க, அழகோ அழகு!

கருவறையில் மயிலோடு இருக்கும் காட்சி வெகு சில ஆலயங்கள் தான்!
மொத்த சிலையின் எடையும், மயிலின் கால்களில் தாங்குவது போல் செய்யப்பட்டிருக்கும் எட்டிக்குடியில்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மீண்டும் @கோவி அண்ணா

எட்டிக்குடி திருப்புகழ் இந்தாங்க உங்களுக்காக

மைக்குழல் ஒத்தவை நீலோ மாலோ
அக்கண் இணைக்கு இணை சேலோ வேலோ
மற்றவர் சொற்றெளி பாலோ பாகோ-வடிதேனோ
....
....
முக்கணர் மெச்சிய பாலா சீலா
சித்தசன் மைத்துன வேளே தோளார்
மொய்த்த மணத்த துழாயோன் மாயோன்-மருகோனே

எச்சுரு திக்குளு நீயே தாயே
சுத்தவி றல்திறல் வீரா தீரா
எட்டிகு டிப்பதி வேலா மேலோர்-பெருமாளே

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
அவரது எண்ணம் நிறைவேற எனது வாழ்த்துகள். :-)//

ஹே! hip hip huurah!
சொன்னேன்-ல!
எங்க ராகவன் என்னைத் தட்ட மாட்டாரு! தமிழால் கட்டவே செய்வாரு!

//என்ன இருந்தாலும் அவரு உ.உ.வ கே.ஆர்.எஸ் ஆச்சே. வைணவ வாரியார்னு பட்டம் குடுக்கலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்//

பட்டமா?
மீ தி எஸ்கேப்!

வலையுலக வாரியார்-னா அது எங்க ஜிரா! ஜிரா! ஜிரா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ஜிரா

//அப்படி இன்றைக்குச் செய்தது நாளைக்கு ஆகாது. என்றைக்கும் ஆகும் வகையில் என்றுமுள தீந்தமிழில்//

ராகவா!
ஏன் அலங்காரம் - இது தான் கேள்வி!
எதால் அலங்காரம் - நீங்க சொன்னது!
இன்னொரு முறை வந்து இனியது பேசுங்க ப்ளீஸ்!

//நெஞ்சகமே கோயில். நினைவே சுகந்தம். அன்பே மஞ்சன நீர். பூசை கொள்ள வாராய் பராபரமே//

தாயுமானவரின் ஆலயத்தில் பராபரக் கண்ணி அலங்காரமா?
அருமை!

//அதை மலர் தொடுத்து கந்தம் தெளித்து சூடம் ஏற்றிச் செய்வதே அலங்காராம் எனக்கருதுவதும் சரியன்று//

செய்வ"தே" அலங்காரம்!
இந்த "தே" என்ற ஒற்றை எழுத்தால் சொன்னதால் ஓக்கே!

ஜிரா சொல்வது சரியே!
பூச்சூட்டி, நகை போட்டுச் செய்வது மட்டு"மே" அலங்காரம் அன்று!

மன மாலை
புன் நகை
தமிழ் மண கந்தம்
உள்ளத்தில் உண்மை ஒளி - கற்பூர தீபம்!

அடுத்த பதிவில் அலங்காரம் ஏன் என்று விளக்கி உள்ளேன்! பாருங்க!

கோவி.கண்ணன் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
@கோவி அண்ணா
எட்டிக்குடியா எட்டுக்குடியா?
//

எட்டுக்குடிதான்,

சுற்றிலும் சிங்காரவேலன், எண்கண் இன்னும் 8 கோவில்களுடன் ஒன்றானதால் அந்த பெயர் வந்திருக்கலாம். அது சிறிய கிராமம் தான் சித்திரை முழுநிலா திருவிழா தவிர்த்து மற்ற நாட்களில் (அவ்வளவு) கூட்டம் இருக்காது. கோவிலைச் சுற்றிமட்டுமல்ல இப்போதெல்லாம் கோவில் குளமே பச்சை பசேலென்று தான் இருக்கிறது. பழைய ஞாபகத்தில் எட்டுகுடி எப்போதும் ஊருக்குச் செல்லும் போதெல்லாம் விசிட் அடிப்பது வழக்கம். நாகையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது. வேளாங்கன்னி வழியாக சென்றால் அங்கிருந்து 10 கிலோ மீட்டர். திருவிழாவின் போது வெட்டிவேர் விற்பார்கள், வாங்கி வந்து பானை தண்ணீரில் போட்டுக் குடிக்க என்ன கமகம தெரியுமா ?

ஆட்டக்காவடி என்று ஒரு அலங்காரகாவடி எடுத்து ஆடுவாங்க 50 கிலோ எடை இருக்கும், 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் கூட ஆசையால் தூக்கி ஆடினேன். இறக்கியதும் மூச்சு வாங்கியது. கிட்டதட்ட 20 ஆண்டுகள் நடைபயணமாகவே திருவிழாவுக்கு முதல் நாள் செல்வோம். அலுப்பாக இருக்காது, அப்போதைய ஜாலி டிரிப்.

ஷைலஜா said...

முதல் வணக்கம் என்று பதிவு வந்த உடனே ஓட்டமா ஓடிவந்து முதல் பதிவு போட்ட ஒரு நல்ல+உயர்ந்த+ சிறந்த+ தங்கமான உள்ளத்தை அங்கே உங்க பின்னூட்டத்துல "அலங்காரம்னதும் முதல்ல வந்துட்டாங்க ஷைலு அக்கா"ன்னா சொன்னீங்க?:0 இருக்கு இதுக்கு !!! (ஹிஹி இப்போவும் லைட்டா அலங்காரம் பண்ணிட்டு வரவேண்டி இருந்ததினால் 27 பின்னூட்டம் ஓடிப்போச்சே!:))

முதல்ல..
ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனின் இது
போன்ற பதிவுகள் படிக்கும் தாய் சொற்படி நடப்பதற்கு ஒரு சபாஷ்!!

//காதலி அலங்காரம் பண்ணிக்கிட்டு வந்தா, சூப்பரா இருக்கும்! வச்ச கண்ணு வாங்காம பார்க்கலாம்!
"ஏய், இந்த ப்ளூ ஷேட்-ல, க்ரீன் பேட்டர்ன் போட்ட சாரீ-ல, நீ மயில் மாதிரி மின்னுறப்பா"-ன்னு வழியலாம்! அவளும் சந்தோசப்படுவா//

நல்லாவே வழியறீங்க ம்ம்ம்...ஆன்மீகப்பதிவு நினைவிருக்கட்டும்:):)

//எதுக்கு இறைவனுக்கு அலங்காரம் பண்ணனும்? சும்மா அப்பிடியே கும்பிட்டாப் போதாதா?
மலர் அலங்காரம், நகை அலங்காரம், உடை அலங்காரம், இசை அலங்காரம், பாட்டு அலங்காரம், தமிழ் அலங்காரம்...இம்புட்டும் எதுக்கு?//

எதுக்குன்னா அழகுக்குதான் அழகு செய்து பார்க்க முடியும். அழகைக்காணும்போதே நம் மனம் அழகாகிறது. அழகு என்பது முழுமையானது. அதில் களங்கம் வராது, அரங்கனின் மோகன(மோகினீ அல்லவாம்):) அலங்காரம் என்று ஒரு திருநாள் அன்று அரங்கநகரமே திரண்டு அலங்கார நகரமாகிவிடும்!!அடடா இங்கயும் அரங்கனா? பாருங்க ரவி எப்படியோ வந்துவிட்டார்,! ஆமா கந்தனுக்கு நீங்கள் செய்யும் அலங்காரத்தைப்பார்க்கத்தான் வந்திருக்கிறார்... ஆரம்பிங்க காணக்காத்திருக்கிறோம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
வெட்டிவேர் விற்பார்கள், வாங்கி வந்து பானை தண்ணீரில் போட்டுக் குடிக்க என்ன கமகம தெரியுமா ?//

கோவிக்கும் வெட்டிக்கும் அப்பவே லிங்க்கா? :))

//ஆட்டக்காவடி என்று ஒரு அலங்காரகாவடி எடுத்து ஆடுவாங்க 50 கிலோ எடை இருக்கும், 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் கூட ஆசையால் தூக்கி ஆடினேன். இறக்கியதும் மூச்சு வாங்கியது//

அப்பவே காவடி தூக்கி இருக்கீங்க! அந்தப் புண்ணியம் தான் இம்புட்டு பிரபல பதிவரா ஆயிருக்கீங்க கோவி அண்ணா! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
முதல் வணக்கம் என்று பதிவு வந்த உடனே ஓட்டமா ஓடிவந்து முதல் பதிவு போட்ட ஒரு நல்ல+உயர்ந்த+ சிறந்த+ தங்கமான உள்ளத்தை//

ரிப்பீட்டே!

//அங்கே உங்க பின்னூட்டத்துல "அலங்காரம்னதும் முதல்ல வந்துட்டாங்க ஷைலு அக்கா"ன்னா சொன்னீங்க?:0 இருக்கு இதுக்கு !!!//

இதுக்கும் ரிப்பிட்டே! :)

//(ஹிஹி இப்போவும் லைட்டா அலங்காரம் பண்ணிட்டு வரவேண்டி இருந்ததினால் 27 பின்னூட்டம் ஓடிப்போச்சே!:))//

அக்காவின் செல்லத் தம்பி, ஒரு உண்மை விளிம்பி! :)

//தாய் சொற்படி நடப்பதற்கு ஒரு சபாஷ்!!//

ஹிஹி!
ப்ளீஸ் டெல் திஸ் டு மை ஜிஸ்டர்! -தங்கச்சி! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மீண்டும் @ ஷைலு அக்கா
//நல்லாவே வழியறீங்க ம்ம்ம்...ஆன்மீகப்பதிவு நினைவிருக்கட்டும்:):)//

அட, ஆன்மீகப் பதிவுன்னா வழியக் கூடாதா? இந்த முருகன் வள்ளி கிட்ட எப்படி வழிஞ்சாரு! நானும் ஒரு குட்டி முருகனாக்கும்! :)

//எதுக்குன்னா அழகுக்குதான் அழகு செய்து பார்க்க முடியும்//

ஹூம்!
இப்படி நான் யோசிக்கவே இல்லையே! Dankees-ka!

//அடடா இங்கயும் அரங்கனா? பாருங்க ரவி எப்படியோ வந்துவிட்டார்//

அரங்கன் வாராத இடமும் உண்டோ அக்கா?
அருணகிரி திருப்புகழில் பாதி புகழ் முருகனுக்குன்னா, மீதி புகழ் மாலவனுக்கு அல்லவா பாடி இருப்பாரு பல இடங்கள்-ல!

//ஆரம்பிங்க காணக்காத்திருக்கிறோம்!//

ரெடி, ஸ்டார்ட் த மீஜீக்! அடுத்த செவ்வாய்! :)

குமரன் (Kumaran) said...

கதை, திரைக்கதை, வசனம்: கே.ஆர்.எஸ். நல்லாத் தான் இருக்கு. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//
குமரன் (Kumaran) said...
August 2, 2008 2:52 AM
//

என்ன குமரன்?
சிவராத்திரி மாதிரி பதிவு ராத்திரி விரதமா? :))

//கதை, திரைக்கதை, வசனம்: கே.ஆர்.எஸ். நல்லாத் தான் இருக்கு. :-)//

ஹிஹி!
Fact is fancier than fiction :)

குமரன் (Kumaran) said...

சுப்ரமணியபுரம் பார்த்துக்கிட்டே இருந்தோம். படம் கொஞ்சம் போரடிக்கத் தொடங்கிச்சு. பதிவுகள் படிக்கத் தொடங்கிட்டேன். :-)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP